உனக்குள் நானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகினிபாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்பச்சைக்கிளி முத்துச்சரம்

Unakkul Naane Song Lyrics in Tamil


BGM

ஆண் : மின்னும் பனி சாரல்…
உன் நெஞ்சில் சேர்ந்தாலே…
கண்ணில் உன்னை வைத்து…
பெண் தைத்து கொண்டாலே…

ஆண் : வெண்ணிலா துவி…
தன் காதல் சொன்னாலே…
மல்லிகை வாசம்…
உன் பேச்சில் கண்டாலே…

ஆண் : பொன் மான் இவளா…
உன் வானவில்லா…
உன் வான் இவளா…
உன் வானவில்லா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உனக்குள் நானே உருகும் இரவில்…
உள்ளத்தை நான் சொல்லவா…
மருவும் மனதின் ரகசிய அறையில்…
ஒத்திகை பார்த்திட வா…

பெண் : சிறுக சிறுக உன்னில் என்னை…
தொலைத்து மொழி சொல்லவா…
சொல்லால் சொல்லும் என்னை…
வாட்டும் ரணமும் தேன் அல்லவா…

பெண் : உனக்குள் நானே உருகும் இரவில்…
உள்ளத்தை நான் சொல்லவா…

BGM

பெண் : ஏனோ நம் பொய் வார்த்தையேதான்…
ஏன் அதில் உன் என் மௌனமேதான்…
உதட்டில் சிரிப்பை தந்தாய்…
மனதில் கனத்தை தந்தாய்…

பெண் : ஒரு முறை என்னை…
எனக்கென்று சுவாசிக்கவா…
மறுமுறை உன்னை புதிதாக சுவாசிக்கவா…

பெண் : உனக்குள் நானே உருகும் இரவில்…
உள்ளத்தை நான் சொல்லவா…
மருவும் மனதின் ரகசிய அறையில்…
ஒத்திகை பார்த்திட வா… ஓஓ…

BGM

பெண் : தீபோல் தேன்போல் சலனமேதான்…
மதியினும் நிம்மதி சிதையவேதான்…
நிழலை விட்டு சென்றாயே…
நினைவை வெட்டி சென்றாயே…

பெண் : இனி ஒரு பிறவி…
உன்னோடு வாழ்ந்திடவா…
அது வரை என்னை…
காற்றோடு சேர்த்திடவா…

பெண் : உனக்குள் நானே உருகும் இரவில்…
உள்ளத்தை நான் சொல்லவா…
மருவும் மனதின் ரகசிய அறையில்…
ஒத்திகை பார்த்திட வா…

பெண் : சிறுக சிறுக உன்னில் என்னை…
தொலைத்து மொழி சொல்லவா…
சொல்லால் சொல்லும் என்னை…
வாட்டும் ரணமும் தேன் அல்லவா…

பெண் : ரணமும் தேன் அல்லவா…
ரணமும் தேன் அல்லவா…


Notes : Unakkul Naane Song Lyrics in Tamil. This Song from Pachaikili Muthucharam (2007). Song Lyrics penned by Rohini. உனக்குள் நானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading