மழைக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாம்.சி.எஸ்ஹரிசரண் & ஸ்ரேயா கோஷல்சாம்.சி.எஸ்புரியாத புதிர்

Mazhaikkulle Song Lyrics in Tamil


BGM

பெண் : மழைக்குள்ளே நனையும்…
ஒரு காற்றை போல அல்லவா மனம்…
உன்னை பார்க்கும் போதில்…
எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்…

பெண் : மழைக்குள்ளே நனையும்…
ஒரு காற்றை போல அல்லவா மனம்…
உன்னை பார்க்கும் போதில்…
எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்…

பெண் : நீயே என் உயிரில் ஆகும்…
ஒரு புதிய ராகம் தானடா…
ஏன் ஏன் சிறகு நீள்கிறது…
பார்க்க தோணுதே ஏனடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பூங்காற்றில் அடி உன் வாசம் அதை…
தேடி தேடி தொலைந்தேன்…
நீ மீண்டு வர நான்தானடி…
என் வாழும் வாழ்வை கொடுத்தேன்…

BGM

பெண் : யாரோ இவன் யாரோ…
தீரா நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட…
யாரோ இவன் யாரோ…
கானா தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட…

ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ…
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ…
ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ…
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ…

பெண் : நீ ஏன் கரை புரண்ட ஒரு ஆற்றை போல…
என்னில் சேர்கிறாய்…
தீயில் கருகிப்போகும் ஒரு…
பஞ்சின் நிலையில் என்னை ஆக்கினாய்…

ஆண் : ஓஓ… கண்ணே உன்னை கண்டாலே…
முன்னே நெஞ்சில் காயங்கள்…
பெண்ணே வலிக்குதே… ஹே ஹே…

ஆண் : ஓஓ… கண்ணே உன்னை கண்டாலே…
முன்னே நெஞ்சில் காயங்கள்…
பெண்ணே வலிக்குதே… ஹே ஹே…

BGM

பெண் : நீயும் இனி நானும் நாமாய் சேரும்…
கோடி இன்பங்கள் கூடனும்…
தேடும் கரை தேடும் அலைபோல்…
இன்பம் என்றும் நம் வாழ்வை தேடணும்…

ஆண் : ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ
மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ…
ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ
மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ…

ஆண் : ஓஓ… கண்ணே உன்னை கண்டாலே…
முன்னே நெஞ்சில் காயங்கள்…
பெண்ணே வலிக்குதே… ஹேஹே…

ஆண் : ஓஓ… கண்ணே உன்னை கண்டாலே…
முன்னே நெஞ்சில் காயங்கள்…
பெண்ணே வலிக்குதே… ஹேஹே…

BGM


Notes : Mazhaikkulle Song Lyrics in Tamil. This Song from Puriyatha Puthir (2017). Song Lyrics penned by Sam.C.S. மழைக்குள்ளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading