உன் உதட்டோர சிவப்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம்தேவாபாஞ்சாலங்குறிச்சி

Un Uthattora Sivappe Song Lyrics in Tamil


ஆண் : தன நானா நானே நா நா…
தன நானா நானே நனனானே நா நா…

—BGM—

ஆண் : உன் உதட்டோர சிவப்பே…
அந்த மருதாணி கடனா கேட்கும்…
கடனா கேட்கும்…

ஆண் : நீ சிரிச்சாலே சில நேரம்…
அந்த நிலவு வந்து உளவு பார்க்கும்…
உளவு பார்க்கும்…

—BGM—

ஆண் : என் செவ்வாழை தண்டே…
என் செவ்வாழை தண்டே சிறு காட்டு வண்டே…
உன்ன நெனச்சு தான் எச பாட்டு…
கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு…

—BGM—

பெண் : ஏன் மம்முத…
அம்புக்கு இன்னும் தாமசம்… ஆஆ…

ஆண் : அடியே அம்மணி…
வில்லு இல்ல இப்போ கை வசம்… ஆ…

பெண் : ஏன் மல்லு வேட்டி மாமா…
மனசிருந்தா மார்க்கம் இருக்குது…

ஆண் : என்னை பொசுக்குன்னு கவுக்க…
பொம்பளைக்கு நோக்கம் இருக்குது…

—BGM—

பெண் : முருக மலை காட்டுக்குள்ள…
விறகு எடுக்கும் வேலையில…
தூரத்துல நின்னவரே…
தூக்கி விட்டால் ஆகாதா…

—BGM—

ஆண் : பட்ட விறக தூக்கிவிட்டா…
கட்ட விரலு பட்டுபுட்டா…
விறகில்லாம தீ புடிக்கும்…
வெட்கம் கெட்டு போகாதா…

பெண் : நீ தொடுவதா தொட்டுக்கோ…
சொந்தத்துல வரைமுறை இருக்கா…

ஆண் : நீ பொம்பளதானே…
உனக்கு அது நியாபகம் இருக்கா…

பெண் : உன் நெனப்புதான்…
நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது… ஆஆ…

ஆண் : அட உன் கிறுக்குல…
எனக்கு இந்த பூமி சுத்துது…

—BGM—

ஆண் : சிங்கம் புலி கரடி கண்டா…
சேர்த்தடிக்க கை துடிக்கும்…
பொட்டு கன்னி உன்ன கண்டா…
புலி கூட தொட நடுங்கும்…

—BGM—

பெண் : உம்ம நெனச்சு பூசையில…
வேப்பெண்ணையும் நெய் மணக்கும்…
நீ குளிச்ச ஓடையில…
நான் குளிச்சா பூ மணக்கும்…

ஆண் : ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே…
என்னை ஏன் தூக்கி சுமக்குற…

பெண் : என் மனசுக்குள் புகுந்து…
ஏன் மச்சான் இறங்க மறுக்குற…

ஆண் : அடி என் நெஞ்சிலே…
ஏண்டியம்மா வத்தி வைக்குற…

பெண் : உன் ஆசைய…
எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற… ஆஆ…

—BGM—


Notes : Un Uthattora Sivappe Song Lyrics in Tamil. This Song from Panchalankurichi (1996). Song Lyrics penned by Vairamuthu. உன் உதட்டோர சிவப்பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading