மனமே மனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்பரத்வாஜ்ரோஜாவனம்

Maname Maname Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனமே மனமே தடுமாறும் மனமே…
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே…
பெண்ணைப் பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே…
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே…

ஆண் : மனமே நீ தூங்கிவிடு…
என்னை நினைவின்றி தூங்கவிடு…

ஆண் : மனமே மனமே தடுமாறும் மனமே…
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : காதல் என்ற மாத்திரைக்கு…
எப்போதும் இரண்டு குணம்…
போட்டுக் கொண்டால் போதையைக் கொடுக்கும்…
போகப் போக துாக்கத்தைக் கெடுக்கும்…

ஆண் : காதல் என்ற யாத்திரைக்கு…
எப்போதும் இரண்டு வழி…
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்…
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்…

ஆண் : கண் மூடினால் தூக்கம் இல்லை…
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை…

ஆண் : ஆலவிருட்சம் போல வளருது…
அழகுப் பெண்ணின் நினைப்பு…
வெட்டி எறிந்து பார்த்தேன்…
மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு…

ஆண் : என் நெஞ்சமே பகையானதே…
உயிர் வாழ்வதே சுமையானதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மனமே நீ தூங்கிவிடு…
என்னை நினைவின்றி தூங்கவிடு…

BGM

ஆண் : காதல் தந்த நினைவுகளை…
கழட்டி எறிய முடியவில்லை…
அலைகள் வந்து அடிப்பதனாலே…
கரைகள் எழுந்து ஓடுவதில்லை…

ஆண் : என்னை மறக்க நினைக்கையிலும்…
அவளை மறக்க முடியவில்லை…
உலை மூட மூடிகள் உண்டு…
அலை கடல் மூடிட மூடிகள் இல்லை…

ஆண் : காதலின் கையில் பூக்களும் உண்டு…
காதலின் கையில் கத்தியும் உண்டு…
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா…
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா…

ஆண் : என் வாழ்விலே என்ன சோதனை…
நான் வாழ்வதே என் வேதனை…

ஆண் : மனமே நீ தூங்கிவிடு…
என்னை நினைவின்றி தூங்கவிடு…

ஆண் : மனமே மனமே தடுமாறும் மனமே…
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே…
பெண்ணைப் பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே…
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மனமே நீ தூங்கிவிடு…
என்னை நினைவின்றி தூங்கவிடு…


Notes : Maname Maname Song Lyrics in Tamil. This Song from Rojavanam (1999). Song Lyrics penned by Vairamuthu. மனமே மனமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading