கட்டப்புள்ள குட்டப்புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன் & எஸ். ஜானகிஇளையராஜாபைரவி

Kattapulla Kuttapulla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள…
கருகமணி போட்டப்புள்ள…
கன்னம் குழி விழுந்த செல்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள…
கருகமணி போட்டப்புள்ள…
கன்னம் குழி விழுந்த செல்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…

—BGM—

பெண் : சோக்காளி ராசாக்கண்ணு…
சொக்குறாரு பக்கம் வந்து…
மூக்குவாளி போட்ட மச்சான்…
முந்தானையில் கைய வச்சான்…

பெண் : வெளஞ்சு காட்டோரம் வேலி ஒண்ணு இருக்குதய்யா…
அத்துமீறி உள்ளே வந்து ஆள வட்டம் போடாதய்யா…

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள…
கருகமணி போட்டப்புள்ள…
கன்னம் குழி விழுந்த செல்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…

—BGM—

ஆண் : வாடிப்பட்டி சந்தையிலே வாங்கி வந்த ரவிக்கையடி…
தேடி நானும் எடுத்து வந்தேன் தேன் குயிலே போட்டுக்கடி…

—BGM—

ஆண் : வாடிப்பட்டி சந்தையிலே வாங்கி வந்த ரவிக்கையடி…
தேடி நானும் எடுத்து வந்தேன் தேன் குயிலே போட்டுக்கடி…

பெண் : ஹும்ஹூம்… நான் மாட்டேன் யாராச்சும் பாப்பாங்க…
தாலிக் கட்டி கிட்ட வந்தா யாரு நம்ம கேட்பாங்க…

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள…
கருகமணி போட்டப்புள்ள…
கன்னம் குழி விழுந்த செல்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…

—BGM—

பெண் : கன்னிப்பொண்ணு வெட்கத்திலே…
கருத்த மச்சான் பக்கத்தில…
என்னென்னமோ சொல்லிப்புட்டான்…
என் மனச கெடுத்துப்புட்டான்…

—BGM—

பெண் : கன்னிப்பொண்ணு வெட்கத்திலே…
கருத்த மச்சான் பக்கத்தில…
என்னென்னமோ சொல்லிப்புட்டான்…
என் மனச கெடுத்துப்புட்டான்…

ஆண் : காதோரம் கொண்டைக்காரி…
கத்தரிப்பு சேலைக்காரி…
கட்டழகு பொட்டுக்காரி…
கை கலப்பில் கெட்டிக்காரி…

பெண் : கெட்டிப்புள்ள சுட்டிப்புள்ள…
கிறுக்குத்தனம் செய்யும்புள்ள…
ஆளான பொண்ணு தள்ளி நில்லுங்க…
உங்க ஆத்திரத்த மூட்டைக்கட்டி கொள்ளுங்க…

—BGM—

ஆண் : செங்கரும்பு தோட்டத்தில சிட்டெறும்பு சுத்துதடி…
தங்கமே உன்னப் பார்த்து தவிக்குதடி என் மனசு
செங்கரும்பு தோட்டத்தில சிட்டெறும்பு சுத்துதடி…
தங்கமே உன்னப் பார்த்து தவிக்குதடி என் மனசு…

பெண் : மாந்தோப்பு ஓரத்தில மல்லுக் கட்ட வந்த மச்சான்…
கெட்டி மேளம் கொட்டும் வரை எட்டியே நின்னு பேசிடுங்க…

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள…
கருகமணி போட்டப்புள்ள…
கன்னம் குழி விழுந்த செல்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…


Notes : Kattapulla Kuttapulla Song Lyrics in Tamil. This Song from Bairavi (1978). Song Lyrics penned by Kannadasan. கட்டப்புள்ள குட்டப்புள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading