Tag Archives: உமா தேவி

ஓ சாத்தியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஜிப்ரான் & அர்மான் மாலிக்ஜிப்ரான்தீரன் அதிகாரம் ஒன்று

O Sathiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…

ஆண் : ராசாத்தியே ராசாத்தியே அன்பே…
என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே…
மழை காலம் கூட தீயை மூட்டுதே…

BGM

ஆண் : ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…

ஆண் : எண்ணத்தில் உன்னையே காட்சியாய் மாற்றினேன்…
என்னையே என்னை நான் தேற்றுவதா…
வார்த்தையில் ஆயிரம் மௌனங்கள் சேர்க்கின்றேன்…
மௌனத்தை மௌனமே மாற்றிடுமா…

ஆண் : ராசாத்தியே ராசாத்தியே அன்பே…
என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே…
மழை காலம் கூட தீயை மூட்டுதே…

குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…

குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…

BGM

ஆண் : ஒரு மாலை சூரியன் தீர்ந்திடுமா…
அந்த காலை தாமரை சாய்ந்திடுமா…
சிறு பிரிவுகள் உறவினை மாற்றிடுமா…
அந்த நிலவினை இரவு விழுங்கிடுமா…

ஆண் : உன் சிரிப்பின் நினைவில்…
உறங்கும் விழிகள் உறக்கம் தழுவவில்லை…

ஆண் : ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…

குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…

குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…


Notes : O Sathiye Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Uma Devi. ஓ சாத்தியே பாடல் வரிகள்.


கோரனாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிதேவா, சந்தோஷ் ஹரிஹரன் & அலெக்சாண்டர் பாபுஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Koranaaru Song Lyrics in Tamil


BGM

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…

BGM

ஆண் : கொள்ளையாடும் கூட்டத்த…
கொள்ளும் பகை கூட்டத்த…
கொடல உருவி மாலையாபோட்டு…
காவகாத்து நின்னாரு…

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…

BGM

ஆண் : கோட்டை கோபுரம் தந்தாலும்…
கோடி சுகத்த தந்தாலும்…
சேனை காக்கும் வீர கோரன்…
உன்ன போல வேறாரு…

ஆண் : கூட்ட கலைக்கும் கூட்டங்கள்…
சூழ்ச்சி செய்துதான் வந்தாலும்…
ஆழி பேரலையா போலெழுந்து…
ஆடும் தாண்டவ கோன் யாரு…

குழு : கோரனாரு எங்கள் கோரனாரு…

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…

ஆண் : கொள்ளையாடும் கூட்டத்த…
கொள்ளும் பகை கூட்டத்த…
கொடல உருவி மாலையாபோட்டு…
காவகாத்து நின்னாரு…

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…

BGM


Notes : Koranaaru Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Uma Devi. கோரனாரு பாடல் வரிகள்.


வீரத் துரந்தரா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிகானா பாலா, லாரன்ஸ் ராமு & பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்கபாலி

Veera Thurandhara Song Lyrics in Tamil


BGM

ஆண் : வீரத் துரந்தரா…
எமை ஆளும் நிரந்தரா…

BGM

ஆண் : வீரத் துரந்தரா…
எமை ஆளும் நிரந்தரா…
பூமி அறிந்திரா…
புது யுகத்தின் சமர் வீரா…

ஆண் : உன் நிலை கண்டு…
இன்புற்றார்க்கு இரையாகாமல் அன்புற்றார் அழ…
அடிமைகள் எழ…
அவர் துன்புற்ற துயரங்கள் நீக்கும்…

BGM

ஆண் : வீரத் துரந்தரா…
எமை ஆளும் நிரந்தரா…

குழு : கபாலி கம்மிங் கேன் யூ ஃபீல் தி கிரௌன்ட் ஷேக்…
லைக் அன் எர்த் குயுக் நோ வேர் டு ரன்…
இட்ஸ் டு லேட் ரியல் கேங்ஸ்டஸ் ஃப்ரம் தி சிட்டி…
டு தி எஸ்டேட் ரியல் கேங்ஸ்டஸ்…

குழு : செபரேட் குட் ஃப்ரம் தி கிரேட் கீபிங் இட் ஸ்ட்ரேட்…
ஓ ஜி சின்ஸ் தி 80 ஸ் அன் டச்சபுள் ஏ கே ஏ கபாலி…
ஃபைடிங் ஃபார் வாட்ஸ் ரைட் ஸ்டான்டிங் அப் ஃபார்…
தி வீக் லுக்கிங் ஃப்ளை கிக்கிங் ஆஸ் இன் எ சூட் அன்ட் ஹாக்கி ஸ்டிக்…

ஆண் : டும் டும் டும் என வெடித்திடும் பகை…
களத்தினில் ஆட வெறித்திடும் குகை…

ஆண் : உடைகளை வழங்கிடும் வழி வழித் துணை…
வலிகளில் முளைத்திடும் விடு விடுதலை…
பகைவர் ஒளிஞ்சிடும் வீரன் நீ…
நிலம் பெயர்ந்திடும் உன் சொல் பெயருமா…

ஆண் : உன் நிலை தாண்டியே மலை உயருமா…
வழி காட்டும் தலைவனே இனி அறம் உறங்குமா…

BGM

ஆண் : வீரத் துரந்தரா…
எமை ஆளும் நிரந்தரா…

BGM

ஆண் : உரிமை யாழ் மீட்டினான்…
உணர்வால் வாள் தீட்டினான்…
உலகில் யார் என காட்டினான்…

ஆண் : வீரத் துரந்தரா…
எமை ஆளும் நிரந்தரா…

ஆண் : தடைகள் அறுந்திட…
தலைகள் நிமிர்ந்திட…
கடையன் படையன் ஆகினான்…

ஆண் : வீரத் துரந்தரா…
எமை ஆளும் நிரந்தரா…

குழு : கபாலி ஒரிஜினல் கேங்ஸ்டா ஸிம்ப்ரெ பெலிக்ரோஸோ…
ஆண் : கூர் விழிப் பார்வை…

குழு : மேக் வே ஃபார் தி பீப்புல்ஸ் சாம்பியன்…
ஆண் : கொளுத்திடும் தீயை…

குழு : கபாலி ஒரிஜினல் கேங்ஸ்டா ஸிம்ப்ரெ பெலிக்ரோஸோ
ஆண் : அடிமைகள் வாழ்வை…

குழு : மேக் வே ஃபார் தி பீப்புல்ஸ் சாம்பியன்…
ஆண் : சீர் அமைத்திடும் தானாய்…

BGM


Notes : Veera Thurandhara Song Lyrics in Tamil. This Song from Kabali (2016). Song Lyrics penned by Uma Devi. வீரத் துரந்தரா பாடல் வரிகள்.


Nee Ennai Mannipaya Song Lyrics in Tamil

நீ என்னை மன்னிப்பாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஹரிஷ் ராகவேந்திராகண்ணன் நாராயணன்ரத்தம்

Nee Ennai Mannipaya Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ என்னை மன்னிப்பாயா…
நான் வாழும் வாழ்க்கைக்கு இருள்தான் பொருளா…
யார் செய்த பாவங்களும்…
நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா…

ஆண் : நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்…
என் விழியில் நீ புதைந்தாய்…

BGM

ஆண் : பொய்யும் மெய்யும் என்னை சூளுதே…
தனிமை தீயில் எண்ணம் மூழ்குதே…

ஆண் : உனை நான் ஒரு நாள் தொலையும் வாழ்வில்…
காணும் நொடிதான் வருமா…
நெஞ்சில் நஞ்சாய் படரும் பிரிவில்…
துயரம் இனியும் தருமா…

ஆண் : நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்…
என் விழியில் நீ புதைந்தாய்…

ஆண் : ஒளி இல்லா நாட்கள் ஓடுதே…
கண்கள் எங்கும் உன்னை தேடுதே…

ஆண் : தொலைவில் நின்று பார்க்கும்…
வரத்தை தந்தால் கூட போதும்…
ஓடும் உதிரம் உந்தன் பெயரை…
சொல்லி சொல்லி வடியும்…

ஆண் : நீ என்னை மன்னிப்பாயா…
நான் வாழும் வாழ்க்கைக்கு இருள்தான் பொருளா…
யார் செய்த பாவங்களும்…
நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா…

ஆண் : நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்…
என் விழியில் நீ புதைந்தாய்…


Notes : Nee Ennai Mannipaya Song Lyrics in Tamil. This Song from Raththam (2023). Song Lyrics penned by Uma Devi. நீ என்னை மன்னிப்பாயா பாடல் வரிகள்.


அம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசித் ஸ்ரீராம்ஜேக்ஸ் பெஜாய்கணம்

Amma Song Lyrics in Tamil


ஆண் : அம்மா என் அம்மா…
நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா…
ஓ… அம்மா என் அம்மா…
என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா…

ஆண் : ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே…
பேசிட கூடுமோ தெய்வம் இங்கே…

ஆண் : ஒரு முறை என்னை பார் அம்மா…
கடவுளின் கண்கள் நீ அம்மா…
காவலில் உன் போல் ஏதம்மா…
உன் போல் அம்மா யார் அம்மா…

ஆண் : விரல்களை பிடித்திடும் போது…
கிடைக்கிதே பிரபஞ்சமே…
தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா…

ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா…
தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா…
தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா…

BGM

ஆண் : செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட…
ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட…
காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட…
எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா…

ஆண் : நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே…
நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே…
நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே…
உனை தாண்டி உலகம் ஏதிங்கே…

ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா…
கடவுளின் கண்கள் நீ அம்மா…
காவலில் உன் போல் ஏதம்மா…
உன் போல் அம்மா யார் அம்மா…

ஆண் : உன் நினைவுகள் இருப்பதுனாலே…
இருக்கிறேன் உயிருடன்…
தாயே உன் நினைவில் வாழ்ந்தால் போதும்…

BGM

ஆண் : விரல்களை பிடித்திடும் போது…
கிடைக்கிதே பிரபஞ்சமே…
விரல்களை பிடித்திடும் போது…
கிடைக்கிதே பிரபஞ்சமே…

ஆண் : விரல்களை பிடித்திடும் போது…
கிடைக்கிதே பிரபஞ்சமே…
தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா…

ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா…
தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா…
தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா…

ஆண் : அம்மா…


Notes : Amma Song Lyrics in Tamil. This Song from Kanam (2022). Song Lyrics penned by Uma Devi. அம்மா பாடல் வரிகள்.


ஹே பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசித் ஸ்ரீராம், அலிஷா தாமஸ் & ஐஸ்வர்யா குமார்சந்தோஷ் தயாநிதிகட்டப்பாவ காணோம்

Hey Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் நெஞ்சில் தேன் ஊற்றுதே…
காற்றில் மெல்ல யாழ் மீட்டுதே…

ஆண் : கண்ணாளா நீ காதல் பச்ச குத்த…
நெஞ்செல்லாம் பஞ்சாகி போனதென்ன…
காற்றோடு காற்றாகும் காற்றாடி போல்…
காதல் உன்னோடுதான்…

ஆண் : ஹே பெண்ணே பெண்ணே…
உன்னை கண்ட பின்னே நேரம்…
நல்ல நேரம் என்று தோன்றுதே…

ஆண் : ஓ… மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே…
உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே…

ஆண் : அடிக்கற வெயில போல் உத்து பாக்குற…
அடிக்கடி குளிர போல் வந்து ஈர்க்குற…

ஆண் : வேரெல்லாம் பூக்கிறதே…
பூவெல்லாம் வோ்கிறதே…
கோளாறு இதயத்திலே…
காதல் தித்திக்குதே…

BGM

பெண் : காதில் மெல்ல காதல் சொல்லி…
காற்றில் ஏற்றி என்ன கூட்டிப் போகிற…
நூறு காலால் நெஞ்சம் ஓட…
காட்டு தீயாய் என்னை பத்த வைக்குற…

ஆண் : மா மழையை போல்…
தேன் பொழிந்தாயே…
மீன் கண்ணால ஊன் கலந்தாயே…

ஆண் : யே… பெண்ணே பெண்ணே…
உன்னை கண்ட பின்னே…
நேரம் நல்ல நேரம் என்று தோன்றுதே…

பெண் : காற்றினிலே வரும் கீதம்…
காற்றினிலே காற்றினிலே வரும் ஓ கீதம்…

ஆண் : ஹே… பெண்ணே பெண்ணே…
உன்னை கண்ட பின்னே நேரம்…
நல்ல நேரம் என்று தோன்றுதே…

ஆண் : ஓ… மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே…
உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே…

ஆண் : அடிக்கற வெயில போல் உத்து பாக்குற…
அடிக்கடி குளிர போல் வந்து ஈர்க்குற…

ஆண் : வேரெல்லாம் பூக்கிறதே…
பூவெல்லாம் வோ்கிறதே…
கோளாறு இதயத்திலே…
காதல் தித்திக்குதே…

BGM


Notes : Hey Penne Song Lyrics in Tamil. This Song from Kattappava Kaanom (2017). Song Lyrics penned by Uma Devi. ஹே பெண்ணே பாடல் வரிகள்.


ரயிலின் ஒலிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிபிரதீப் குமார் & சக்திஸ்ரீ கோபாலன்கோவிந்த் வசந்தாBlue Star

Railin Oligal Song Lyrics in Tamil


ஆண் : ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே…
அதிரும் பறையாய் இதயம் ஆடுதே…

ஆண் : உந்தன் கை வீசிடும்…
பொய் ஜாடை என்னை…
ஏதென் தோட்டத்தில் வீசுதே…

ஆண் : உன் ஊர் தாண்டிடும்…
ரயில் பாலம் மேல்…
என் பூமி முடிந்து விடுதே…

BGM

ஆண் : என் தாயோடும் கூறாத…
வார்த்தைக்குள் நான் நீந்துறேன்… காந்துறேன்…

பெண் : கனாக்காணும் போர்வைக்குள்…
காலத்த அடைகாக்குறேன்…

ஆண் & பெண் : தேக்குறேன்…

பெண் : மண்மேலோடும் மழைத்தண்ணி போல்…
நாளும் நிலமாறுறேன்… தூருறேன்…

ஆண் : பாயாகின்ற நெஞ்சுக்கு பால்பார்வ…
நீ வாக்குற… காக்குற…

ஆண் : கோடி வாசங்கள் என்னை தீண்டி போனாலும்…
உயிரை தீண்டாதோ உன் வாசம்…

ஆண் : பூமி தீர்ந்தாலும் தீராத இரயில் பாதை…
காதல் ஒன்றே அன்பே…

பெண் : அன்பே… அன்பே… அன்பே… அன்பே…

BGM

பெண் : அன்பே… அன்பே… அன்பே… அன்பே…

BGM

பெண் : அன்பே… அன்பே… அன்பே… அன்பே…


Notes : Railin Oligal Song Lyrics in Tamil. This Song from Blue Star (2023). Song Lyrics penned by Uma Devi. ரயிலின் ஒலிகள் பாடல் வரிகள்.


மரகத மாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிபிரதீப் குமார், விஜய் யேசுதாஸ் & சின்மயிநிவாஸ் கே பிரசன்னாடக்கர்

Maragadha Maalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மரகத மாலை நேரம்…
மமதைகள் மாய்ந்து வீழும்…
மகரந்த சேர்க்கை காதல்தானா…

பெண் : இரவினில் தோற்ற தீயை…
பருகிட பார்க்கும் பார்வை…
வழிவது காதல் தீர்த்தம்தானா…

ஆண் : வார்த்தைகள் தோற்க்குதே…
தீண்டலே தரும் மொழி நீயா…

பெண் : தூரங்கள் கேட்குதே…
காதலின் வழித்துணை நீயா…

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ… ஓஓஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ… ஓஓஹோ…

ஆண் : எழுதிடவா… இதழ் வரியா… ஆஆஆ…

பெண் : இடைவெளிதான்…
பெண் உயிர் வலியா… ஆஆஆ…

BGM

ஆண் : நீர் கேட்டேன்…
மழையாக வான் கேட்டேன்
நிலவாக நீ எந்தன்…
கனவாக தேடி வந்ததென்ன…

பெண் : நான் கேட்ட…
வரமாக நீ வந்தாய்…
நிஜமாக நாம் என்றும்…
உறவாக காலம் சேர்த்ததென்ன…

ஆண் : ஒரு வானம் உடைந்து…
இரு வானம் வருமா
ஒளி தூங்கும் இரவில்…
பூக்கள் பூப்பதென்ன…

பெண் : மழை யாவும் வடிந்தும்…
மரதூறல் வருமே…
ஒரு யாமம் முடிந்தும்…
ஊடல் தோற்பதென்ன…

ஆண் : நதி நீயா…
துளி நானா…

பெண் : கலந்திங்கே…
காதல் ஆகுதே…

ஆண் : எழுதிடவா… ஆஆஆ… ஆஆ…

பெண் : இதழ் வரியா…
இடைவெளிதான்…

ஆண் : பெண் உயிர் வலியா… ஆஆஆ…

BGM


Notes : Maragadha Maalai Song Lyrics in Tamil. This Song from Takkar (2023). Song Lyrics penned by Uma Devi. மரகத மாலை பாடல் வரிகள்.


என்ன பெத்த தேவதையே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசி.சத்யாசி.சத்யாதேள்

Enna Petha Devadhaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன பெத்த தேவதையே…
என்னுடையே தேவதையே…
கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா…

ஆண் : அன்புகொண்ட பார்வையிலே…
இன்பம் கொண்டு வந்தவளே…
மூச்சுக்கான காத்தும் நீதானா…

ஆண் : தனி மரமா உலகில் நின்னேனே…
அட மழையா உனையே கண்டேனே…
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே…
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே…

ஆண் : சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே…
துணையான தோள்கள் நீதானே…
கரையெல்லாம் நீங்குன நிலவாட்டம் மாறுனேன்…
வாழி காட்டும் வானம் நீதானே…

BGM

ஆண் : நெஞ்சுக்குள்ள ஏதுமில்ல…
நெனப்புக்கு யாருமில்ல…
உனையே உனையே மனசிப்போ மறப்பதில்ல…

ஆண் : புத்தி தந்த பூமரமே…
என்ன தொட்ட உங்கரமே…
மனச மனச மந்திரமா மாத்துதிங்கே…

ஆண் : ஒரு வலி வந்தா துடிப்பேனே நான் தன்னால…
ஏங்கதி நீதான் வாழ்வேனே இனி உன்னால…
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே…
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே…

ஆண் : சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே…
துணையான தோள்கள் நீதானே…
கரையெல்லாம் நீங்குன நிலவாட்டம் மாறுனேன்…
வாழி காட்டும் வானம் நீதானே…

BGM

ஆண் : கோயில் குளம் சுத்துனாலும்…
சொல்லாமலே கூட வரும்…
மலையே மலையே என்ன காக்கும் தெய்வம் நீயே…

ஆண் : பார்வையில புரிய வைக்கும்…
வார்த்தையில வலிய நீக்கும்…
மழையோ வெயிலோ உன் அன்பு கொட விரிக்கும்…

ஆண் : சிறு ஒளி நானே தொலித்தேனே அது உன்னால…
கண்ணு இம போல இணஞ்சோமே இப்போ தன்னால…
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே…
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே…

ஆண் : சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே…
துணையான தோள்கள் நீதானே…
கரையெல்லாம் நீங்குன நிலவாட்டம் மாறுனேன்…
வாழி காட்டும் வானம் நீதானே…

ஆண் : என்ன பெத்த தேவதையே…
என்னுடையே தேவதையே…
கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா…


Notes : Enna Petha Devadhaiye Song Lyrics in Tamil. This Song from Theal (2022). Song Lyrics penned by Uma Devi. என்ன பெத்த தேவதையே பாடல் வரிகள்.


இரவிங்கு தீவாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசின்மயி & பிரதீப் குமார்கோவிந் வசந்தா96

Iravingu Theevai Song Lyrics in Tamil


BGM

பெண் : இரவிங்கு தீவாய் நம்மை சூழுதே…
விடியலும் இருளாய் வருதே…
நினைவுகள் தீயாய் அலை மோதுதே…
உடலிங்கு சாவாய் அழுதே…

ஆண் & பெண் : பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்…
உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்…

ஆண் : மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்…
வருண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்…
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்…

ஆண் : இரவிங்கு தீவாய் நம்மை சூழுதே…
விடியலும் இருளாய் வருதே…

BGM

பெண் : இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே…
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே…
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே…

ஆண் & பெண் : அட காலங்கள் தடை மீறி தடை போடுதே…
நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா…
வாழவே வா நீ தான் உயிரின் உயிரே…
வரவா… வரவா…

ஆண் : தினம் தினம் உயிர்த்தெழும்…
மனம் அன்றாடம் மாயுமே…
உயிர் வரை நிறைந்துணை…
மனம் கொண்டாடி வாழுமே…

ஆண் : மரங்கள் சாய்ந்து கூடு வீழ்ந்தும்…
குயில்கள் ராகம் பாடுமே…

ஆண் & பெண் : இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்…
நிலவு பொறுமை காக்குமே…

ஆண் : மழை வழி கடல் விடும்…
விண்காதல் மண்ணை சேருமமே…
உன்னை உடல் பிரிந்தினும்…
என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே…
நீ போய் வா வா… வா…


Notes : Iravingu Theevai Song Lyrics in Tamil. This Song from 96 (2018). Song Lyrics penned by Umadevi. இரவிங்கு தீவாய் பாடல் வரிகள்.