உன்னைப் பார்த்த கண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்பரத்வாஜ்ரோஜாவனம்

Unnai Partha Kangal Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…
ஆண் : போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…

ஆண் : ஒரு தென்றல் போல வந்து…
அன்பே என்னை வேர்க்க வைத்தாய்…
வள்ளல் போல வாழ்வே…
உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்…

ஆண் : உன் பேரை நான் சொல்லி என்னை அழைப்பேன்…
உன்னை இன்று நான் தேடி என்னைத் தொலைத்தேன்…

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…

—BGM—

ஆண் : அன்பே உன் கூந்தலில் நான் கலைந்தேன்…
நீ வைத்த பூக்களில் நான் உதிர்ந்தேன்…
குழி விழும் கண்ணத்துக்குள் நான் விழுந்தேன்…
சிரு நெற்றி வேர்வையில் நான் கரைந்தேனே…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
வாழ்வில் ருசி இல்லை…
மலரே உந்தன் மடியில் வாழ்ந்தால்…
மரணம் இல்லை…

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…
ஆண் : போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…

—BGM—

ஆண் : நான் பார்க்கும் வானவில் வளையல்களில்…
நான் கேட்கும் மெல்லிசை கொலுசுகளில்…
சில்லென்ற நட்சத்திரம் உன் கண்கள்தானோ…
பூமத்திய ரேகை உந்தன் கைகளில்தானோ…

ஆண் : என்ன நிறம் என்ன குணம் காதல் புரியவில்லை…
காதல் கவிதை எதுவும் இன்று தெரியவில்லை…

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…
ஆண் : போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…

ஆண் : ஒரு தென்றல் போல வந்து…
அன்பே என்னை வேர்க்க வைத்தாய்…
வள்ளல் போல வாழ்வே…
உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்…

ஆண் : உன் பேரை நான் சொல்லி என்னை அழைப்பேன்…
உன்னை இன்று நான் தேடி என்னைத் தொலைத்தேன்…

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…

Notes : Unnai Partha Kangal Song Lyrics in Tamil. This Song from Rojavanam (1999). Song Lyrics penned by Vairamuthu. உன்னைப் பார்த்த கண்கள் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading