தோழி
யாரோடும் காணாத தூய்மையை…
உன்னில் நான் காண்கிறேன்…
முன் என்றும் இல்லாத ஆசைகள்…
உன்னாலே நான் கொள்கிறேன்…
சொல்லடி தோழி தோழி…
என்னருந்தோழி சொல்லடி…
யாரோடும் காணாத தூய்மையை…
உன்னில் நான் காண்கிறேன்…
முன் என்றும் இல்லாத ஆசைகள்…
உன்னாலே நான் கொள்கிறேன்…
சொல்லடி தோழி தோழி…
என்னருந்தோழி சொல்லடி…
ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே…
அதிரும் பறையாய் இதயம் ஆடுதே…
உந்தன் கை வீசிடும்…
பொய் ஜாடை என்னை…
ஏதென் தோட்டத்தில் வீசுதே…
கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…
அடி ஒவ்வொரு ராப்பொழுதும்…
ஒன அப்படி நான் ரசிச்சேன்…
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே…
போதும் போதும் களவு பார்வை…
பூவை மோதும் உனது கண்ஜாடை…
காற்றில் ஆடும் அழகு தோகை…
உன்னை சேரும் உனது கைப்பாவை…
கதை… ஒரு வரி கதை…
தூவுது பார் இங்கே சிறு விதை…
விதை அன்பெனும் விதை…
மலரென பூத்தால்தான் கதை… கதை…
சேர்த்த ஆசைகள் எத்தனை…
குவித்த கனவுகள் எத்தனை…
ஒளித்த ரகசியம் எத்தனை…
விட்டு சென்றாய் அத்தனை…
உடலும் மண்ணில் மங்குதே…
கேள்வி மட்டும் தங்குதே…
மரகத மாலை நேரம்…
மமதைகள் மாய்ந்து வீழும்…
மகரந்த சேர்க்கை காதல்தானா…
இரவினில் தோற்ற தீயை…
பருகிட பார்க்கும் பார்வை…
வழிவது காதல் தீர்த்தம்தானா…
வீரன் உன் கண்ணுபட…
ஒத்தையுல சரிஞ்சிபுட்டேன்…
என்னடி பொன்னியம்மா…
ஏன்டி சொல்லடி பொன்னியம்மா…
அம்முகுட்டியே அடியே…
உன்ன எண்ணி கலஞ்சேன்டி…
குட்டி குட்டியா கவித…
சொல்லி காட்டு கொலஞ்சேன்டி…