இது குழந்தை பாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Idhu Kuzhandhai Paadum Song Lyrics in Tamil


ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…

—BGM—

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…
இது நதியில்லாத ஓடம்…

—BGM—

ஆண் : நடை மறந்த கால்கள் தன்னில்…
தடயத்தை பார்க்கிறேன்…
வடம் இழந்த தேரது ஒன்றை…
நாள்தோரும் இழுக்கிறேன்…

ஆண் : சிறகிழந்த பறவை ஒன்றை…
வானத்தில் பார்க்கிறேன்…
சிறகிழந்த பறவை ஒன்றை…
வானத்தில் பார்க்கிறேன்…
உறவுராத பெண்ணை எண்ணி…
நாளெல்லாம் வாழ்கிறேன்…

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…

—BGM—

ஆண் : வெறும் நாரில் கரம் கொண்டு…
பூ மாலை தொடுக்கிறேன்…
வெறும் காற்றில் உளி கொண்டு…
சிலை ஒன்றை வடிக்கிறேன்…

ஆண் : விடிந்து விட்ட பொழுதில் கூட…
விண்மீனை பார்க்கிறேன்…
விடிந்து விட்ட பொழுதில் கூட…
விண்மீனை பார்க்கிறேன்…
விருப்பமில்லா பெண்ணை எண்ணி…
உலகை நான் வெறுக்கிறேன்…

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…

—BGM—

ஆண் : உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது…
உறவுருவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது…

ஆண் : உயிரிழந்த கருவை கொண்டு…
கவிதை நான் வடிப்பது…
உயிரிழந்த கருவை கொண்டு…
கவிதை நான் வடிப்பது…
ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது…

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…
இது நதியில்லாத ஓடம்…


Notes : Idhu Kuzhandhai Paadum Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. இது குழந்தை பாடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading