இருக்கிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார் & ஹாினிஜி.வி. பிரகாஷ் குமார்இது என்ன மாயம்

Irukkiraai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…

ஆண் : எங்கும் உன் முக பிம்பம்…
நெஞ்சில் வந்தது தங்கும்…
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி…

ஆண் : கண்ணில் நீரது பொங்கும்…
காதல் வந்தது அங்கும்…
சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி…

பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…

—BGM—

ஆண் : வெளிச்சம் இல்லாமல் நிழலும் இல்லை…
உயிா் நீ இல்லாமல் நானும் இல்லை…
விடிந்தும் என் வானில் வண்ணம் இல்லை…

பெண் : பனியில் பாதைகள் மூடும்…
வெயிலில் வழி வருமே…

ஆண் : அருகினில் வருகையில் உணா்கிற மயக்கத்தை…
மறுபடி தா கொஞ்சம்…

பெண் : சுடுகிற மணல்வெளி தொடுகிற காலென…
கதறுது என் நெஞ்சம்…

ஆண் : இனி வரும் இரவிலும் இனி வரும் பகலிலும்…
கனவுகள் என் தஞ்சம்…
அங்கே வா உயிரே…

பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…

—BGM—

ஆண் : மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை…
மழை மட்டும் தராது வானவில்லை…
ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை…

பெண் : அருகில் இருந்தும் காதல்…
பிாிவில் பெருகிடுமே…

ஆண் : ஒரு முறை தொியிது…
மறு முறை மறையிது…
தொலையிது உன் பிம்பம்…

பெண் : கனவுகள் வருவது…
காலையில் களைவது…
காதலில் போின்பம்…

ஆண் : எதுவரை எதுவரை இடைவெளி தொடா்ந்திடும்…
கேட்குது என் நெஞ்சம்…
அருகே வா உயிரே…

பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…

—BGM—


Notes : Irukkiraai Song Lyrics in Tamil. This Song from Idu Enna Maayam (2015). Song Lyrics penned by Na. Muthukumar. இருக்கிறாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading