செங்கதிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார்டி. இமான்கடைக்குட்டி சிங்கம்

Sengathire Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…
செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…

ஆண் : உயிர் வேதனை தரும் வார்த்தையை…
உறவே நீ பேசுவதோ…
குயில் வீட்டையே குடை சாய்த்திட…
புயல் காற்று வீசுவதோ…

ஆண் : விதியின் ஆட்டம் ஓயாதே…
எதுவும் விளையாட்டே வாடாதே…

ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…

—BGM—

ஆண் : அன்னை மடி மீது தூங்கையிலே…
தொல்லைகளும் ஏதடா… ஆ…
தந்தை நம்மை தாங்கும் வேளையிலே…
கைகளிலே வானடா…

ஆண் : தெரு மண்ணோடு நாம் நடந்தாலுமே…
அழுக்கில்லாமலே இருந்தோமடா…
நிலை கண்ணாடியில் சிறு கீறல் போல்…
பல துண்டாயின்று உடைந்தோமடா…

ஆண் : வயதாகும் போது நாமே…
வழி மாறி போகிறோமே…

ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…

—BGM—

ஆண் : மொட்டு விடும் பூவை காட்டுவது…
எப்பொழுதும் வாசமே…
உள்ளவரை வாழ தேவை எது…
உண்மையிலே பாசமே…

ஆண் : எதை சொன்னாலுமே தவறாகவே…
பொருள் கொள்வோரிடம் நலம் ஏதடா…
உறவில்லாமலே ஒரு ஜீவனும்…
உயிர் வாழாதென உணர்வோமடா…

ஆண் : வயலோடு வாழ நாமே…
வரப்பாக மாறுவோமே…

ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…


Notes : Sengathire Song Lyrics in Tamil. This Song from Kadaikutty Singam (2018). Song Lyrics penned by Yugabharathi. செங்கதிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading