Tag Archives: கே கே

பெண்கள் நெஞ்சை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமகாலட்சுமி ஐயர் & கே கேபரத்வாஜ்ஜே ஜே

Pengal Nenjai Song Lyrics in Tamil


பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

பெண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

ஆண் : உன் வேரோடு மழை சிந்த வரவா…
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா…

பெண் : குளிப்பாட்டி அழுக்காக்கவா… ஏய் படவா…
ஆண் : நீ தொடவா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

பெண் : ஹே சண்டை போட வா…
ஆண் : ஹே விட்டு செல்ல வா…

BGM

பெண் : மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்து விடும்…
மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்து விடும்…

BGM

ஆண் : முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும்…
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்…

பெண் : விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும்…
விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும்…

ஆண் : பட்டு கைகளால் நீ தொட்டு கிடந்தால்…
பாறையும் இளமை சுரக்கும்…

பெண் : பாலாற்றில் நீராட்டவா… ஏய் படவா…

ஆண் : தொட வா… தொட வா…
தொட வா… தொட வா… தொட வா…

ஆண் : நான் தொட வா…
தொட வா… தொட வா…

பெண் : ஹே மாதவா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

BGM

பெண் : கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டு விட்டு போ…
கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டு விட்டு போ…

BGM

ஆண் : தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ…
தலையணை சுகம் இல்லை சொல்லி விட்டு போ…

பெண் : பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு…
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு…

ஆண் : உன்னை கலந்தால் முன்னூறு வருஷம்…
நான் கண்ட இளமை நிலைக்கும்…

பெண் : முச்சத்தில் மூப்பேதடா படவா…

ஆண் : நீ தொட வா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா வா வா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

ஆண் : உன் வேரோடு மழை சிந்த வரவா…
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா…

பெண் : ஹே குளிப்பாட்டி அழுக்காக்கவா படவா…
ஆண் : நீ தொடவா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா…


Notes : Pengal Nenjai Song Lyrics in Tamil. This Song from Jay Jay (2003). Song Lyrics penned by Vairamuthu. பெண்கள் நெஞ்சை பாடல் வரிகள்.


பூவுக்கெல்லாம் சிறகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & கே கேவித்யாசாகர்உயிரோடு உயிராக

Poovukellam Siragu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது…
எந்தன் தோட்டத்தில்…
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது…
எந்தன் வானத்தில்…

ஆண் : முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது…
எந்தன் மாதத்தில்…
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது…
எந்தன் ராகத்தில்…

ஆண் : இது எப்படி எப்படி நியாயம்…
எல்லாம் காதல் செய்த மாயம்…
இது எப்படி எப்படி நியாயம்…
எல்லாம் காதல் செய்த மாயம்…

ஆண் : பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது…
எந்தன் தோட்டத்தில்…
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது…
எந்தன் வானத்தில்…

BGM

ஆண் : நிலவை பிடித்து எறியவும் முடியும்…
நீல கடலை குடிக்கவும் முடியும்…
காற்றின் திசையை மாற்றவும் முடியும்…
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்…
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே…
ஐயோ என்னால் முடியவில்லை…

ஆண் : சுற்றும் உலகின் விட்டம் தெரியும்…
சூரியன் பூமி தூரமும் தெரியும்…
கங்கை நதியின் நீளமும் தெரியும்…
வங்க கடலின் ஆழமும் தெரியும்…
காதல் என்பது சரியா தவறா…
இதுதான் எனக்கு தெரியவில்லை…

BGM

ஆண் : ஒற்றை பார்வை உயிரை குடித்தது…
கற்றை குழல் கைது செய்தது…
மூடும் ஆடை முத்தமிட்டது…
ரத்தம் எல்லாம் சுட்டு விட்டது…
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே…
ஐயோ என்னால் முடியவில்லை…

ஆண் : மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது…
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது…
இதயம் இதயம் மலா்ந்துவிட்டது…
இசையின் கதவு திறந்துவிட்டது…
காதல் என்பது சரியா தவறா…
இதுதான் எனக்கு தெரியவில்லை…

ஆண் : பூவுக்கெல்லாம்…

ஆண் : பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது…
எந்தன் தோட்டத்தில்…
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது…
எந்தன் வானத்தில்…

ஆண் : முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது…
எந்தன் மாதத்தில்…
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது…
எந்தன் ராகத்தில்…

ஆண் : இது எப்படி எப்படி நியாயம்…
எல்லாம் காதல் செய்த மாயம்…
இது எப்படி எப்படி நியாயம்…
எல்லாம் காதல் செய்த மாயம்…


Notes : Poovukellam Siragu Song Lyrics in Tamil. This Song from Uyirodu Uyiraga (1998). Song Lyrics penned by Vairamuthu. பூவுக்கெல்லாம் சிறகு பாடல் வரிகள்.


மை நேம் இஸ் பில்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்நவீன் & கே கேயுவன் ஷங்கர் ராஜாபில்லா

My Name Is Billa Song Lyrics in Tamil


BGM

ஆண் : பில்லா…

BGM

ஆண் : மை நேம் இஸ் பில்லா…
வாழ்கை எல்லாம்…

BGM

ஆண் : மை நேம் இஸ் பில்லா…
வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல…
போகாத ஊர் இல்ல அய்யா…
நல்ல நண்பன் இல்லை என்றால்…
எங்கும் போனாலும் விடமாட்டேன்…
நானாக தொடமாட்டேன் அய்யா… ஒஓஹோ…

BGM

ஆண் : ஹே… யாருக்கு யார் சொந்தம் இல்லை…
நட்பின் மேல் நம்பிக்கை இல்லை…
வேகங்கள் வேதங்கள் கூடு…
தேவைகள் ஓய்ந்தாலே ஓடு…

ஆண் : வாழ்வுக்கும் சாவுக்கும்…
நடுவில்தான் நான் செல்லும் பாதை…
சரியென்ன தவறென்ன…
எவருக்கு எது வேண்டும் செய்வோம்…

ஆண் : மை நேம் இஸ் பில்லா…
வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல…
போகாத ஊர் இல்ல அய்யா…
நல்ல நண்பன் இல்லை என்றால்…
எங்கும் போனாலும் விடமாட்டேன்…
நானாக தொடமாட்டேன் அய்யா… ஒஓஹோ…

BGM

ஆண் : வந்தார்கள் போனார்கள் நேற்று…
யாருக்கும் சுவடில்லை இன்று…
நீ என்ன நான் என்ன பந்தம்…
உறவில்லா உறவில்தான் இன்பம்…

ஆண் : மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள்…
இருந்தால்தான் நன்மை…
என்னுள்ளே எவனுக்கும் இடமில்லை…
இதுதானே உண்மை…

ஆண் : மை நேம் இஸ் பில்லா…
வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல…
போகாத ஊர் இல்ல அய்யா…
நல்ல நண்பன் இல்லை என்றால்…
எங்கும் போனாலும் விடமாட்டேன்…
நானாக தொடமாட்டேன் அய்யா… ஒஓஹோ…

BGM


Notes : My Name Is Billa Song Lyrics in Tamil. This Song from Billa (2007). Song Lyrics penned by Pa. Vijay. மை நேம் இஸ் பில்லா பாடல் வரிகள்.


வார்த்த ஒன்னு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கேயுவன் ஷங்கர் ராஜாதாமிரபரணி

Vaartha Onnu Song Lyrics in Tamil


ஆண் : வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு…
கொல்ல பாக்குதே…
அது வாள் எடுத்து வாள் எடுத்து…
வெட்ட பாக்குதே…

BGM

ஆண் : வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு…
கொல்ல பாக்குதே…
அது வாள் எடுத்து வாள் எடுத்து…
வெட்ட பாக்குதே…

ஆண் : நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு…
தப்பா போனதே…
என் தாமிரபரணி தண்ணி இப்போ…
உப்பா போனதே…

ஆண் : நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன்…
மனசு வெந்து போச்சே…
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி…
இதயம் சுருங்கி போச்சே…

BGM

ஆண் : வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு…
கொல்ல பாக்குதே…
அது வாள் எடுத்து வாள் எடுத்து…
வெட்ட பாக்குதே…

BGM

ஆண் : உறவுகள் எனக்கது புரியல…
சில உணர்வுகள் எனக்கது விளங்கல…
கலங்கரை விளக்கமே இருட்டிலே…

ஆண் : பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன்…
மாமன் ரத்தத்துல துக்கத்த தெளிச்சிட்டேன்…
அன்புல அரளிய வெதைச்சுட்டேன்…

ஆண் : அட்ட கத்தி தான்னு நான்…
ஆடி பாத்தேன் விளையாட்டு…
வெட்டு கத்தியாக அது மாறி…
இப்போ வினையாச்சு…

ஆண் : பட்டாம்பூச்சி மேலே ஒரு…
கொட்டாங்குச்சி மூடியதே…
கண்ணாமூச்சி ஆட்டத்திலே கண்ண…
இப்போ காணலியே…

ஆண் : வார்த்த ஒன்னு… வார்த்த ஒன்னு…

BGM

ஆண் : படைச்சவன் போட்ட முடிச்சிது…
என் கழுத்துல மாட்டி இறுக்குது…
பகையிலே மனசுதான் பதறுது…

ஆண் : கனவுல பெய்யிற மழையிது…
நான் கை தொடும் போது மறையுது…
மேகமே சோகமாய் உறையுது…

ஆண் : சூரத்தேங்காய் போல என்னை…
சுக்கு நூறா உடைக்காதே…
சொக்கப் பனை மேல நீ தீய அள்ளி வீசாதே…

ஆண் : எட்டி எட்டிப் போகையிலே ஈரக்குலை வேகிறதே…
கூட்டாஞ்சோறு ஆக்கையிலே தீ காத்து வீசியதே…

ஆண் : வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு…
கொல்ல பாக்குதே…
அது வாள் எடுத்து வாள் எடுத்து…
வெட்ட பாக்குதே…

ஆண் : நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு…
தப்பா போனதே…
என் தாமிரபரணி தண்ணி இப்போ…
உப்பா போனதே…

ஆண் : நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன்…
மனசு வெந்து போச்சே…
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி…
இதயம் சுருங்கி போச்சே…

BGM


Notes : Vaartha Onnu Song Lyrics in Tamil. This Song from Thaamirabharani (2007). Song Lyrics penned by Na Muthukumar. வார்த்த ஒன்னு பாடல் வரிகள்.


பட்டாம்பூச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கே கே & ரீட்டாவித்யாசாகர்காவலன்

Pattambuchi Song Lyrics in Tamil


BGM

ஆண் : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே…
பெண் : காதல் தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே…

ஆண் : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே…
பெண் : காதல் தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே…

ஆண் : யானை தந்தத்தின் சிலை நீயே…
தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே…

பெண் : காதல் வீசிய வலை நீயே…
என்னைக்கட்டி இழுக்காதே…

BGM

ஆண் : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே…
பெண் : காதல் தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே…

BGM

பெண் : எதைத்தருவது நான் என்று…
எதைப்பெறுவதுதான் என்று…
குறுக்கும் நெடுக்கும் குழந்தைப்போல இதயம் குதித்தோட…

ஆண் : தலை அசைக்குது உன் கண்கள்…
தவி தவிக்குது என் நெஞ்சம்…
ஒருத்திப்போல ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட…

பெண் : ஞாபகம் உன் ஞாபகம்…
அது முடியாத முதலாகும்…

ஆண் : பூ முகம் உன் பூ முகம்…
அது முடியாத முதல் பாகம்…

பெண் : பெண் கவிதை இவள்தானே…
உன் இதழால் படிப்பாயோ…
கண் இமையால் என்னை காதல் திறப்பாயோ…

ஆண் : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே…
பெண் : காதல் தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே…

BGM

ஆண் : அலைவரிசையில் நீ சிரிக்க…
தொலை தொடர்பினில் நான் இருக்க…
உதடும் உதடும் பேசும்பொழுது…
உலகை மறந்தேனே…

பெண் : உனது அருகினில் நான் இருக்க…
உயிர் குளத்தினில் பூ முளைக்க…
இரண்டாம் முறையாய் இதயம் துடிக்க…
புதிதாய் பிறந்தேனே…

ஆண் : மாலையில் பொன் மாலையில்…
உன் மடிமீது விழுவேனே…

பெண் : மார்பினில் உன் மார்பினில்…
நான் மருதாணி மழைதானே…

ஆண் : வெண்ணிலவோ நெடுந்தூரம்…
பெண் நிலவோ தொடும் தூரம்…
உன் மழையில் நனைந்தாலே காய்ச்சல் பறந்தோடும்…

ஆண் : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே…
பெண் : காதல் தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே…

ஆண் : யானை தந்தத்தின் சிலை நீயே…
தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே…

பெண் : காதல் வீசிய வலை நீயே…
என்னைக்கட்டி இழுக்காதே…


Notes : Pattambuchi Song Lyrics in Tamil. This Song from Kaavalan (2011). Song Lyrics penned by Kabilan. பட்டாம்பூச்சி பாடல் வரிகள்.


மொழ மொழன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே கே & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்குருவி

Mozha Mozhannu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…
ஆண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…

பெண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…
பெண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…

BGM

ஆண் : நீயும் நானும் ஜோடிதான்…
சேர்ந்து நாமும் ஆடிதான்…
ஆட்டம் பாட்டம் குடிதான்…
வந்த கூட்டம் கோடிதான்…

ஆண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

BGM

ஆண் : ஏ… தில்லுமுல்லு வள்ளியம்மா…
தில்லிருந்தா நில்லடிம்மா…
தில்லாலங்கடி ஆடுவோமா…
திருட்டுதனம் பண்ணுவோமா…
குற்றமா ஆத்தா குற்றமா சொல்லடிம்மா…
சாஞ்சிக்கலாம் சம்மதமா…

ஆண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

BGM

பெண் : ஏ… தொட தொடன்னு நடுங்குறான்…
பட படன்னு சிரிக்கிறான்…
வெட வெடன்னு இருக்கிறான்…
கொட கொடன்னு கொடையுறான்…

பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

பெண் : ஏ… பம்பரமா சுத்துறியே…
மந்திரமா மின்னுறியே…
மந்திரனா மயக்குறியே…
நீதான் படவா நீதான் என் கணக்கு…
கொத்து கொத்தா நான் உனக்கு…

பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

BGM

ஆண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

ஆண் : சிக்கு புக்கு ரயிலு வண்டி…
சித்திரை பூ சேலை கட்டி…
சின்ன பையன் மனசு மட்டும்…
சில்லு சில்லா உடைக்குதடி…
ஏன்னா ஆத்தா ஏன்னா கலாசுதான்…
சேர்ந்தா பட்டாசுதான்…

ஆண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…
ஆண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…

BGM

பெண் : கன்னமுழி என்ன சுத்தும்…
மீச முடி கன்ன குத்தும்…
கை விரலும் கல்ல குத்தும்…
சாமி வந்து உன்ன குத்தும்…
வாடா வாடா சின்ன மச்சான்…
என் மனச சிக்க வச்சான்…

பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

BGM

ஆண் : நீயும் நானும் ஜோடிதான்…
சேர்ந்து நாமும் ஆடிதான்…
ஆட்டம் பாட்டம் குடிதான்…
வந்த கூட்டம் கோடிதான்…

ஆண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

ஆண் : இஞ்சி மிட்டாய் இடுப்பழகி…
மொழ கொட்டாய் உடுப்பழகி…
பெப்பர் முட்டை பல்லழகி…
கொட்ட பாக்கு கண்ணழகி…

ஆண் : ராங்கி மனச வாங்கி எங்க வச்ச…
ஏன்டி என்ன பொங்க வச்ச…

BGM

பெண் : ஏ… தொட தொடன்னு நடுங்குறான்…
பட படன்னு சிரிக்கிறான்…
வெட வெடன்னு இருக்கிறான்…
கொட கொடன்னு கொடையுறான்…

பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

பெண் : ஹே… சித்தாலத்தில் குளிச்சிக்கலாம்…
தேக்கடியில் துவட்டிகலாம்…
குன்னூருல ஒளிஞ்சுக்கலாம்…
குளிதலையில தேடிக்கலாம்…

பெண் : வா வா வா வா கோவா ஓடிக்கலாம்…
பாண்டி ஆட்டம் ஆடிக்கலாம்…

பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

BGM

பெண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…
ஆண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…

BGM


Notes : Mozha Mozhannu Song Lyrics in Tamil. This Song from Kuruvi (2008). Song Lyrics penned by Pa.Vijay. மொழ மொழன்னு பாடல் வரிகள்.


குண்டு குண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிகே கே, சுனிதி சவுகான் & ஷாலினிவித்யாசாகர்தூள்

Gundu Gundu Song Lyrics in Tamil


BGM

ஆண் : லெட்ஸ் பார்டி…

BGM

ஆண் : எவ்ரிபடி…

BGM

ஆண் : குண்டு குண்டு குண்டு பொண்ணே…
கூப்பிடுது ரெண்டு கண்ணே…

பெண் : வெவ்வ வெவ்வ வெவ்வ…
வெவ்வ வெவ்வ வெவ்வ…
வச்சிக்குறேன் சிக்கையிலே…

ஆண் : கண்ணாடி ரோசாவே…
மீச குத்தி காயமா…

பெண் : என்னோட ராசாவே…
பூச வெக்க வேணுமா…

ஆண் : ஆணா ஆவணா…
அத்தை வச்ச பேர் என்ன…

பெண் : இனா ஈயனா…
எழுத்து கூட்டி பாருனா…

ஆண் : குண்டு குண்டு குண்டு பொண்ணே…
கூப்பிடுது ரெண்டு கண்ணே…

பெண் : வெவ்வ வெவ்வ வெவ்வ…
வெவ்வ வெவ்வ வெவ்வ…
வச்சிக்குறேன் சிக்கையிலே…

BGM

பெண் : ஹே… காதோரம் கிள்ளாதே…
கனவுக்குள் தள்ளாதே…
முந்தானை காற்றாலே அடி வாங்கி கொல்லாதே…
மீறாதே மீறாதே நீ என்னைதானே…

ஆண் : பாசாங்கு காட்டாதே…
பசி அள்ளி ஊட்டாதே…
கண்ணாலே தப்பிது கை குள்ளே மாட்டாதே…
தீராதே தீராதே நான் தின்னதானே…

பெண் : தட்டு தடு மாறி…
என்னை கொட்டி கொடுப்பேனே…

ஆண் : முத்த படி ஏறி…
உன்னை முட்டி திறப்பேனே…

பெண் : ஆணா ஆவணா…
ஆண் : அத்தை வச்ச பேர் என்ன…

ஆண் : இனா ஈயனா…
பெண் : எழுத்து கூட்டி பாருனா…

ஆண் : குண்டு குண்டு குண்டு பொண்ணே…
கூப்பிடுது ரெண்டு கண்ணே…

பெண் : வெவ்வ வெவ்வ வெவ்வ…
வெவ்வ வெவ்வ வெவ்வ…
வச்சிக்குறேன் சிக்கையிலே…

BGM

ஆண் : காடெங்கும் ஓடாதே…
கண்ணாலே தேடாதே…
காயாத கானகத்தே கண்ணீயில் மாட்டாதே…
போகாதே போகாதே புலி மானே…

பெண் : மார்போரம் சாயாதே…
விரலாலே மேயாதே…
ஆசைக்கு பொய் சொல்லி ஆர்வத்தில் மீறாதே…
கண்ணாலே கண்ணுக்குள் அயே எட்டி பாரேன்…

ஆண் : கன்னதிரை மேலே…
ஒரு வண்ண படம் பார்த்தேன்…

பெண் : சின்ன திரை போலே…
இவன் ஜன்னல் வழி பார்த்தேன்…

ஆண் : ஆணா ஆவணா…
அத்தை வச்ச பேர் என்ன…

BGM

பெண் : இனா ஈயனா…
எழுத்து கூட்டி பாருனா…

BGM


Notes : Gundu Gundu Song Lyrics in Tamil. This Song from Dhool (2003). Song Lyrics penned by Arivumathi. குண்டு குண்டு பாடல் வரிகள்.


Strawberry Kannae Song Lyrics in Tamil

ஸ்ட்ராபெர்ரி கண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே கே & ஃபெபி மணிஏ. ஆர். ரகுமான்மின்சார கனவு

Strawberry Kannae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஸ்ட்ராபெர்ரி கண்ணே…
விண்வெளி பெண்ணே…
சில்வர் ஸ்பூன் கைய்யோடு பிறந்தவள் நீயே…
ஒரு ஃபிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே…

ஆண் : தங்க தட்டில் சோரு…
பென்சு ஏசி காரு…
இருந்தும் நெஞ்சோடு சொல்லாத பாரம் என்ன…

ஆண் : தனிமை இனிமையாக…
இளமை குளுமையாக…
உனது கண்ணோடு சொல்லாத சோகம் என்ன…

ஆண் : என்னடா ரியாக்‌ஷன் இல்ல…
வால்யும் ஏத்தனுமோ…

ஆண் : ஸ்ட்ராபெர்ரி கண்ணே…
விண்வெளி பெண்ணே…
சில்வர் ஸ்பூன் கைய்யோடு பிறந்தவள் நீயே…
ஒரு ஃபிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே…

ஆண் : தங்க தட்டில் சோரு…
பென்சு ஏசி காரு…
இருந்தும் நெஞ்சோடு சொல்லாத பாரம் என்ன…

ஆண் : தனிமை இனிமையாக…
இளமை குளுமையாக…
உனது கண்ணோடு சொல்லாத சோகம் என்ன…

பெண் : உன் பெண்ணழகையும் பேரழகையும் இப்படி மறைத்தால்…
உன் கற்பனைகளின் அற்புதங்களை இப்படி எரித்தால்…
பிடிக்குமே பைத்தியம்…
பார்க்கவா வைத்தியம்…

BGM

பெண் : பழைய பைத்தியம் பைத்தியம் நானும் இல்லை…
உனது வைத்தியம் வைத்தியம் தேவை இல்லை…
எனது முன்னவர் யாருமே மூடர் இல்லை…
என் நெஞ்சினில் குழப்பம் இல்லை…

பெண் : கணவன் சேவையில் சேவையில் இன்பம் இல்லை…
மனிதர் சேவையில் சேர்கையில் துன்பம் இல்லை…
நான் யாருக்கும் பூமியில் பாரம் இல்லை…
என் பாதையில் இருளும் இல்லை…

பெண் : நேற்று காதல் கண்டு…
இன்று கணவன் கொண்டு…
நாளை அடுப்பிலே வெந்திட ஆசை இல்லை…

பெண் : முதலில் மாலை சூட்டும்…
பிறகு விலங்கும் பூட்டும்…
உங்க கச முச கல்யாணம் தேவை இல்லை…

ஆண் : அய்யோ கல்யாணம் வேணாமா…
ரூட்ட மாத்து…

BGM

ஆண் : என்ன கண்கள் என்ன கண்கள்…
என்ன கன்னம் என்ன கன்னம்…
தங்கம் பூசிய தாமரை கன்னம்…
என்ன உதடு என்ன உதடு…
செர்ரி பழம் போல் சிவந்த உதடு…

ஆண் : ஆஆன்… ம்ம் ஓகே ஆனா நோஸ்தான்…
கொஞ்சம் ஓவர் சைஸ்…
இட்ஸ் ஓகே மா…
பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்குவோம்…

BGM

பெண் : என் மூக்கை எனக்கு பெரியதாக…
படைத்தவன் எவனோ…
உனது மூளை அளவை சிரியதாக…
படைத்தவன் அவனே…
நீயோரு புருஷனா மங்கியா மனுஷனா…


Notes : Strawberry Kannae Song Lyrics in Tamil. This Song from Minsara Kanavu (1997). Song Lyrics penned by Vairamuthu. ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் வரிகள்.


சர சர சரவெடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகே கே, ஸ்ரீலேகா பார்த்தசாரதி & எம்.கே. பாலாஜிஹாரிஸ் ஜெயராஜ்இது கதிர்வேலன் காதல்

Sara Sara Saravedi Song Lyrics in Tamil


BGM

ஆண் : சர சர சரவெடி அழகுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
சிரிக்குற சிரிப்புல மனசையும் மடிச்சேன்…

பெண் : சர சர சரவெடி கனவுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச…

ஆண் : பொட்டக் காடும் பூ பூக்க…
நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற…
சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார…

பெண் : பட்டாம்பூச்சி தானாக…
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற…
வெட்டுப் பாற பால் ஊற கொண்டாட வார…

ஆண் : வளையல தொலஞ்சத போல…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு போற…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

பெண் : தொவயலு அரைச்சத போல…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : நீ உசுரையே வளைச்சுட்டுப் போற…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : கோலி கோலி கோலி கோலி…
கோலி கோலி கோலி கோலி கோலி கோலி…
கோலி கோலி கோலி கோலி…
கோலி கோலி கோலி கோலி கோலி கோலி…

பெண் : ஓ… சர சர சரவெடி கனவுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச…

BGM

ஆண் : கருவேலன் காடே…
கிளி வாழும் கூடே…
நெடுநாளா ஆச வச்சேன் நெஞ்சுக்குள்ள…
அத தாண்டி வேற ஒன்னும் சொல்ல இல்ல…

பெண் : நீ சாயங்காலம் வந்துவீசும் காத்து…
நான் உத்துப் பாா்க்க போவ நீயும் வேர்த்து…
வெகு தூரம் போக வேணும்…
அட நீயும் நானும் கைய கோர்த்து…

ஆண் : சர சர சரவெடி அழகுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
சிரிக்குற சிரிப்புல மனசையும் மடிச்சேன்…
மடிச்சேன் மடிச்சேன்…

BGM

பெண் : மழையோட வாசம்…
அதுதானே நேசம்…
வயக்காட்டு சேறு வாசம் ஆசை ஆச்சு…
கருவாட்டுச் சாறு வாசம் காதல் ஆச்சு…

ஆண் : நான் வாய்க்காபோரு இல்ல வாழ தோப்பு…
நீ கிட்ட வந்தா இல்ல பாதுகாப்பு…
ஒன்னாக சேரும் போது…
நமக்குள்ள வேணாம் ஹேப்பு ஹேப்பு…

BGM

பெண் : சர சர சரவெடி கனவுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச…

ஆண் : சர சர சரவெடி அழகுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…

பெண் : நினைக்குற நெனப்புல வயசையும்… ஹாஹா…

ஆண் : பொட்டக்காடும் பூ பூக்க…
நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற…
சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார…

பெண் : பட்டாம்பூச்சி தானாக…
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற…
வெட்டுப் பாற பால் ஊற கொண்டாட வார…

ஆண் : வளையல தொலஞ்சத போல…
ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு போற…

பெண் : தொவயலு அரைச்சத போல…
நீ உசுரையே வளைச்சுட்டுப் போற…

BGM


Notes : Sara Sara Saravedi Song Lyrics in Tamil. This Song from Idhu Kathirvelan Kadhal (2014). Song Lyrics penned by Yugabharathi. சர சர சரவெடி பாடல் வரிகள்.


ஃபீல் மை லவ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகே கேதேவி ஸ்ரீ பிரசாத்குட்டி

Feel My Love Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஃபீல் மை லவ்…

ஆண் : என் காதல் சரியோ தவறோ…
என் காதல் முள்ளோ மலரோ…
என் காதல் முதலோ முடிவோ…
சகியே ஃபீல் மை லவ்…

ஆண் : என் காதல் வெயிலோ நிழலோ…
என் காதல் இனிப்போ கசப்போ…
என் காதல் நிறையோ குறையோ…
சகியே ஃபீல் மை லவ்…

ஆண் : என் காதல் சிலையோ கல்லோ…
என் காதல் சிறகோ சருகோ…
என் காதல் வலியோ சுகமோ…
வெறுத்தோ பிடித்தோ அடித்தோ அணைத்தோ…

ஆண் : ஃபீல் மை லவ்…
ஃபீல் மை லவ்…
ஃபீல் மை லவ்…
ஃபீல் மை லவ்…

ஆண் : என் காதல் சரியோ தவறோ…
என் காதல் முள்ளோ மலர…
என் காதல் சரியோ தவறோ…
என் காதல் முள்ளோ மலர…
என் காதல் முதலோ முடிவோ…
சகியே ஃபீல் மை லவ்…

BGM

ஆண் : ஓ… நான் தந்த பூவை எல்லாம் வீசும் போது…
ஃபீல் மை லவ்…
என் காதல் கடிதம் கிழிக்கும் போது…
ஃபீல் மை லவ்…

ஆண் : என் வீடு தெரியும் ஜன்னல் மூடும் போது…
ஃபீல் மை லவ்…
என் செய்கை எல்லாம் வெறுக்கும் போதும்…
ஃபீல் மை லவ்…

ஆண் : சில வார்த்தை திட்டி பேசு…
அது கூட போதுமே…
என் காதல் வெற்றிப்பெற்ற…
சந்தோஷம் கொள்ளுமே…
வேகத்தில் போகும்போது…
தரை தட்டும் கல்லை கூட…

ஆண் : ஃபீல் மை லவ்…
ஃபீல் மை லவ்…
ஃபீல் மை லவ்…
ஃபீல் மை லவ்…

BGM

ஆண் : என் காதல் சரியோ தவறோ…
என் காதல் முள்ளோ மலரோ…
என் காதல் முதலோ முடிவோ…
சகியே ஃபீல் மை லவ்…

BGM

ஆண் : கைவிசிறி போலே…
உன் கை தீண்டும் வரம் வேண்டாம்…
மின் விசிறியாக வாழ்வேன்…
அழகே ஃபீல் மை லவ்…

ஆண் : பன்னிரெண்டு மணி முள்ளை போல…
சேர ஆசை இல்லை…
தண்டவாளம் போலே தொடர்வேன்…
அன்பே ஃபீல் மை லவ்…

ஆண் : யார் கண்ணை பார்க்க வேண்டும்…
விண்மீன்தான் சொல்லுமா…
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா…
நான் உன்னை காதல் செய்ய…
தேவை இல்லை உன் அனுமதியே…

ஆண் : ஃபீல் மை லவ்…
ஃபீல் மை லவ்…

ஆண் : என் காதல் சரியோ தவறோ…
என் காதல் சரியோ தவறோ…

ஆண் : என் காதல் முள்ளோ மலரோ…
என் காதல் முள்ளோ மலரோ…

ஆண் : என் காதல் சரியோ தவறோ…
என் காதல் முள்ளோ மலரோ…
என் காதல் முதலோ முடிவோ…
சகியே ஃபீல் மை லவ்…


Notes : Feel My Love Song Lyrics in Tamil. This Song from Kutty (2010). Song Lyrics penned by Viveka. ஃபீல் மை லவ் பாடல் வரிகள்.