மானூத்து மந்தையில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.எஸ். சசிரேகாஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Maanooththu Manthaiyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

—BGM—

ஆண் : நாட்டுக் கோழி அடிச்சு…
நாக்கு சொட்ட சமைச்சு…
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா…

—BGM—

குழு : மேலு காலு வலிச்சா…
வெள்ளப்பூண்டு உரிச்சி…
வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா…

ஆண் : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க…
குழு : பிள்ளைக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு…
ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

—BGM—

ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு…
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு…
குழு : காராம்பசு ஓட்டி வாராண்டி தாய்மாமன்…

ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு…
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய்மாமன்…

குழு : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க…
ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு…
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே… ஐயோ…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…
ஆண் : ஹோய்…
குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே… போடு…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…


Notes : Maanooththu Manthaiyile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. மானூத்து மந்தையில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading