Tag Archives: டி.எம்.சௌந்தரராஜன்

என் கதை முடியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

En Kathai Mudiyum Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…

BGM

ஆண் : என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…

ஆண் : அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…
அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…

BGM

ஆண் : இதயத்தில் ரகசியம் இருக்கின்றது…
அது இதழினில் பிறந்திட தவிக்கின்றது…

BGM

ஆண் : உலகத்தை என் மனம் வெறுக்கின்றது…
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது…
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது…
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது…

BGM

ஆண் : பேதமை நிறைந்தது என் வாழ்வு…
அதில் பேதையும் வரைந்தது சில கோடு…

BGM

ஆண் : பித்தென்று சிரிப்பது உள் நினைவு…
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு…
பித்தென்று சிரிப்பது உள் நினைவு…
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு…

BGM

ஆண் : உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே…
அதில் பிரிவுகள் என்பது இருக்காதே…

BGM

ஆண் : ஒளியாய் தெரிவது வெறும் கனவு…
அதன் உருவாய் எரிவது என் மனது…
ஒளியாய் தெரிவது வெறும் கனவு…
அதன் உருவாய் எரிவது என் மனது…

BGM

ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்…
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்…

BGM

ஆண் : துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்…
துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்…
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்…

ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்…
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்…


Notes : En Kathai Mudiyum Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. என் கதை முடியும் பாடல் வரிகள்.


இதயமதை கோயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Idhayam Athey Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

BGM

ஆண் : தேவதை நீ என நினைத்து…
கவிதைகள் ஆயிரம் வடித்து…
தேவதை நீ என நினைத்து…
கவிதைகள் ஆயிரம் வடித்து…

ஆண் : ராகத்தில் நான் அதை படித்து…
உன் ரசனையை கேட்கின்ற போது…
நீ செவிடென்று நடிக்கின்ற மாது…
நீ செவிடென்று நடிக்கின்ற மாது…

ஆண் : நான் சிரிப்பது வாழ்வினில் ஏது…
நான் சிரிப்பது வாழ்வினில் ஏது…

ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

BGM

ஆண் : என் விருப்பத்தில் உதிர்வது நீரா…
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…
என் விருப்பத்தில் உதிர்வது நீரா…
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…

ஆண் : நீர் பட்டு நெருப்பது அணையும்…
உன் வெறுப்பென்று என் மேல் தீரும்…
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்…
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்…

ஆண் : இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்…
இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்…

BGM

பெண் : இவன் விருப்பத்தில் உதிர்வது நீரா…
இவள் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…
நீர் பட்டு நெருப்பது அணையும்…
இவள் வெறுப்பின்று இவன் மேல் தீரும்…
இவள் அணைத்திடும் நாளினை பார்க்க…

BGM


Notes : Idhayam Athey Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. இதயமதை கோயில் பாடல் வரிகள்.


சிந்து நதியின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்டி.எம். சௌந்தரராஜன், L.R. ஈஸ்வரி & ஜே.வி.ராகவுலுஎம்.எஸ். விஸ்வநாதன்கை கொடுத்த தெய்வம்

Sindhu Nadhiyin Song Lyrics in Tamil


ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…

BGM

ஆண் : சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

ஆண் : கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்…
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்…
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்…
சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு…
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்…
சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு…
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்…

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

பெண் : மனசிதி நீ கோசம் மனுகட நீ கோசம்…
ஆண் & பெண் : மனசிதி நீ கோசம் மனுகட நீ கோசம்…

ஆண் : மமதா வேதம் மாயனி மதுபாசம்…
ஆண் & பெண் : மமதாஅவேதம் மாயனி மதுபாசம்…
மனசிதி நீ கோசம் மனு கட நீ கோசம்…

BGM

ஆண் : நீ கண் கனராகம்…
பெண் : நீ மதி அனுராகம்…
ஆண் : மன ஈ வைபோகம்…
பெண் : பகுதன் அலையோகம்…

ஆண் : வளபுலபுகுலாசம்…
பெண் : நரபுல தராசம்…
ஆண் : வஹிதின அவகாசம்…
பெண் : சா நலிவுலு ஆவேசம்…

BGM

ஆண் : சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்…
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்…
சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்…
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்…

ஆண் : வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்…
மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்…
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்…
மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்…

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM


Notes : Sindhu Nadhiyin Song Lyrics in Tamil. This Song from Kai Kodutha Deivam (1964). Song Lyrics penned by Mahakavi Subramania Bharathiyar. சிந்து நதியின் பாடல் வரிகள்.


கண்டு கொண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்குன்னக்குடி வைத்தியநாதன்திருவருள்

Kandukonden Song Lyrics in Tamil


ஆண் : கண்டு கொண்டேன்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்… முருகா…

BGM

ஆண் : கண்டுகொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்… முருகா…

ஆண் : கண்டுகொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்…

ஆண் : விழுந்த இடத்தில் மருதமரம்…
விழித்த முகத்தில் கந்தர் முகம்…
நினைத்து நினைத்துத் துடித்த எனக்கு…
கிடைத்த முருகனின் அன்பு வரம்…

ஆண் : கண்டு கொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…

BGM

ஆண் : இடையோடு கூடும் உடை கோவணங்கள்…
எவையும் இல்லை ஐயா…
ஒரு சூடமேனும் தருவார்கள் கூட…
இங்கில்லை ஐயா…
தனியாக நிற்கும் முருகா உனக்கு…
இனி நானுண்டு ஐயா… இனி நானுண்டு ஐயா…

BGM

ஆண் : ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு…
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு…
வலிமையுண்டு பொறுமையுண்டு…
உழைப்பதென்று நினைப்பதுண்டு…

ஆண் : உனக்கென்று உழைப்பதென்று நினைப்பதுண்டு…
முருகா நான் ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு…
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு…

BGM

ஆண் : உருகுதே கண்கள் உருகுதே…
பெருகுதே வெள்ளம் பெருகுதே…
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது…
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது…
உனது கோயில் மலரும்… முருகா…

ஆண் : உருகுதே கண்கள் உருகுதே…
பெருகுதே வெள்ளம் பெருகுதே…
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது…
உனது கோயில் மலரும்… முருகா…
நான் சொன்னது உண்மையடா…

BGM

ஆண் : படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது…
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்…

BGM

ஆண் : படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது…
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்…
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே…
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்…
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே…
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்…

ஆண் : கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்…
தந்தாய் கோடி திருமுருகா…

BGM

ஆண் : சிந்தாமணியே செவ்வேல் உன்னை…
கண்டதும் போதும் வடிவழகா…

BGM

ஆண் : கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்…
தந்தாய் கோடி திருமுருகா…
சிந்தாமணியே செவ்வேல் உன்னை…
கண்டதும் போதும் வடிவழகா…

ஆண் : அடியவர்க்கு ஒரு விருந்தே…
பிணி பல தீர்க்கும் அருமருந்தே…
மனதில் இருக்கும் குரு முருகா…
மருதமரத்து வேல் முருகா…
வேல் முருகா… வேல் முருகா…


Notes : Kandukonden Song Lyrics in Tamil. This Song from Thiruvarul (1975). Song Lyrics penned by Kannadasan. கண்டு கொண்டேன் பாடல் வரிகள்.


ஆதி சிவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாகே. வி. மகாதேவன்திருவருட்செல்வர்

Aadhi Sivan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…
ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…

BGM

பெண் : வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே…
திரு வெந்நீரும் குங்குமமும் சூடிடுவோமே…
வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே…
திரு வெந்நீரும் குங்குமமும் சூடிடுவோமே…

பெண் : அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம்…
அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம்…
அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே…
அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே…

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…

பெண் : நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா…
அந்த நாதத்துக்கே பெருமை தந்தா ஜீவன் அல்லவா…
நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா…
அந்த நாதத்துக்கே பெருமை தந்தா ஜீவன் அல்லவா…

பெண் : பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா…
பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா…
அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா…
அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா…

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…

ஆண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…

ஆண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… ஏ…


Notes : Aadhi Sivan Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. ஆதி சிவன் பாடல் வரிகள்.


மல்லு வேட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாசங்கர் கணேஷ்சொர்க்கம் நரகம்

Mallu Vetti Song Lyrics in Tamil


BGM

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயில காள…
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…

பெண் : பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…

ஆண் : சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…

BGM

ஆண் : தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயில காள… ஹோய்…

BGM

ஆண் : ஏ… புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன்…
வெளைஞ்சு நிக்குது…

பெண் : ஓ… மச்சான் ஐயா உன் உதட்டருகே…
வளைஞ்சு நிக்குது…

ஆண் : ஏ… புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன்…
வெளைஞ்சு நிக்குது…

பெண் : ஓ… மச்சான் ஐயா உன் உதட்டருகே…
வளைஞ்சு நிக்குது…

ஆண் : கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு…
சர்க்கரைப் பொங்கலைப் போடு…

பெண் : நீ எறும்பு போல நடந்து நடந்து…
இனிப்பை அதிலே தேடு…

ஆண் : கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு…
சர்க்கரைப் பொங்கலைப் போடு…

பெண் : நீ எறும்பு போல நடந்து நடந்து…
இனிப்பை அதிலே தேடு…

ஆண் : சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…

ஆண் : ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள… ஹோய்…

BGM

ஆண் : ஏ… புள்ளே தாமரைப் பூத்திருக்கு…
தண்ணிக்கு மேலே…

பெண் : ஓ… மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு…
தண்ணிக்குக் கீழே…

ஆண் : ஏ…புள்ளே தாமரைப் பூத்திருக்கு…
தண்ணிக்கு மேலே…

பெண் : ஓ… மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு…
தண்ணிக்குக் கீழே…

ஆண் : ஆம்பளைங்க பூவைப்போல…
வெளியில் சொல்வது உண்டு…

பெண் : ஆயிரம்தான் நெனச்ச போதும்…
அதிலே நாங்க தண்டு…

ஆண் : ஆம்பளைங்க பூவைப்போல…
வெளியில் சொல்வது உண்டு…

பெண் : ஆயிரம்தான் நெனச்ச போதும்…
அதிலே நாங்க தண்டு…

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…

பெண் : பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…

ஆண் : சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…

ஆண் : ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள… ஹோய்…


Notes : Mallu Vetti Song Lyrics in Tamil. This Song from Sorgam Naragam (1977). Song Lyrics penned by Kannadasan. மல்லு வேட்டி பாடல் வரிகள்.


சித்தமெல்லாம் எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி. எம். சௌந்தரராஜன்கே. வி. மகாதேவன்திருவருட்செல்வர்

Sitthamellaam Enakku Song Lyrics in Tamil


ஆண் : பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை…
வைத்தாய்ப் பெண்ணை தென்பால்…
வெண்ணை நல்லூர் அருள் துறையுள்…
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…

ஆண் : அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை…
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை…
அந்த அம்மையில்லாமல் இந்தப்பிள்ளை இல்லை…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…

BGM

ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக…
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக…

ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக…
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக…
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக…
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக…
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…

BGM

ஆண் : கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே…
கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே…
கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே…
கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே…

ஆண் : வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே…
வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே…
வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…


Notes : Sitthamellaam Enakku Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. சித்தமெல்லாம் எனக்கு பாடல் வரிகள்.


மருதமலைக்கு நீங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்குன்னக்குடி வைத்தியநாதன்திருவருள்

Maruthamalaiku Neenga Song Lyrics in Tamil


BGM

குழு : வேல் வேல் வெற்றி வேல்…
வேல் வேல் சக்தி வேல்…
வேல் வேல் ஞான வேல்…
வேல் வேல் வீர வேல்…
வேல் வேல் கந்த வேல்…

குழு : வேல் வேல் வேல் வேல்…
வேல் வேல் வேல் வேல்…
வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல்…

ஆண் : கன்னித் தமிழுக்கு காலமெல்லாம் மூணுபடை…
கற்புடைய மங்கையரின் காவலுக்கு நாலு படை…
இதுவரைக்கும் இருப்பது எங்கள் முருகனுக்கு…
ஆறுபடை ஆறுபடை ஆறுபடை…
இன்று எங்கள் மருதமலைக் கோயிலொரு…
ஏழு படை ஏழு படை ஏழு படை…

BGM

ஆண் : இந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஒருதரம் மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க…
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க…
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க…
சத்தியமா சொல்லுறேன்…
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க…
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க…
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க…

ஆண் : மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…

BGM

ஆண் : பார்வதியும் சிவனாரும் மிதிச்ச மலை…
இங்கு பாம்பாட்டி சித்தர் வந்து வசிச்ச மலை…

BGM

ஆண் : பார்வதியும் சிவனாரும் மிதிச்ச மலை…
இங்கு பாம்பாட்டி சித்தர் வந்து வசிச்ச மலை…
முக்தி பெற முனிவரெல்லாம் சுற்றிய மலை…
எத்தனையோ முனிவரெல்லாம் சுற்றிய மலை…
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை…
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை…
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை…

ஆண் : அந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க…
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க…
சத்தியமா சொல்லுறேன்…
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க…
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க…

ஆண் : மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…

ஆண் : மருதமலை முருகனுக்கு…
குழு : அரோஹரா…
ஆண் : மருதமலை ஆண்டவனுக்கு…
குழு : அரோஹரா…
ஆண் : மருதமலை தம்பிக்கு…
குழு : அரோஹரா…

ஆண் : அரோஹரா…
குழு : அரோஹரா…
ஆண் : அரோஹரா…
குழு : அரோஹரா…
ஆண் : அரோஹரா…
குழு : அரோஹரா…


Notes : Maruthamalaiku Neenga Song Lyrics in Tamil. This Song from Thiruvarul (1975). Song Lyrics penned by Kannadasan. மருதமலைக்கு நீங்க பாடல் வரிகள்.


பாவக்கடைத் தெருவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம் & டி.எம். சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்வருவான் வடிவேலன்

Paava Kadaitheruvil Song Lyrics in Tamil


ஆண் : பாவக்கடைத் தெருவில் படுத்திருந்த பாவியென்னை…
ஞானக் கடல் தன்னில் நடக்கவிட்ட வேல்முருகன்…
ஆறுபடை நாயகனே அவமதிக்கும் மானிடர்க்கு…
மாறுதலைக் காட்டி மனம் திருந்தும் வேல் முருகா…

ஆண் : சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற…
தத்துவம் அறிந்தேன் கந்தா…

BGM

ஆண் : சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற…
தத்துவம் அறிந்தேன் கந்தா…
பித்தனின் விளையாட்டுப் பிழை பொறுத்தே உந்தன்…
பேரருள் தந்தாய் கந்தா…

BGM

ஆண் : கை சுமந்தாலென்ன தலை சுமந்தாலென்ன…
கந்தனைச் சுமக்கின்றது…
அவன் கடன் தந்த என் மேனி காலத்திலே வந்து…
கடனையும் தீர்க்கின்றது…
கடனையும் தீர்க்கின்றது…

ஆண் : முருகா சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற…
தத்துவம் அறிந்தேன் கந்தா…
தத்துவம் அறிந்தேன் கந்தா…

BGM

பெண் : மாதுமையாள் மைந்தன் மாசிமகம் காண…
மானிடம் திரள்கின்றது…

BGM

பெண் : மாதுமையாள் மைந்தன் மாசிமகம் காண…
மானிடம் திரள்கின்றது…
இந்த மக்களின் வினை என்னும் சிக்கலைத் தீர்க்கும் கரம்…
சிக்கலில் இருக்கின்றது…
கரம் சிக்கலில் இருக்கின்றது…

BGM

ஆண் : அழகப்பன் மேனிக்கு அழகு செய்தால் அதில்…
அருள் நெறி ஜொலிக்கின்றது…
திரு ஆண்டியப்பன் காலில் ஆசிகள் பெற வேண்டி…
அரசாங்கம் வருகின்றது…

BGM

பெண் : வெந்தணல் போல் எழுந்த விதியினில் துடிப்போர்க்கு…
சந்தனம் தருகின்றது…
நல்ல வீட்டுக் குலமகளை விளக்கேற்றி வைக்கச் சொல்லி…
குங்குமம் இடுகின்றது…
மங்கல குங்குமம் இடுகின்றது…

ஆண் : அவனிடம் போனவர்க்கு அவனை அடைதவர்க்கு…
எமனிடம் பயமில்லையே…
அந்த சிவனிடம் ஓம் என்றால் இவனிடம் பொருள் கேட்டான்…
இவனுக்கு மேலில்லையே…

ஆண் & பெண் : உண்டான ஆயுதங்கள் ஒன்பது எதிர்த்தாலும்…
தண்டாயுதம் காக்குமே…
அவனைக் கொண்டாடும் பேருகளுக்கு குறையாவும் ஓடிவிடும்…
கோடானு கோடி வருமே…
கோடானு கோடி வருமே…

BGM


Notes : Paava Kadaitheruvil Song Lyrics in Tamil. This Song from Varuvan Vadivelan (1978). Song Lyrics penned by Kannadasan. பாவக்கடைத் தெருவில் பாடல் வரிகள்.


கட்டப்புள்ள குட்டப்புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன் & எஸ். ஜானகிஇளையராஜாபைரவி

Kattapulla Kuttapulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள…
கருகமணி போட்டப்புள்ள…
கன்னம் குழி விழுந்த செல்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள…
கருகமணி போட்டப்புள்ள…
கன்னம் குழி விழுந்த செல்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…

BGM

பெண் : சோக்காளி ராசாக்கண்ணு…
சொக்குறாரு பக்கம் வந்து…
மூக்குவாளி போட்ட மச்சான்…
முந்தானையில் கைய வச்சான்…

பெண் : வெளஞ்சு காட்டோரம் வேலி ஒண்ணு இருக்குதய்யா…
அத்துமீறி உள்ளே வந்து ஆள வட்டம் போடாதய்யா…

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள…
கருகமணி போட்டப்புள்ள…
கன்னம் குழி விழுந்த செல்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…

BGM

ஆண் : வாடிப்பட்டி சந்தையிலே வாங்கி வந்த ரவிக்கையடி…
தேடி நானும் எடுத்து வந்தேன் தேன் குயிலே போட்டுக்கடி…

BGM

ஆண் : வாடிப்பட்டி சந்தையிலே வாங்கி வந்த ரவிக்கையடி…
தேடி நானும் எடுத்து வந்தேன் தேன் குயிலே போட்டுக்கடி…

பெண் : ஹும்ஹூம்… நான் மாட்டேன் யாராச்சும் பாப்பாங்க…
தாலிக் கட்டி கிட்ட வந்தா யாரு நம்ம கேட்பாங்க…

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள…
கருகமணி போட்டப்புள்ள…
கன்னம் குழி விழுந்த செல்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…

BGM

பெண் : கன்னிப்பொண்ணு வெட்கத்திலே…
கருத்த மச்சான் பக்கத்தில…
என்னென்னமோ சொல்லிப்புட்டான்…
என் மனச கெடுத்துப்புட்டான்…

BGM

பெண் : கன்னிப்பொண்ணு வெட்கத்திலே…
கருத்த மச்சான் பக்கத்தில…
என்னென்னமோ சொல்லிப்புட்டான்…
என் மனச கெடுத்துப்புட்டான்…

ஆண் : காதோரம் கொண்டைக்காரி…
கத்தரிப்பு சேலைக்காரி…
கட்டழகு பொட்டுக்காரி…
கை கலப்பில் கெட்டிக்காரி…

பெண் : கெட்டிப்புள்ள சுட்டிப்புள்ள…
கிறுக்குத்தனம் செய்யும்புள்ள…
ஆளான பொண்ணு தள்ளி நில்லுங்க…
உங்க ஆத்திரத்த மூட்டைக்கட்டி கொள்ளுங்க…

BGM

ஆண் : செங்கரும்பு தோட்டத்தில சிட்டெறும்பு சுத்துதடி…
தங்கமே உன்னப் பார்த்து தவிக்குதடி என் மனசு
செங்கரும்பு தோட்டத்தில சிட்டெறும்பு சுத்துதடி…
தங்கமே உன்னப் பார்த்து தவிக்குதடி என் மனசு…

பெண் : மாந்தோப்பு ஓரத்தில மல்லுக் கட்ட வந்த மச்சான்…
கெட்டி மேளம் கொட்டும் வரை எட்டியே நின்னு பேசிடுங்க…

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள…
கருகமணி போட்டப்புள்ள…
கன்னம் குழி விழுந்த செல்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…


Notes : Kattapulla Kuttapulla Song Lyrics in Tamil. This Song from Bairavi (1978). Song Lyrics penned by Kannadasan. கட்டப்புள்ள குட்டப்புள்ள பாடல் வரிகள்.