கருடா கருடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கிருஷ்ணராஜ் & சுஜாதா மோகன்தேவாநட்புக்காக

Garuda Garuda Song Lyrics in Tamil


BGM

பெண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

BGM

பெண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா…
நீ தொடுகையில் கொதிக்குது…
கண்களில் இருப்பது சரியா வரை முறையா…
உடல் இருபுறம் சிவக்குது…

பெண் : யாயி யார் யாரோ…
இது காதல் ஆராரோ…
யாயி யார் யாரோ…
இது காதல் ஆராரோ…

ஆண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

BGM

ஆண் : மனமோகினி என் மடியில் வந்தால்…
அடி சுகம் காணும் உன் தாவணி…
என் கூட்டணி அதில் இணைந்தாலே நீ…
நம் பிள்ளைகள் வரும் பேரணி…

BGM

பெண் : எப்போதுமே அட என்மீது நீ…
இறை கை வைத்து செய்யும்பணி…
இன்ப கனவுக்குள்ளே என்னைச் சிறை வைத்திடும்…
அந்தக் கலையில் நீ கலைமாமணி…

ஆண் : உண்ணாத உணவுக்குச் சுவையேதம்மா…
கண்ணோடு இமை சேரத் தடை ஏனம்மா…

பெண் : முள்ளொன்று இல்லாமல் கடிகாரமா…
கல்யாணம் செய்யும் முன் அதிகாரமா…

ஆண் : ஆரணி பட்டு நீயணி…
நம் கல்யாணம்தானே இனி…

பெண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

BGM

பெண் : செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை…
கோலாரு தங்கம் இது…
கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே…
அட பொய்யான பாகம் எது…

BGM

ஆண் : கண்ணே உனை இங்கு எண்ணாத நாள்…
நான் உண்ணாத நாள் அல்லவா…
அன்பே அன்பே உன் அங்கம் எங்கும்…
என் அடையாளப் பொறி போடவா…

பெண் : தீராத சந்தேகம் உன் தாகமா…
ஆராய்ச்சி செய்யத்தான் என் தேகமா…

ஆண் : இல்லாத சொல்லுக்குப் பொருள் ஏதம்மா…
என் ஆசை முத்தத்தில் முடிவேதம்மா…

பெண் : பூங்கிளி உன் பூங்கிளி…
இந்தப் பூவுக்குள் பன்னீர் தெளி…

ஆண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
பெண் : திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

ஆண் : அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா…
நீ தொடுகையில் கொதிக்குது…

பெண் : கண்களில் இருப்பது சரியா வரை முறையா…
உடல் இருபுறம் சிவக்குது…

ஆண் : யாயி யார் யாரோ…
இது காதல் ஆராரோ…

பெண் : யாயி யார் யாரோ…
இது காதல் ஆராரோ…

ஆண் : கருடா…
பெண் : கருடா… கருடா…
ஆண் : கருடா…


Notes : Garuda Garuda Song Lyrics in Tamil. This Song from Natpukkaga (1998). Song Lyrics penned by Kalidasan. கருடா கருடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading