மல்லு வேட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாசங்கர் கணேஷ்சொர்க்கம் நரகம்

Mallu Vetti Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயில காள…
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…

பெண் : பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…

ஆண் : சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…

—BGM—

ஆண் : தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயில காள… ஹோய்…

—BGM—

ஆண் : ஏ… புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன்…
வெளைஞ்சு நிக்குது…

பெண் : ஓ… மச்சான் ஐயா உன் உதட்டருகே…
வளைஞ்சு நிக்குது…

ஆண் : ஏ… புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன்…
வெளைஞ்சு நிக்குது…

பெண் : ஓ… மச்சான் ஐயா உன் உதட்டருகே…
வளைஞ்சு நிக்குது…

ஆண் : கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு…
சர்க்கரைப் பொங்கலைப் போடு…

பெண் : நீ எறும்பு போல நடந்து நடந்து…
இனிப்பை அதிலே தேடு…

ஆண் : கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு…
சர்க்கரைப் பொங்கலைப் போடு…

பெண் : நீ எறும்பு போல நடந்து நடந்து…
இனிப்பை அதிலே தேடு…

ஆண் : சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…

ஆண் : ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள… ஹோய்…

—BGM—

ஆண் : ஏ… புள்ளே தாமரைப் பூத்திருக்கு…
தண்ணிக்கு மேலே…

பெண் : ஓ… மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு…
தண்ணிக்குக் கீழே…

ஆண் : ஏ…புள்ளே தாமரைப் பூத்திருக்கு…
தண்ணிக்கு மேலே…

பெண் : ஓ… மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு…
தண்ணிக்குக் கீழே…

ஆண் : ஆம்பளைங்க பூவைப்போல…
வெளியில் சொல்வது உண்டு…

பெண் : ஆயிரம்தான் நெனச்ச போதும்…
அதிலே நாங்க தண்டு…

ஆண் : ஆம்பளைங்க பூவைப்போல…
வெளியில் சொல்வது உண்டு…

பெண் : ஆயிரம்தான் நெனச்ச போதும்…
அதிலே நாங்க தண்டு…

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…

பெண் : பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…

ஆண் : சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…

ஆண் : ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள… ஹோய்…


Notes : Mallu Vetti Song Lyrics in Tamil. This Song from Sorgam Naragam (1977). Song Lyrics penned by Kannadasan. மல்லு வேட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading