வார்த்த ஒன்னு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கேயுவன் ஷங்கர் ராஜாதாமிரபரணி

Vaartha Onnu Song Lyrics in Tamil


ஆண் : வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு…
கொல்ல பாக்குதே…
அது வாள் எடுத்து வாள் எடுத்து…
வெட்ட பாக்குதே…

—BGM—

ஆண் : வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு…
கொல்ல பாக்குதே…
அது வாள் எடுத்து வாள் எடுத்து…
வெட்ட பாக்குதே…

ஆண் : நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு…
தப்பா போனதே…
என் தாமிரபரணி தண்ணி இப்போ…
உப்பா போனதே…

ஆண் : நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன்…
மனசு வெந்து போச்சே…
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி…
இதயம் சுருங்கி போச்சே…

—BGM—

ஆண் : வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு…
கொல்ல பாக்குதே…
அது வாள் எடுத்து வாள் எடுத்து…
வெட்ட பாக்குதே…

—BGM—

ஆண் : உறவுகள் எனக்கது புரியல…
சில உணர்வுகள் எனக்கது விளங்கல…
கலங்கரை விளக்கமே இருட்டிலே…

ஆண் : பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன்…
மாமன் ரத்தத்துல துக்கத்த தெளிச்சிட்டேன்…
அன்புல அரளிய வெதைச்சுட்டேன்…

ஆண் : அட்ட கத்தி தான்னு நான்…
ஆடி பாத்தேன் விளையாட்டு…
வெட்டு கத்தியாக அது மாறி…
இப்போ வினையாச்சு…

ஆண் : பட்டாம்பூச்சி மேலே ஒரு…
கொட்டாங்குச்சி மூடியதே…
கண்ணாமூச்சி ஆட்டத்திலே கண்ண…
இப்போ காணலியே…

ஆண் : வார்த்த ஒன்னு… வார்த்த ஒன்னு…

—BGM—

ஆண் : படைச்சவன் போட்ட முடிச்சிது…
என் கழுத்துல மாட்டி இறுக்குது…
பகையிலே மனசுதான் பதறுது…

ஆண் : கனவுல பெய்யிற மழையிது…
நான் கை தொடும் போது மறையுது…
மேகமே சோகமாய் உறையுது…

ஆண் : சூரத்தேங்காய் போல என்னை…
சுக்கு நூறா உடைக்காதே…
சொக்கப் பனை மேல நீ தீய அள்ளி வீசாதே…

ஆண் : எட்டி எட்டிப் போகையிலே ஈரக்குலை வேகிறதே…
கூட்டாஞ்சோறு ஆக்கையிலே தீ காத்து வீசியதே…

ஆண் : வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு…
கொல்ல பாக்குதே…
அது வாள் எடுத்து வாள் எடுத்து…
வெட்ட பாக்குதே…

ஆண் : நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு…
தப்பா போனதே…
என் தாமிரபரணி தண்ணி இப்போ…
உப்பா போனதே…

ஆண் : நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன்…
மனசு வெந்து போச்சே…
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி…
இதயம் சுருங்கி போச்சே…

—BGM—


Notes : Vaartha Onnu Song Lyrics in Tamil. This Song from Thaamirabharani (2007). Song Lyrics penned by Na Muthukumar. வார்த்த ஒன்னு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading