என் கதை முடியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

En Kathai Mudiyum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…

—BGM—

ஆண் : என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…

ஆண் : அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…
அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…

—BGM—

ஆண் : இதயத்தில் ரகசியம் இருக்கின்றது…
அது இதழினில் பிறந்திட தவிக்கின்றது…

—BGM—

ஆண் : உலகத்தை என் மனம் வெறுக்கின்றது…
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது…
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது…
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது…

—BGM—

ஆண் : பேதமை நிறைந்தது என் வாழ்வு…
அதில் பேதையும் வரைந்தது சில கோடு…

—BGM—

ஆண் : பித்தென்று சிரிப்பது உள் நினைவு…
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு…
பித்தென்று சிரிப்பது உள் நினைவு…
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு…

—BGM—

ஆண் : உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே…
அதில் பிரிவுகள் என்பது இருக்காதே…

—BGM—

ஆண் : ஒளியாய் தெரிவது வெறும் கனவு…
அதன் உருவாய் எரிவது என் மனது…
ஒளியாய் தெரிவது வெறும் கனவு…
அதன் உருவாய் எரிவது என் மனது…

—BGM—

ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்…
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்…

—BGM—

ஆண் : துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்…
துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்…
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்…

ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்…
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்…


Notes : En Kathai Mudiyum Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. என் கதை முடியும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading