உன் சிரிப்பினில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசௌமியா ராவ் & ராபிஹாரிஸ் ஜெயராஜ்பச்சைக்கிளி முத்துச்சரம்

Un Siripinil Song Lyrics in Tamil


—BGM—

பெண் : உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்…
என் மனதின் பாதியும் போக…
உன் இமைகளின் கண்ணிமைகளின்…
மென்பார்வையில் மீதியும் தேய…

பெண் : ம்ம்… இன்று நேற்று என்று இல்லை…
ஏன் இந்த நிலை…
ம்ம்… உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை…

பெண் : உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்…
என் மனதின் பாதியும் போக…
உன் இமைகளின் கண்ணிமைகளின்…
மென்பார்வையில் மீதியும் தேய…

—BGM—

பெண் : உனக்குள் இருக்கும் மயக்கம்…
அந்த உயரத்து நிலவை அழைக்கும்…
இதழின் விளிம்பு துளிர்க்கும்…
என் இரவினை பனியில் நனைக்கும்…

பெண் : எதிரினில் நான் எரிகிற நான்…
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே…
ஒருமுறை அல்ல முதல்முறை அல்ல…
தினம்தினம் என்னை சூழும் தீ…

ஆண் : உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்…
என் மனதின் பாதியும் போக…
உன் இமைகளின் கண்ணிமைகளின்…
மென்பார்வையில் மீதியும் தேய…

—BGM—

ஆண் : முதல்நாள் பார்த்த வனப்பு…
துளி குறையவும் இல்லை உனக்கு…
உறக்கம் விழிப்பில் கனவாய்…
உனைக்காண்பதே வழக்கம் எனக்கு…

ஆண் : அருகினிலே வருகையிலே…
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்…
முதல்முதல் இன்று நிகழ்கிறதென்று…
நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே…

பெண் : உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்…
என் மனதின் பாதியும் போக…

ஆண் : உன் இமைகளின் கண்ணிமைகளின்…
மென்பார்வையில் மீதியும் தேய…

பெண் : ம்ம்… இன்று நேற்று என்று இல்லை…
ஏன் இந்த நிலை…
ம்ம்… உன்னைக்கண்ட நாளினின்றே…
நான் செய்யும் பிழை…

—BGM—


Notes : Un Siripinil Song Lyrics in Tamil. This Song from Pachaikili Muthucharam (2007). Song Lyrics penned by Thamarai. உன் சிரிப்பினில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading