அன்பே அன்பே நீ என்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & கே.எஸ். சித்ராவித்யாசாகர்உயிரோடு உயிராக

Anbe Anbe Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை…
தேகம் மட்டும் காதல் இல்லை…
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்…
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்…

பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை…
தேகம் மட்டும் காதல் இல்லை…

—BGM—

பெண் : கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும்…
உன்னை உன்னை அழைக்க…

ஆண் : கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள்…
என்னை என்னை உரைக்க…

பெண் : கண்களைத் திறந்து கொண்டு…
நான் கனவுகள் காணுகிறேன்…

ஆண் : கண்களை மூடிக்கொண்டு…
நான் காட்சிகள் தேடுகிறேன்…

பெண் : உன் பொன் விரல் தொடுகையிலே…
நான் பூவாய் மாறுகிறேன்…

ஆண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்…

பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை…
தேகம் மட்டும் காதல் இல்லை…

—BGM—

ஆண் : யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும்…
தீயும் பஞ்சும் நெருங்க…

பெண் : யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது…
ஒன்றில் ஒன்று அடங்க…

ஆண் : உச்சியில் தேன் விழுந்து…
என் உயிருக்குள் இனிக்குதடி…

பெண் : மண்ணகம் மறந்துவிட்டேன்…
என்னை மாற்றுங்கள் பழையபடி…

ஆண் : உன் வாசத்தை சுவாசிக்கிறேன்…
என் ஆயுள் நீளும்படி…

பெண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்…

ஆண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்…

—BGM—


Notes : Anbe Anbe Song Lyrics in Tamil. This Song from Uyirodu Uyiraga (1998). Song Lyrics penned by Vairamuthu. அன்பே அன்பே நீ என் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading