பூவுக்கெல்லாம் சிறகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & கே கேவித்யாசாகர்உயிரோடு உயிராக

Poovukellam Siragu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது…
எந்தன் தோட்டத்தில்…
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது…
எந்தன் வானத்தில்…

ஆண் : முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது…
எந்தன் மாதத்தில்…
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது…
எந்தன் ராகத்தில்…

ஆண் : இது எப்படி எப்படி நியாயம்…
எல்லாம் காதல் செய்த மாயம்…
இது எப்படி எப்படி நியாயம்…
எல்லாம் காதல் செய்த மாயம்…

ஆண் : பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது…
எந்தன் தோட்டத்தில்…
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது…
எந்தன் வானத்தில்…

—BGM—

ஆண் : நிலவை பிடித்து எறியவும் முடியும்…
நீல கடலை குடிக்கவும் முடியும்…
காற்றின் திசையை மாற்றவும் முடியும்…
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்…
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே…
ஐயோ என்னால் முடியவில்லை…

ஆண் : சுற்றும் உலகின் விட்டம் தெரியும்…
சூரியன் பூமி தூரமும் தெரியும்…
கங்கை நதியின் நீளமும் தெரியும்…
வங்க கடலின் ஆழமும் தெரியும்…
காதல் என்பது சரியா தவறா…
இதுதான் எனக்கு தெரியவில்லை…

—BGM—

ஆண் : ஒற்றை பார்வை உயிரை குடித்தது…
கற்றை குழல் கைது செய்தது…
மூடும் ஆடை முத்தமிட்டது…
ரத்தம் எல்லாம் சுட்டு விட்டது…
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே…
ஐயோ என்னால் முடியவில்லை…

ஆண் : மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது…
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது…
இதயம் இதயம் மலா்ந்துவிட்டது…
இசையின் கதவு திறந்துவிட்டது…
காதல் என்பது சரியா தவறா…
இதுதான் எனக்கு தெரியவில்லை…

ஆண் : பூவுக்கெல்லாம்…

ஆண் : பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது…
எந்தன் தோட்டத்தில்…
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது…
எந்தன் வானத்தில்…

ஆண் : முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது…
எந்தன் மாதத்தில்…
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது…
எந்தன் ராகத்தில்…

ஆண் : இது எப்படி எப்படி நியாயம்…
எல்லாம் காதல் செய்த மாயம்…
இது எப்படி எப்படி நியாயம்…
எல்லாம் காதல் செய்த மாயம்…


Notes : Poovukellam Siragu Song Lyrics in Tamil. This Song from Uyirodu Uyiraga (1998). Song Lyrics penned by Vairamuthu. பூவுக்கெல்லாம் சிறகு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading