இரவாக நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார் & சைந்தவிஜி.வி. பிரகாஷ் குமார்இது என்ன மாயம்

Iravaaga Nee Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இரவாக நீ…
நிலவாக நான்…
உறவாடும் நேரம் சுகம்தானடா…

ஆண் : தொலையும் நொடி கிடைத்தேனடி…
இதுதானோ காதல் அறிந்தேனடி…

ஆண் : கரை நீ பெண்னே…
உன்னை தீண்டும் அலையாய் நானே…

பெண் : ஓ… நுரையாகி நெஞ்சம் துடிக்க…
ஒன்றோடு ஒன்றாய் கலக்க…
என்னுயிரே காதோரம் காதல் உரைக்க…

ஆண் : ஓ… ஒரு பாா்வை வேண்டும் இறக்க…
என்னுயிரே மறு பாா்வை போதும் பிறக்க…

—BGM—

பெண் : இரவாக நீ…
நிலவாக நான்…
உறவாடும் நேரம் சுகம்தானடா…

ஆண் : தொலையும் நொடி கிடைத்தேனடி…
இதுதானோ காதல் அறிந்தேனடி…

—BGM—

ஆண் : விழி தொட்டதா…
விரல் தொட்டதா…
எனதாண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா…

பெண் : அனல் சுட்டதா…
குளிா் விட்டதா…
அடடா என் நாணம் இன்று…
விடை பெற்றதா…

ஆண் : நீ நான் மட்டும்…
வாழ்கின்ற உலகம் போதும்…
உன் தோள் சாயும் இடம் போதுமே…

பெண் : உன் போ் சொல்லி…
சிலிா்க்கின்ற இன்பம் போதும்…
இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்…

ஆண் : ஒன்றோடு ஒன்றாய் கலக்க…
என்னுயிரே காதோரம் காதல் உரைக்க…

—BGM—

ஆண் : மழை என்பதா…
வெயில் என்பதா…
பெண்ணே உன் பேரன்பை…
நான் புயல் என்பதா…

பெண் : மெய் என்பதா…
பொய் என்பதா…
மெய்யான பொய்தான்…
இங்கே மெய் ஆனதா…

ஆண் : அடியே பெண்ணே…
அறியாத பிள்ளை நானே…
தாய் போல் என்னை…
நீ தாங்க வா…

பெண் : மடி மேல் அன்பே…
பொன் ஊஞ்சல் நானும் செய்தே…
தாலாட்ட உன்னை அழைப்பேன்…

ஆண் & பெண் : ஒன்றோடு ஒன்றாய் கலக்க…
என்னுயிரே காதோரம் காதல் உரைக்க…

பெண் : இரவாக நீ…
ஆண் : இரவாக நீ…
பெண் : நிலவாக நான்…
ஆண் : நிலவாக நான்…
பெண் : உறவாடும் நேரம் சுகம்தானடா…

—BGM—


Notes : Iravaaga Nee Song Lyrics in Tamil. This Song from Idu Enna Maayam (2015). Song Lyrics penned by Na. Muthukumar. இரவாக நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading