என் ஆள பாக்க போறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல் & கே.ஜி. ரஞ்சித்டி. இமான்கயல்

Yen Aala Paakkaporaen Song Lyrics in Tamil


—BGM—

பெண் : என் ஆள பாக்க போறேன்…
பாத்து சேதி பேச போறேன்…

—BGM—

பெண் : என் ஆள பாக்க போறேன்…
பாத்து சேதி பேச போறேன்…

பெண் : அவன் கண்ணுக்குள்ள…
என்ன வைக்க போறேன்…
அவன் நெஞ்சுக்குள்ள…
என்ன தைக்க போறேன்…
நானே… என்ன தரபோறேன்…

—BGM—

பெண் : வீட்ட விட்டு வந்துட்டேனு…
சொல்ல போறேன்…
கூட்டிக்கிட்டு போயிடுனு…
சொல்ல போறேன்…

பெண் : இததான் எதிா்பாா்த்து…
நான் கிடந்தேன் உயிா் வோ்த்து…

பெண் : என சொல்லி ஆசையில் அல்லாடுவான்…
மனம் துள்ளி காதலில் தள்ளாடுவான்…
அத நான் பாத்தே அழபோறேன்…

பெண் : என் ஆள பாக்க போறேன்…
பாத்து சேதி பேச போறேன்…

—BGM—

ஆண் : உன்னாலதான் தூங்கலனு…
சொல்லப் போறேன்…
சோறு தண்ணி சேரலன்னு…
சொல்லப் போறேன்…
புதுசா புழுகாம…
ரொம்ப பெருசா வழியாம…

ஆண் : அடி எப்ப நீ எனக்கு பொஞ்சாதியா…
ஆக போகுறனு அப்பாவியா…
நானே கேட்டு வரப்போறேன்…

பெண் : ஓ… என் ஆள பாக்க போறேன்…
பாத்து சேதி பேச போறேன்…

பெண் : அவன் கண்ணுக்குள்ள…
என்ன வைக்க போறேன்…
அவன் நெஞ்சுக்குள்ள…
என்ன தைக்க போறேன்…
நானே… என்ன தரபோறேன்…


Notes : Yen Aala Paakkaporaen Song Lyrics in Tamil. This Song from Kayal (2014). Song Lyrics penned by Yugabharathi. என் ஆள பாக்க போறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading