Tag Archives: ஹாரிஸ் ஜெயராஜ்

கரு கரு விழிகளால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர், கார்த்திக் & கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்பச்சைக்கிளி முத்துச்சரம்

Karu Karu Song Lyrics in Tamil


ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கையில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : நீ…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : என்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெண்…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : மன்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

BGM

ஆண் : புது புது வரிகளால்…
என் கவிதை தாளும் நிறையுதே…
கனவுகள் கனவுகள் வந்து…
கண்கள் தாண்டி வழியுதே…

ஆண் : மறந்திட மறந்திட…
என் மனமும் கொஞ்சம் முயலுதே…
மறுபடி மறுபடி…
உன் முகமே என்னை சூழ…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : மண்ணில்…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : மின்னும்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெள்ளை…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : அம்பால்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

BGM

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் என்றே…
தினமும் போகும்…
மறு நாள் வருமா என்றே…
இரவில் இதயம் சாகும்…

ஆண் : பேசும் போதே இன்னும்…
ஏதோ தேடும்…
கையின் ரேகை போலே…
கள்ளத்தனம் ஓடும்…

BGM

ஆண் : நீரே இல்லா பாலையிலே…
நின்று பெய்யும் மழை மழை…
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி…
தொடர்ந்திடும் பிழை பிழை…

ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண் மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கயில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : தனி ஒரு அன்றில் நீதானா…
குழு : இலை சிந்தும் மரமே…

ஆண் : புயல் தரும் தென்றல் நீதானா…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : புதையல் நீதானா…
குழு : மதன் பின்னும் வலையா…

குழு : ஒரு மல்லி சரமே…


Notes : Karu Karu Song Lyrics in Tamil. This Song from Pachaikili Muthucharam (2007). Song Lyrics penned by Thamarai. கரு கரு விழிகளால் பாடல் வரிகள்.


சூடாமணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ரஞ்சித் & பாப் ஷாலினிஹாரிஸ் ஜெயராஜ்அருள்

Soodamani Song Lyrics in Tamil


குழு : சூடாமணி மச்சினியே…

BGM

ஆண் : சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற…
கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற…

BGM

ஆண் : சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற…
கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற…

பெண் : சண்டியரை போலதானே மிரட்டுற…
என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற…

ஆண் : கோழி பிரியாணி…
நான் வாங்கி தாரேன் வா நீ…
மூக்கு முட்ட தின்னு புட்டு தூங்காதடி…

பெண் : ஆசையா ஆசையா விடிஞ்சதும் பூசையா…
ஆண் : செல்லமா செல்லமா சம்மதம் சொல்லம்மா…

BGM

குழு : சூடாமணி… ஹோஜா ஹோஜா…
சூடாமணி மச்சினியே…

ஆண் : வெள்ளை குதிரையில ஜோரா நான் வருவேன்…
கொங்கு நாட்டு பெண்ணே உன்னை தூக்கி கிட்டு போவேன்…
கெஞ்சி கெஞ்சி கேட்டா கூட உன்னை விடமாட்டேன்…

பெண் : திமிரா அலையுறியே வீணா கொலையுறியே…
கண்ணாமூச்சி ஆட்டத்திலும் நானும் தோற்க மாட்டேன்…
கொஞ்சி கொஞ்சி கேட்டா கூட என்னை தர மாட்டேன்…

ஆண் : சித்தெறும்பு போல முத்தம் கொடுத்தா…
செங்கரும்பு நீதான் என்ன பண்ணுவ…

பெண் : வித்தை எல்லாம் நீதான் காட்ட பாக்குற…
வீணா வம்பு செஞ்சு நோட்டம் பாக்குற…

ஆண் : நெருங்கவா நெருங்கவா உன்னை நான் நெருங்கவா…
பெண் : அடக்கவா அடக்கவா உன்னை நான் அடக்கவா…

ஆண் : ஆத்தா… சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற…
ஐயோ… கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற…

பெண் : சண்டியரை போலதானே மிரட்டுற…
என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற…

BGM

குழு : சூடாமணி சூடாமணி…
அடி சுட்டு புட்ட வெத்தலை நீ…

குழு : தோடா ஹையோடா…
தோடா ஹையோடா…

பெண் : ஆசை அடங்கலையா மீசை மடங்கலையா…
ஆம்பளைக்கு எப்போதுமே கையு கொஞ்சம் நீளம்…
குழு : ஓ யே…

பெண் : பக்கத்துல பொண்ணு இருந்தா…
சீண்டி பார்க்க தோணும்…
குழு : ஆஹா…

ஆண் : பழச கொடையிறியே மனச கெடையிறியே…
பொம்பளைக்கு எப்பவுமே வாயி கொஞ்சம் நீளம்…
குழு : ஆமா…

ஆண் : ஆம்பளைய கண்டா போதும்…
ஜாடை பேச தோணும்…

பெண் : வீட்டுக்காரி நானும் அடம் புடிச்சா…
வீட்டுக்காரன் நீயும் என்ன பண்ணுவ…

ஆண் : தப்பு செஞ்சா கூட கொஞ்சம் ரசிப்பேன்…
கொஞ்சம் நீயும் அசந்தா காத கடிப்பேன்…

பெண் : மொரடனா இருக்கிற திருட தான் பாக்குற…
ஆண் : கொஞ்சினா மிஞ்சுற மிஞ்சினா கெஞ்சுற…

ஆண் : சூடாமணி ரொம்ப சூடா…
கோவ பட வேணாம் வேணாம்…

ஆண் : சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற…
குழு : அயே மச்சான் மச்சான்…
ஆண் : கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற…
குழு : அயே மச்சான் மச்சான்…

பெண் : சண்டியரை போல தானே மிரட்டுற…
குழு : அயே மச்சினிச்சி…
பெண் : என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற…
குழு : அயே மச்சினிச்சி…

ஆண் : சூட கோழி பிரியாணி…
நான் வாங்கி தாரேன் வா நீ…
மூக்கு முட்ட தின்னு புட்டு தூங்காதடி…

பெண் : ஆசையா ஆசையா விடிஞ்சதும் பூசையா…
ஆண் : செல்லமா செல்லமா சம்மதம் செப்பம்மா…


Notes : Soodamani Song Lyrics in Tamil. This Song from Arul (2004). Song Lyrics penned by Snehan. சூடாமணி பாடல் வரிகள்.


பத்து விரல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஹாரிஸ் ஜெயராஜ்அருள்

Pathu Viral Song Lyrics in Tamil


BGM

பெண் : பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல் தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

பெண் : மூங்கில் காட்டு வண்டே…
என் மூளை கொடையும் நண்டே…
உன் பத்து விரலின் பசியை போக்கும்…
பந்தி நான்தானா…

ஆண் : அடி கொல்லைகார கண்ணே…
சிறு கொலைகள் செய்யும் பெண்ணே…
அட எட்டி போனா என்ன…
உன்ன விட்டு செல்வேனா… ஓஓ…

பெண் : திமிர் கொண்ட அழக மறைப்பதென் கடமை…
திரை விளக்காமல் பறிப்பது உன் திறம…

ஆண் : அழக மறைச்சா அது கொடுமை… ஓ…

பெண் : பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல்தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

BGM

பெண் : மனச கிள்ளும் மனுஷா…
அட மன்மத பாஷ தெலுசா…

பெண் : உடைகளை துளைக்கும் பார்வைகளாலே…
உள்ளுயிர் வரைக்கும் தடவுகின்றாய்…
விரல்கள் செய்யும் வேலைகள் எல்லாம்…
விழிகளாலே நடத்துகின்றாய்…

ஆண் : உன் வயச பாத்தா கொஞ்சம்தானே…
ஆனா வயச மீறிய நெஞ்சம்தானே…

பெண் : பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல்தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

BGM

பெண் : வெட்கம் காணோம் ஐயா…
அதை திருடி போனவன் நீயா…

பெண் : எதுவும் ஒட்டாத பாதரசம் போல…
இதுவரை இருந்தேன் தனிமையில…
ஓசையில்லாத பிம்பத்தை போல…
விழுந்து விட்டாயே மனசுக்குள்ள…

ஆண் : இன்னும் இன்னும் ஆழம் போவேன்…
உன் இதயத்துக்குள் புதையல் எடுப்பேன்…

பெண் : பத்து விரல் உனக்கு…
ஆண் : பத்து விரல் எனக்கு…
பெண் : ஒத்த விரல் மட்டும்தான்…
ஆண் : தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல்தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

பெண் : மூங்கில் காட்டு வண்டே…
என் மூளை கொடையும் நண்டே…
உன் பத்து விரலின் பசியை போக்கும்…
பந்தி நான்தானா…

ஆண் : அடி கொல்லைகார கண்ணே…
சிறு கொலைகள் செய்யும் பெண்ணே…
அட எட்டி போனா என்ன…
உன்ன விட்டு செல்வேனா… ஓஓ…

ஆண் : திமிர் கொண்ட அழக மறைப்பது உன் கடமை…
திரை விளக்காமல் பறிப்பது என் திறம…

ஆண் : அழக மறைச்சா அது கொடுமை… ஹோய் ஹோய்…

BGM


Notes : Pathu Viral Song Lyrics in Tamil. This Song from Arul (2004). Song Lyrics penned by Vairamuthu. பத்து விரல் பாடல் வரிகள்.


சிறு சிறு உறவுகள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

Sirusiru Uravugal Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிறு சிறு உறவுகள் பிரிவுகள்…
என் நினைவுக்குள்… ஓ…
வர வர கசக்குது கசக்குது…
என் இளமையும்… ஹேய்…

ஆண் : நினைத்தது நடந்தது முடிந்தது…
என் கனவுக்குள்… ஹான்…
என்னாச்சோ தெரியலையே…

BGM

ஆண் : சிறு சிறு உறவுகள் பிரிவுகள்…
என் நினைவுக்குள்… ஓ…
பெண் : நினைவுக்குள்… ஓ…

ஆண் : வர வர கசக்குது கசக்குது…
என் இளமையும்… ஹேய்…
பெண் : இளமையும்… ஹேய்…

ஆண் : நினைத்தது நடந்தது முடிந்தது…
என் கனவுக்குள்… ஹான்…
என்னாச்சோ தெரியலையே…

BGM


Notes : Sirusiru Uravugal Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Pa. Vijay. சிறு சிறு உறவுகள் பாடல் வரிகள்.


என்னை போலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ரா & சுசித்ராஹாரிஸ் ஜெயராஜ்லேசா லேசா

Ennai Polave Song Lyrics in Tamil


பெண் : என்னை போலவே காற்று…
இட்டுக்கட்டும் பாட்டு இனிமை…
என்னை போலவே பூத்து…
எட்டி பார்க்கும் நாத்து இளமை…

பெண் : ஏரி கரையில் எழுந்து ஆடும்…
சிறு குறிஞ்சி பூவும்…
என் கூந்தல் தானே தேடும்…

பெண் : நீரின் அலையில் நடனமாடும்…
சிறு வண்ண மீன்கள்…
என் விழிகளை கண்டு ஆடும்…

பெண் : போகும் இடம் எங்கும்…
என் பின் வரும் அந்த வானம்…
என் மேல் காதல் கொண்டால்…
அடி என்னடி செய்வேன் நானும்…

பெண் : என்னை போலவே காற்று…
இட்டுக்கட்டும் பாட்டு இனிமை…
என்னை போலவே பூத்து…
எட்டி பார்க்கும் நாத்து இளமை… யை யை யை…

குழு : கம் ஆன் டேக் மீ அவுட் இன் திஸ் சிட்டி…
ஐ அம் ஜஸ்ட் வெய்டிங் பார் யுவர் கால் —BGM—
கம் ஆன் ஓவர் லெட்ஸ் கெட் கிரேசி…
லெட்ஸ் கெட் பார்ட்டி ஒன் அண்ட் ஆல்…

குழு : இளமை இளமை இளமை இளமை… வோஹா…
இனிமை இனிமை இனிமை இனிமை…
இளமை மை இளமை மை இளமை மை இளமை…
இனிமை மை இனிமை மை இனிமை மை இனிமை…

BGM

பெண் : வீசும் சாரலில் வீழும் தூறலில்…
குழு : நனைந்திடலாம் நாம் நனைந்திடலாம்…
பெண் : வாட்டும் வாடையில் வீதி மேடையில்…
குழு : நடந்திடலாம் நாம் நடந்திடலாம்…

பெண் : உள்ளூர உண்டாகும் உற்சாகம் ஓர் ஆயிரம்…
ஒன்றல்ல ரெண்டல்ல உல்லாச பூங்காவியம்…
காட்டாறு போல நம் பாட்டாறு ஓடுது…
கரையோர நாணல்கள் கை கொட்டி ஆடுது…
நன்னாளிது பொன்னாளிது… ஓஹோ ஹோஹோஹோ…

குழு : கம் ஆன் ஓவர் லெட்ஸ் கெட் கிரேசி…
கம் ஆன் ஓவர் லெட்ஸ் கெட் கிரேசி…

பெண் : என்னை போலவே காற்று…
இட்டுக்கட்டும் பாட்டு இனிமை…
என்னை போலவே பூத்து…
எட்டி பார்க்கும் நாத்து இளமை…

BGM

பெண் : பன்னீர் பூக்களில் பட்டாம் பூச்சிகள்…
குழு : படுத்திருக்கு ஹோய் படுத்திருக்கு…
பெண் : பூவின் வாய் வழி பொங்கும் தேன் துளி…
குழு : கொடுத்திருக்கு ஹோய் கொடுத்திருக்கு…

பெண் : முத்தங்கள் வைக்கின்ற சத்தங்கள் நான் கேட்கிறேன்…
மொத்தத்தில் சித்தத்தில் பித்தேறி நான் வேர்கிறேன்…
கல்யாண நாடகம் கண்ணுக்குள் தோன்றுது…
ஏதேதோ ஆசையை நெஞ்சுக்குள் ஊன்றுது…
எம்மாடியோ எப்பாடியோ… ஹை யை யை ஏஹே…

BGM

பெண் : தனன் நனனா நானா…
தனன நானா இனிமை…
என்னை போலவே பூத்து…
எட்டி பார்க்கும் நாத்து இளமை…

பெண் : ஏரி கரையில் எழுந்து ஆடும்…
சிறு குறிஞ்சி பூவும்…
என் கூந்தல் தானே தேடும்…

பெண் : நீரின் அலையில் நடனமாடும்…
சிறு வண்ண மீன்கள்…
என் விழிகளை கண்டு ஆடும்…

பெண் : போகும் இடம் எங்கும்…
என் பின் வரும் அந்த வானம்…
என் மேல் காதல் கொண்டால்…
அடி என்னடி செய்வேன் நானும்…

BGM


Notes : Ennai Polave Song Lyrics in Tamil. This Song from Lesa Lesa (2002). Song Lyrics penned by Vaali. என்னை போலவே பாடல் வரிகள்.


முதல் முதலாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலியுகேந்திரன், ஸ்ரீமதுமிதா & திப்புஹாரிஸ் ஜெயராஜ்லேசா லேசா

Mudhal Mudhalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…

குழு : உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே…
அழகு மின்னல் ஒன்று அடித்திட…
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே…
இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட…

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…

BGM

ஆண் : நீயும் நீயும் ஒன்றல…
எந்த தீயும் உன் போல…
குழு : சுடுவதில்லை என்னை சுடுவதில்லை…

ஆண் : வேண்டாம் வேண்டாம் என்றாலும்…
விலகி போய் நான் நின்றாலும்…
குழு : விடுவதில்லை காதல் விடுவதில்லை…

பெண் : ஓ தநனனனான தநனனனான…
இது ஒரு தலை உறவா…
இல்லை இருவரின் வரவா… ஆ…
என்றாலும் பாறையில் பூ பூக்கும்…

பெண் : முதல் முதலாய்…
ஆண் : முதலாய்…
பெண் : ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…

பெண் : முதல் முதலாய்…
ஆண் : முதலாய்…
பெண் : ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…

BGM

பெண் : மேற்கு திக்கில் ஓரம்தான்…
வெயில் சாயும் நேரம்தான்…
நினைவு வரும் உந்தன் நினவு வரும்…

பெண் : உன்னை என்னை மெல்லத்தான்…
தைத்து வைத்து கொள்ளத்தான்…
நிலவு வரும் அந்தி நிலவு வரும்… …

குழு : அடி இளமையில் தனிமை…
அது கொடுமையில் கொடுமை…
எனை அவதியில் விடுமோ…
இந்த அழகிய பதுமை…

ஆண் : கண்ணே என் காதலை காப்பாற்று…

குழு : முதன் முதலாய்…
ஓ முதன் முதலாய்…

ஆண் : முதல் முதலாய்… ஹாஓஒ…
முதல் முதலாய்… வாவ் ஓஓ…

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…

குழு : உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே…
அழகு மின்னல் ஒன்று அடித்திட…
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே…
இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட…

BGM

குழு : முதல் முதலாய்…
முதல் முதலாய்…

BGM


Notes : Mudhal Mudhalai Song Lyrics in Tamil. This Song from Lesa Lesa (2002). Song Lyrics penned by Vaali. முதல் முதலாய் பாடல் வரிகள்.


லேசா லேசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅனுராதா ஸ்ரீராம்ஹாரிஸ் ஜெயராஜ்லேசா லேசா

Lesa Lesa Song Lyrics in Tamil


பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…

BGM

பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது லேசா…

பெண் : காதல் தேவன் கோயில் தேடி…
வருகிறதே விரைவினிலே…
கலா் கலா் கனவுகள் விழிகளிலே…
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே…

பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது லேசா…

பெண் : காதல் தேவன் கோயில் தேடி…
வருகிறதே விரைவினிலே…
கலா் கலா் கனவுகள் விழிகளிலே…
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே…

BGM

பெண் : நான் தூங்கி நாளாச்சு…
நாள் எல்லாம் பாழாச்சு…
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே…
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே…

பெண் : கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம்…
தொிகிறதே விாிகிறதே…
தனிமையில் இருக்கையில் எாிகிறதே…
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே…

பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது உறவிது உறவிது…

BGM

பெண் : வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல…
நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா…
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா…

BGM

பெண் : வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல…
நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா…
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா…

பெண் : நீ என்றால் நான்தான் என்று…
உறவறிய ஊரறிய…
ஒருவாியில் ஒருவாின் உயிா் கரைய…
உடனடியாய் உதடுகளால் உயிலெழுது…

பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது லேசா…

BGM

பெண் : உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே…
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே…

BGM


Notes : Lesa Lesa Song Lyrics in Tamil. This Song from Lesa Lesa (2002). Song Lyrics penned by Vaali. லேசா லேசா பாடல் வரிகள்.


முதல் நாள் இன்று

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.கே., பாப் ஷாலினி & மகாலட்சுமி ஐயர்ஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

Mudhal Naal Indru Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் நாள் இன்று…
எதுவோ ஒன்று…
வேறாக உனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

பெண் : என் உள்ளம் பாடுகின்றது…
யார் சொல்லி கற்று கொண்டது…
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா…
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா…
ஓஹோ ஜானே ஜா…

ஆண் : முதல் நாள் இன்று…
எதுவோ ஒன்று…
வேறாக உனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

BGM

பெண் : திசை தூறும் கூறுகின்ற உண்மை…
குளிர்போலே காதல் மேகம் மேன்மை…
தீண்டும் வரையில் தித்திக்காதோ சொல்ல உள்ளம்…

ஆண் : முழுதாக மூழ்கியதும் இல்லை…
முழ்காமல் மிதந்ததும் இல்லை…
காதல் கடல் விழுந்தவர் காணும் இதை…

ஆண் : வெகு தூரம் வந்தேன்…
காதல் கிருமிகள் நெருங்காமல்…

பெண் : முதல் நாள் இன்று… ஓஹோ…
எதுவோ ஒன்று… ஓஹோ…
லேசாக எனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

BGM

பெண் : இளம் நெஞ்சில் காதல் விதை தூவு…
இல்லையேல் நீ தன்னந்தனி தீவு…
வாழ்க்கை ஒரு சுமையானால் நோ சொல்லு… ஓஹோ…

