வெள்ளை கனவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரஞ்சித் ஜெயக்கொடிஹரிஹரன் & ஹரிணிசாம்.சி.எஸ்புரியாத புதிர்

Vellai Kanavu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது…
கண்கள் இருளுதடி…
என் மொத்த புலன்களும் மெல்ல…
எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி…

குழு : அடி பெண்ணே பெண்ணே பெண்ணே…

ஆண் : கண் முன்னே தேவதை…
உயிர் எங்கும் பெரும் வதை…

பெண் : பேசி தீர்த்த பின்னும்…
பேச வார்த்தை இன்னும் தேடுதே…
இனி பேச ஏதும் இன்றி…
கேட்க ஏதும் இன்றி தொடருதே…

குழு : அடி பெண்ணே பெண்ணே பெண்ணே…

ஆண் : கண் முன்னே தேவதை…
உயிர் எங்கும் பெரும் வதை…

ஆண் : வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது…
கண்கள் இருளுதடி…
என் மொத்த புலன்களும் மெல்ல…
எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி…

—BGM—

ஆண் : மயக்கும் பார்வையில் பாதை மறந்தும்…
இந்த பயணம் தொடருதடி…
உன் மந்திர புன்னகையில் என் மனம்…
சொக்கி சொக்கி ஸ்வர்கம் தெரியுதடி…

பெண் : புத்தம் புது மழை என்னை நனைத்தது…
நெஞ்சம் மட்டும் வேர்க்கும் மாயம் என்ன…
நித்தம் இந்த மழை என்னை நனைத்திட…
ஏனோ உள்ளம் ஏங்கும் நியாயம் என்ன…

பெண் : இரு கரங்கள் இடையே இருக்க இதமாகுதே…
நீ விழுங்கும் சொற்கள் காதின் ஓரம் கனமாகுதே…

குழு : அடி பெண்ணே பெண்ணே பெண்ணே…

ஆண் : கண் முன்னே தேவதை…
உயிர் எங்கும் பெரும் வதை…

பெண் : உன் மூச்சு காற்று பட்டு…
ரோமா கூட்டம் மொத்தம் சிலிர்க்குதே…
உன் தேக சூட்டில் எந்தன் உதடு…
கொஞ்சம் முத்தம் உதிர்க்குதே…

ஆண் : வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது…
கண்கள் இருளுதடி…
என் மொத்த புலன்களும் மெல்ல…
எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி…

குழு : அடி பெண்ணே அடி பெண்ணே…
அடி பெண்ணே அடி பெண்ணே…

—BGM—


Notes : Vellai Kanavu Song Lyrics in Tamil. This Song from Puriyatha Puthir (2017). Song Lyrics penned by Ranjit Jeyakodi. வெள்ளை கனவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading