மழை மேகம்
மழை மேகம் நீயடா…
உன் தேசம் நானடா…
மடி மேலே சேர்கிறாய் நீ தூறலா…
புல்லாங்குழல் நானடா…
புயல் போலவே நீயடா…
இசையே இசையாய் இசைவேனடா…
மழை மேகம் நீயடா…
உன் தேசம் நானடா…
மடி மேலே சேர்கிறாய் நீ தூறலா…
புல்லாங்குழல் நானடா…
புயல் போலவே நீயடா…
இசையே இசையாய் இசைவேனடா…
குறு குறு கண்ணால்…
என்ன கொன்ன திருடா நீ யாரு…
துரு துரு பொண்ணா…
முன்ன நின்னா சருகானேன் பாரு…
இறுக்கம் தளர்த்து பூவென எனை கிடைத்து…
மயக்கம் கலைக்க நீரென முத்தம் தெளித்து…
பறக்கிறேன் நான் அழைத்துபோ நீ இன்னும் மேலே…
ஏளற நாங்கத்தான் ஊருக்குள்ள…
நாங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல…
கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்ல…
எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல…
வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது…
கண்கள் இருளுதடி…
என் மொத்த புலன்களும் மெல்ல…
எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி…
மழைக்குள்ளே நனையும்…
ஒரு காற்றை போல அல்லவா மனம்…
உன்னை பார்க்கும் போதில்…
எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்…
யார் இவனோ…
எங்கிருந்து வந்தப்புயல்…
யார் இவனோ…
கண்ணில் இரண்டும் கோடை வெயில்…
யார் இவனோ தெரியவில்லை…
கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன்…
உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன்…
விண்ணோடு விண்ணோடு பறந்துவிட்டேன்…
எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே…
நீயே தனியாய்…
உன் தோளே துணையாய்…
நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு…
நாளை விடியும்…
உன்னால் முடியும்…
மோதும் தடையை உடைத்தே தூளாக்கு…
உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…
பூவே உன் வாசம் இன்றி நான் ஏதடி…
கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றுடி…