ஆண் : உதட்டாலே காதல் எனும் சொல்லை…
குறைத்தாலே கூட வரும் தொல்லை…
வாழும் மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்…

பெண் : சுகம் எது வாழ்வில்…
காதல் வழியை சுமக்காமல்…

ஆண் : முதல் நாள் இன்று…
எதுவோ ஒன்று…
வேறாக உனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

ஆண் : ஓ… பூக்கள் வைரம் என்றுதான்…
காற்றிடும் காதல் ஒன்றுதான்…
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்…
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்…
ஓஹோ கோரியே யே…

ஆண் : ஹோசனா சோனா…
ஹோசனா சோனா…
ஹோசனா சோனா…
ஹோசனா சோனா…


Notes : Mudhal Naal Indru Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Pa. Vijay. முதல் நாள் இன்று பாடல் வரிகள்.


வைகாசி நிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிசரண் & மதுஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

Vaigaasi Nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

BGM

பெண் : வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…

ஆண் : விழியில் இரண்டு விலங்கு இருக்கு…
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு…
என் ஜீவன் வாழும் வரை… ஓ…
என் செய்வாய் நாளும் எனை…

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

BGM

ஆண் : தூவானம் என தூரல்கள் விழ…
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே…

பெண் : கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு…
காதல் கைக் கூடட்டும்…

ஆண் : இதோ எனக்காக விரிந்தது இதழ்…
எடுக்கவா தேனே…

பெண் : கனி எதற்காக கனிந்தது…
அணில் கடித்திடதானே…

ஆண் : ஓ… காலம் நேரம் பார்த்துக்கொண்டா…
காற்றும் பூவும் காதல் செய்யும்…

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

பெண் : வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…

BGM

ஆண் : நூலாடை என மேலாடை என…
பாலாடை மேனி மீது படரட்டுமா…

பெண் : நான் என்ன சொல்ல நீ என்னை மெல்ல…
தீண்டி தீவைக்கிறாய்…

ஆண் : அனல் கொதித்தாலும் அணைத்திடும் புனல்…
அருகினில் உண்டு…

பெண் : அன்னை நெருப்பாக இருக்கையில்…
என்னை தவிப்பது கண்டு…

ஆண் : ஓ மோகத்தீயும் தேகத்தீயும்…
தீர்த்தம் வார்த்து தீராதம்மா…

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

பெண் : ஓ… வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…

ஆண் : விழியில் இரண்டு விலங்கு இருக்கு…
பெண் : அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு…

பெண் : என் ஜீவன் வாழும் வரை…
ஓ… என் செய்வாய் நாளும் எனை…
என் ஜீவன் வாழும் வரை…
ஓ… என் செய்வாய் நாளும் எனை…

BGM


Notes : Vaigaasi Nilave Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Vaali. வைகாசி நிலவே பாடல் வரிகள்.


சரியா தவறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசமந்தா எட்லர்ஹாரிஸ் ஜெயராஜ்12பி

Sariya Thavara Song Lyrics in Tamil


குழு : அண்ணா கிட்ட டம் கேட்டா…
பிரின்சி கிட்ட பொட்டு கேட்டா…
பெண் : வூஹா…

குழு : தினம் தினம் டேடிங் போக…
டட் கிட்ட துட்டு கேட்டா…
பெண் : வூஹுஆஆ…

குழு : சரியா தவறா ஓஹோ…
நாங்கள் கேட்டா சரியா தவறா…
ஆஹா… இன்னும் கேளு…

BGM

{ பெண் : எட்டு கட்டை மெட்டு போட்டு…
எக்கு தப்பா ஆட்டம் போட்டா…
சரியா தவறா…

பெண் : நாங்கள் பச்சை பச்சையாய்…
கேள்வி கேட்டா…
சரியா தவறா… } * (2)

பெண் : ஓஹோ இன்டர்நெட்டில எ ஜோக் பார்த்தால்…
சரியா தவறா…
ஆஹா ஆண்கள் பார்த்தால் பரவசம் வருதே…
சரியா தவறா…

பெண் : ஆ மாப்பிள்ளை தேர்ந்தெடுத்து…
சில நாள் வாழ்ந்து திருமணம் செய்தால்…
சரியா தவறா… யே யே யே யே…
சரியா தவறா… யே யே யே யே…

பெண் : பட்டாம் பூச்சிகள் மீட்டிங் போட்டால்…
சரியா தவறா…
நாங்கள் பச்சை பச்சையாய் கேள்விகள் கேட்டா…
சரியா தவறா…

பெண் : இன்டர்நெட்டில எ ஜோக் பார்த்தால்…
சரியா தவறா…
ஆண்கள் பார்த்தால் பரவசம் வருதே…

BGM

பெண் : ச ப ம க ச ச ப ம க ம க ரி ச…
ச ப ம க ச ச ப ம க ம ப க ரி ச…
ம ம க ரி ச ம ப ம க ரி ச… ஓ யே…
ம ம க ரி ச ப ம ப க ரி ச… ஓஓ ஹோ…

BGM

பெண் : அடி படி தாண்டி புது சாலை தேடுங்களேன்…
நாம் கண்டெஸ்ட்டு போகாத பியூட்டிகளே… ஹே…
பாக்க கல்யாண சந்தை செல்லும் மந்தைகளே…
நீங்கள் கம்ப்யூட்டர் டென்ஷன்க்கு மாறுங்களேன்…

பெண் : ஆண் பிள்ளை பெறுவது பெண்கள் கடமை…
என்ற விதி முறை சரி தானா…
ஆண் பிள்ளை மட்டுமே ஆண்கள் பெறட்டும்…
நாங்கள் கேட்பது பிழைதானா…
மெல்லினம் பிறந்த பின்னே மெல்லினங்கள் உதவாது…

குழு : தட்ஸ் இட் பெண்ணும் பெண்ணும் நட்பா இருந்தால்…
சரியா தவறா…
காதல் போனால் இன்னொரு காதல்…
சரியா தவறா…

பெண் : ஓஹோ… இன்டர்நெட்டில எ ஜோக் பார்த்தால்…
சரியா தவறா…
ஆஹா… ஆண்கள் பார்த்தால் பரவசம் வருதே…
சரியா தவறா…

பெண் : மாப்பிள்ளை தேர்ந்தெடுத்து…
சில நாள் வாழ்ந்து திருமணம் செய்தால்…

BGM

{ குழு : அண்ணா கிட்ட டம் கேட்டா…
பிரின்சி கிட்ட பொட்டு கேட்டா…
தினம் தினம் டேடிங் போக…
டட் கிட்ட துட்டு கேட்டா… } * (2)

BGM

பெண் : ஆமா பெண்ணுக்கு ஏன் மீசை…
இல்லை இல்லை…
அந்த ஹார்மோன்கள் சுரக்க வில்லை…
அதுதான் தொல்லை…

பெண் : யே நாங்கள் ஊசி போட்டும் மீசை வைத்தால்…
தவறே இல்லை…
அன்று ஊருக்குள் ஆண் பெண் என்று…
பேதம் இல்லை…

பெண் : ஆறடி கூந்தலை சுத்தம் செய்தே…
நேரம் கழிவது சரிதானா…
அரையடி கூந்தல் அரை நொடி போதும்…
நேரம் மிச்சமே பிழைதானா…
புது யுகம் திறந்து வைக்க பூமிக்கு வந்தேனா…

பெண் : பட்டாம் பூச்சிகள் மீட்டிங் போட்டால்…
நாங்கள் பச்சை பச்சையாய் கேள்விகள் கேட்டால்…

பெண் : ஓஓஹோ… இன்டர்நெட்டில எ ஜோக் பார்த்தால்…
சரியா தவறா…
ஆண்கள் பார்த்தால் பரவசம் வருதே…
சரியா தவறா…

பெண் : ஓ மாப்பிள்ளை தேர்ந்தெடுத்து…
சில நாள் வாழ்ந்து திருமணம் செய்தால்…
சரியா தவறா…
சரியா தவறா… சரியா தவறா…


Notes : Sariya Thavara Song Lyrics in Tamil. This Song from 12B (2001). Song Lyrics penned by Vairamuthu. சரியா தவறா பாடல் வரிகள்.