கரு கரு விழிகளால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர், கார்த்திக் & கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்பச்சைக்கிளி முத்துச்சரம்

Karu Karu Song Lyrics in Tamil


ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கையில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : நீ…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : என்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெண்…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : மன்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

—BGM—

ஆண் : புது புது வரிகளால்…
என் கவிதை தாளும் நிறையுதே…
கனவுகள் கனவுகள் வந்து…
கண்கள் தாண்டி வழியுதே…

ஆண் : மறந்திட மறந்திட…
என் மனமும் கொஞ்சம் முயலுதே…
மறுபடி மறுபடி…
உன் முகமே என்னை சூழ…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : மண்ணில்…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : மின்னும்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெள்ளை…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : அம்பால்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

—BGM—

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் என்றே…
தினமும் போகும்…
மறு நாள் வருமா என்றே…
இரவில் இதயம் சாகும்…

ஆண் : பேசும் போதே இன்னும்…
ஏதோ தேடும்…
கையின் ரேகை போலே…
கள்ளத்தனம் ஓடும்…

—BGM—

ஆண் : நீரே இல்லா பாலையிலே…
நின்று பெய்யும் மழை மழை…
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி…
தொடர்ந்திடும் பிழை பிழை…

ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண் மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கயில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : தனி ஒரு அன்றில் நீதானா…
குழு : இலை சிந்தும் மரமே…

ஆண் : புயல் தரும் தென்றல் நீதானா…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : புதையல் நீதானா…
குழு : மதன் பின்னும் வலையா…

குழு : ஒரு மல்லி சரமே…


Notes : Karu Karu Song Lyrics in Tamil. This Song from Pachaikili Muthucharam (2007). Song Lyrics penned by Thamarai. கரு கரு விழிகளால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading