பாவக்கடைத் தெருவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம் & டி.எம். சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்வருவான் வடிவேலன்

Paava Kadaitheruvil Song Lyrics in Tamil


ஆண் : பாவக்கடைத் தெருவில் படுத்திருந்த பாவியென்னை…
ஞானக் கடல் தன்னில் நடக்கவிட்ட வேல்முருகன்…
ஆறுபடை நாயகனே அவமதிக்கும் மானிடர்க்கு…
மாறுதலைக் காட்டி மனம் திருந்தும் வேல் முருகா…

ஆண் : சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற…
தத்துவம் அறிந்தேன் கந்தா…

—BGM—

ஆண் : சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற…
தத்துவம் அறிந்தேன் கந்தா…
பித்தனின் விளையாட்டுப் பிழை பொறுத்தே உந்தன்…
பேரருள் தந்தாய் கந்தா…

—BGM—

ஆண் : கை சுமந்தாலென்ன தலை சுமந்தாலென்ன…
கந்தனைச் சுமக்கின்றது…
அவன் கடன் தந்த என் மேனி காலத்திலே வந்து…
கடனையும் தீர்க்கின்றது…
கடனையும் தீர்க்கின்றது…

ஆண் : முருகா சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற…
தத்துவம் அறிந்தேன் கந்தா…
தத்துவம் அறிந்தேன் கந்தா…

—BGM—

பெண் : மாதுமையாள் மைந்தன் மாசிமகம் காண…
மானிடம் திரள்கின்றது…

—BGM—

பெண் : மாதுமையாள் மைந்தன் மாசிமகம் காண…
மானிடம் திரள்கின்றது…
இந்த மக்களின் வினை என்னும் சிக்கலைத் தீர்க்கும் கரம்…
சிக்கலில் இருக்கின்றது…
கரம் சிக்கலில் இருக்கின்றது…

—BGM—

ஆண் : அழகப்பன் மேனிக்கு அழகு செய்தால் அதில்…
அருள் நெறி ஜொலிக்கின்றது…
திரு ஆண்டியப்பன் காலில் ஆசிகள் பெற வேண்டி…
அரசாங்கம் வருகின்றது…

—BGM—

பெண் : வெந்தணல் போல் எழுந்த விதியினில் துடிப்போர்க்கு…
சந்தனம் தருகின்றது…
நல்ல வீட்டுக் குலமகளை விளக்கேற்றி வைக்கச் சொல்லி…
குங்குமம் இடுகின்றது…
மங்கல குங்குமம் இடுகின்றது…

ஆண் : அவனிடம் போனவர்க்கு அவனை அடைதவர்க்கு…
எமனிடம் பயமில்லையே…
அந்த சிவனிடம் ஓம் என்றால் இவனிடம் பொருள் கேட்டான்…
இவனுக்கு மேலில்லையே…

ஆண் & பெண் : உண்டான ஆயுதங்கள் ஒன்பது எதிர்த்தாலும்…
தண்டாயுதம் காக்குமே…
அவனைக் கொண்டாடும் பேருகளுக்கு குறையாவும் ஓடிவிடும்…
கோடானு கோடி வருமே…
கோடானு கோடி வருமே…

—BGM—


Notes : Paava Kadaitheruvil Song Lyrics in Tamil. This Song from Varuvan Vadivelan (1978). Song Lyrics penned by Kannadasan. பாவக்கடைத் தெருவில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading