அழகழகா தொடுகிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார்டி. இமான்கருப்பன்

Azhagazhaga Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அழகழகா தொடுகிறதே மல காத்து…
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து…

ஆண் : கருங்கல்லான போதிலுமே…
சிலை என்றாகும் காதலிலே…
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே…
மழை சிந்தாதோ மேகங்களே…

ஆண் : என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே…
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே…

ஆண் : அழகழகா தொடுகிறதே மல காத்து…
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து…

—BGM—

ஆண் : வெண்ணிலா என்பது வானை நீங்கிட எண்ணிடுமோ…
எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் மங்கிடுமா…

ஆண் : யாருது வாசல் என்று பார்த்து…
சேருமோ அதிகாலை…
காதலை சேர ஜாதகம் கேட்க…
ஓடுமோ அந்திமாலை…

ஆண் : கடவுள் பேசும் மொழியே காதல்…
அதுதானே உலகின் மொழியே…

ஆண் : அழகழகா தொடுகிறதே மல காத்து…
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து…

—BGM—

ஆண் : அன்பு அதை நெஞ்சில் ஏந்தும் போது உண்மையிலே…
அத்தனை இன்பம் சேர்ந்திடாதோ கைகளிலே…

ஆண் : தாயவள் பாசம் தந்தையின் நேசம்…
சேர்ந்ததால் கருவானோம்…
ஆசையில் பூக்கும் பூவெனெதானே…
யாருமே உருவானோம்…

ஆண் : மனம்போல் வாழ உறவே ஊஞ்சல்…
கயிறாக அசையும் உயிரே…

ஆண் : அழகழகா தொடுகிறதே மல காத்து…
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து…

ஆண் : கருங்கல்லான போதிலுமே…
சிலை என்றாகும் காதலிலே…
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே…
மழை சிந்தாதோ மேகங்களே…

ஆண் : என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே…
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே…

—BGM—


Notes : Azhagazhaga Song Lyrics in Tamil. This Song from Karuppan (2017). Song Lyrics penned by Yugabharathi. அழகழகா தொடுகிறதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading