என்ன பெத்த தேவதையே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசி.சத்யாசி.சத்யாதேள்

Enna Petha Devadhaiye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்ன பெத்த தேவதையே…
என்னுடையே தேவதையே…
கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா…

ஆண் : அன்புகொண்ட பார்வையிலே…
இன்பம் கொண்டு வந்தவளே…
மூச்சுக்கான காத்தும் நீதானா…

ஆண் : தனி மரமா உலகில் நின்னேனே…
அட மழையா உனையே கண்டேனே…
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே…
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே…

ஆண் : சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே…
துணையான தோள்கள் நீதானே…
கரையெல்லாம் நீங்குன நிலவாட்டம் மாறுனேன்…
வாழி காட்டும் வானம் நீதானே…

—BGM—

ஆண் : நெஞ்சுக்குள்ள ஏதுமில்ல…
நெனப்புக்கு யாருமில்ல…
உனையே உனையே மனசிப்போ மறப்பதில்ல…

ஆண் : புத்தி தந்த பூமரமே…
என்ன தொட்ட உங்கரமே…
மனச மனச மந்திரமா மாத்துதிங்கே…

ஆண் : ஒரு வலி வந்தா துடிப்பேனே நான் தன்னால…
ஏங்கதி நீதான் வாழ்வேனே இனி உன்னால…
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே…
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே…

ஆண் : சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே…
துணையான தோள்கள் நீதானே…
கரையெல்லாம் நீங்குன நிலவாட்டம் மாறுனேன்…
வாழி காட்டும் வானம் நீதானே…

—BGM—

ஆண் : கோயில் குளம் சுத்துனாலும்…
சொல்லாமலே கூட வரும்…
மலையே மலையே என்ன காக்கும் தெய்வம் நீயே…

ஆண் : பார்வையில புரிய வைக்கும்…
வார்த்தையில வலிய நீக்கும்…
மழையோ வெயிலோ உன் அன்பு கொட விரிக்கும்…

ஆண் : சிறு ஒளி நானே தொலித்தேனே அது உன்னால…
கண்ணு இம போல இணஞ்சோமே இப்போ தன்னால…
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே…
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே…

ஆண் : சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே…
துணையான தோள்கள் நீதானே…
கரையெல்லாம் நீங்குன நிலவாட்டம் மாறுனேன்…
வாழி காட்டும் வானம் நீதானே…

ஆண் : என்ன பெத்த தேவதையே…
என்னுடையே தேவதையே…
கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா…


Notes : Enna Petha Devadhaiye Song Lyrics in Tamil. This Song from Theal (2022). Song Lyrics penned by Uma Devi. என்ன பெத்த தேவதையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading