நீயின்றி யாருமில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன் & வாணி ஜெயராம்எம்.எஸ்.விஸ்வநாதன்வருவான் வடிவேலன்

Neeyindri Yaarumilliai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…
நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…

பெண் : நம்பிக்கை கொண்டு வந்தேன் அருள் கேட்டு…
நீ ஞானக்கண் தனைத் திறந்து வழி காட்டு…
நம்பிக்கை கொண்டு வந்தேன் அருள் கேட்டு…
நீ ஞானக்கண் தனைத் திறந்து வழி காட்டு…

பெண் : அருளே அருளே உலகம் உனதல்லவா…
அறிவும் பொருளும் யாவும் நீயல்லவா…

பெண் : நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…
நீ ஒளி காட்டு…

பெண் : திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ…
மாமி இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ…

—BGM—

பெண் : திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ…
மாமி இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ…

பெண் : கவனத்தில் எங்கள் நிலை வரவில்லையோ…
நாங்கள் கதிர்காமம்…
நாங்கள் கதிர்காமம் வந்ததற்குப் பலன் இல்லையோ…

பெண் : காசி விசாலாட்சி உந்தன் மகனிடம் சொல்வாய்…
காஞ்சி காமாட்சி உந்தன் மகனிடம் சொல்வாய்…
அங்கயற்கண்ணி உந்தன் மகனிடம் சொல்வாய்…
அடி அபிராமி நீ உனது மகனிடம் சொல்வாய்…

ஆண் : கண்டேன் கண்டேன் ஏஏஏ கண்டேன்…
முத்துக் குமரன் பக்திச் சரவணன்…
வைத்திய நாதனைக் கண்டேன்…
முடியுடை மன்னன் திருமுடி அங்கே…
கொடியுடைச் சேவலைக் கண்டேன்…

ஆண் : கொத்தும் நாகம் பொல்லாதாக கத்தும்…
தோகையைக் கண்டேன்…
கோலம் மாறிட ஞானக் கண்களும்…
ஊனக் கண்களும் கொண்டேன்…

—BGM—

ஆண் : வீடு நமக்குண்டு அறுபடை வீடு…
வேதம் நமக்குண்டு முருகனின் பாதம்…
வீடு நமக்குண்டு அறுபடை வீடு…
வேதம் நமக்குண்டு முருகனின் பாதம்…

ஆண் : விருந்து நமக்குண்டு கந்தனின் நாமம்…
மருந்து நமக்குண்டு வைத்திய நாதம்…
விருந்து நமக்குண்டு கந்தனின் நாமம்…
மருந்து நமக்குண்டு வைத்திய நாதம்…

ஆண் : ஐயா முருகய்யா…
ஐயா முருகய்யா…
ஐயா முருகய்யா…
ஐயா முருகய்யா…

—BGM—


Notes : Neeyindri Yaarumilliai Song Lyrics in Tamil. This Song from Varuvan Vadivelan (1978). Song Lyrics penned by Kannadasan. நீயின்றி யாருமில்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading