வாசமில்லா மலரிது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Vasamilla Malar Idhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது…
ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்…
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…

—BGM—

ஆண் : பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா…
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே…
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை…
உனக்கேன் ஆசை கலைமகள் போலே…
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை…
உனக்கேன் ஆசை கலைமகள் போலே…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…

—BGM—

ஆண் : என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து…
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே…
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்…
உனக்கேன் ஆசை மன்மதன் போலே…
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்…
உனக்கேன் ஆசை மன்மதன் போலே…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது… …

—BGM—

ஆண் : மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்…
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட…
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே…
உனக்கேன் ஆசை உறவென்று நாட…
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே…
உனக்கேன் ஆசை உறவென்று நாட…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது…
ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்…
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…

—BGM—


Notes : Vasamilla Malar Idhu Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. வாசமில்லா மலரிது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading