அடி ஆடிவரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஐ லவ் இந்தியா

Adi Aadivarum Pallaakku Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அடி ஆடிவரும் பல்லாக்கு…
இது சாமி வரும் தேரு…
நம்ம ஆதிசனம் எல்லார்க்கும்…
அருள் கூடிவரும் பாரு…

பெண் : சஞ்சலம் சஞ்சலம்…
ஓடட்டும் ஓடட்டும்…
நெஞ்சிலும் நெஞ்சிலும்…
நிம்மதி வந்தே கைகூடும்…

—BGM—

பெண் : பாட்டுச்சந்தம் எங்கேயும் என்னானந்தம்…
தன தம்தம் தன தம்தம்…
நெஞ்சில் நித்தம் தித்திக்கும் பஞ்சாமிர்தம்…
அமிர்தம் தம் தம் அமிர்தம் தம் தம்…

பெண் : எட்டு திக்கும் எட்டும் இந்த நாதம்…
எண்ணம் எல்லாம் நாளும் பாடும் கீதம்…
நீர் கொண்ட மேகம் பூத்தூவும் நேரம்…
ஓர் ஆனந்தம் அம்மம்மா என் சொல்ல…

பெண் : அடி ஆடிவரும் பல்லாக்கு…
இது சாமி வரும் தேரு…
நம்ம ஆதிசனம் எல்லார்க்கும்…
அருள் கூடிவரும் பாரு…

பெண் : சஞ்சலம் சஞ்சலம்…
ஓடட்டும் ஓடட்டும்…
நெஞ்சிலும் நெஞ்சிலும்…
நிம்மதி வந்தே கைகூடும்…

—BGM—

பெண் : வெள்ளி அலை துள்ளி எழுந்திட பாரு…
பனி ஆறு பனி ஆறு…
நெஞ்சை அள்ளுவதை கட்டுப்படுத்துவது யாரு…
இங்கு யாரு இங்கு யாரு…

பெண் : உன்னை என்னை கேட்டா பூக்கள் பூக்கும்…
மண்ணில் நின்று கண்கள் தன்னை ஈர்க்கும்…
நிலமோடு நீரும் நீரோடு சோறும்…
யார் தந்தது சொல்லடி பைங்கிளி…

பெண் : அடி ஆடிவரும் பல்லாக்கு…
இது சாமி வரும் தேரு…
நம்ம ஆதிசனம் எல்லார்க்கும்…
அருள் கூடிவரும் பாரு…

பெண் : சஞ்சலம் சஞ்சலம்…
ஓடட்டும் ஓடட்டும்…
நெஞ்சிலும் நெஞ்சிலும்…
நிம்மதி வந்தே கைகூடும்…

—BGM—

குழு : ஐ லவ் இந்தியா…
ஐ லவ் இந்தியா…
ஐ லவ் இந்தியா…
ஐ லவ் லவ் லவ் இந்தியா…

—BGM—


Notes : Adi Aadivarum Pallaakku Song Lyrics in Tamil. This Song from I Love India (1993). Song Lyrics penned by Vaali. அடி ஆடிவரும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading