ஒரே ஒரு ஊரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர் & ஜொனிடா காந்திஅனிருத் ரவிசந்தர்கோலமாவு கோகிலா

Orey Oru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு…
ஒரு அடி கூட தாங்காதே…
ஓர் இரவில் ஒரு இடி வீட்டில் இறங்கியதே…
ஒரே நொடியில் வீடும் கருகியதே…

ஆண் : அந்நாளில் ஒரே ஒரு ஓடை மேலே…
ஒரு ஓடம் மிதந்திருக்க…
ஒரே ஒரு வெள்ளம் வந்து அடித்து போனதே…

ஆண் : ஒரே ஒரு கூட்டினுள்ளே ஒரு கூட்டம் ஒளிந்திருக்க…
ஒரு கிளை முறிந்ததாலே கதை முடிந்ததே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் & பெண் : மூடியதெல்லாம்…
பெண் : இனி மீண்டும் என்று திறக்குமோ…
ஆண் & பெண் : வேண்டியதெல்லாம்…
பெண் : இனி எப்போது நடக்குமோ…

ஆண் & பெண் : என் ஆசை ஒன்றே…
பெண் : என் கனவும் ஒன்றே ஒன்றுதான்…
ஆண் & பெண் : ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே…
பெண் : போதும்…

BGM

ஆண் : சத்தமாய் நான் அழுதிடதான்…
ஆண் & பெண் : இங்கு அத்தனையும் யுத்தமாக மாறுதோ…
ஆண் : மொத்தமாய் நான் முடிந்திடதான் இன்று…
ஆண் & பெண் : என்னை மீறி என்னனவோ ஆகுதோ…

ஆண் : பாவமாய் நான் புதைந்திட தான்…
ஆண் & பெண் : ஒரு சுழல் என்னை சுத்தி சுத்தி சீண்டுதோ…
ஆண் : கோவமாய் நான் கிடந்திடதான்…
ஆண் & பெண் : பல புதிர்களும் என்னை தேடுதோ…

ஆண் & பெண் : ஒரு பனி மூட்டம் இன்று புகை என தோன்றியதே…
ஒரு முயல் கூட்டம்…
ஆண் : புயல் நடுவில் திணறுதே…

ஆண் & பெண் : வாடியதெல்லாம்…
பெண் : இனி மீண்டும் என்று மலருமோ…
ஆண் & பெண் : தேடியதெல்லாம்…
பெண் : இனி எப்போது கிடைக்குமோ…

ஆண் & பெண் : என்னாசை ஒன்றே…
பெண் : என் கனவும் ஒன்றே ஒன்றுதான்…
ஆண் & பெண் : ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே…

ஆண் & பெண் : மூடியதெல்லாம்…
பெண் : இனி மீண்டும் என்று திறக்குமோ…
ஆண் & பெண் : வேண்டியதெல்லாம்…
பெண் : இனி எப்போது நடக்குமோ…

ஆண் & பெண் : என் ஆசை ஒன்றே…
பெண் : என் கனவும் ஒன்றே ஒன்றுதான்…
ஆண் & பெண் : ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே…
பெண் : போதும்…


Notes : Orey Oru Song Lyrics in Tamil. This Song from Kolamaavu Kokila (2018). Song Lyrics penned by Vignesh Shivan. ஒரே ஒரு ஊரில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading