எங்கிருந்தோ என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஐ லவ் இந்தியா

Engiruntho Ennai Azhaithathu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

—BGM—

பெண் : என் மனதில் அன்பை விதைத்ததென்ன…
உந்தன் மோகம்தானா…

—BGM—

பெண் : அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…
என தேவன் தழுவிடவே…
இந்த ஜீவன் தவித்திடவே…

பெண் : தொலைவினில் எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம் தானா…

—BGM—

பெண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
அழைத்ததென்ன…

—BGM—

ஆண் : சில்லென்று தென்றல் ஒன்று…
என்னோடு ஒட்டிக்கொண்டு…
பொன்னூஞ்சல் ஆடாதோ… ஓஓ…

ஆண் : மின்சார மின்னல் ஒன்று…
மேலோடு கீழும் இன்று…
சொல்லாமல் பாயோதோ… ஓஓ…

குழு : தண்ணீரிலே…
பெண் : செம்மீனும் ஆடுகின்ற சந்தோஷமோ…
குழு : உல்லாசமே…
பெண் : உண்டாக கூடுகின்ற சல்லாபமோ…

பெண் : காம்போடு நீ கிள்ள…
காபூலின் திராட்சைகள்…
வந்தாடும் நேரத்தில் வேறென்ன தேவைகள்…

குழு : தேனாற்றில் தாகம் தீர நீராடலாம்…

ஆண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

—BGM—

ஆண் : என் மனதில் அன்பை விதைத்ததென்ன…
உந்தன் மோகம்தானா…

—BGM—

ஆண் : அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…
அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…

ஆண் : தொலைவினில் எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

—BGM—

ஆண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
அழைத்ததென்ன…

—BGM—

பெண் : வற்றாத கங்கை நதி…
போல் இந்த மங்கை நதி…
உன் மீது சாய்ந்தாட… ஆஆ…

பெண் : இன்னேரம் நானும் தொட…
பொன்மேனி நீயும் தொட…
நாணங்கள் தான் ஓட… ஆஆ…

ஆண் : உல்லாடியே உற்சாகம் ஊற்றெடுக்கும் நன்னாளிது…
செம்மாங்குயில் பெண்ணாகி பாட்டெடுக்கும் பொன்னாளிது…

பெண் : செவ்வானம் எங்கேயும் என்னென்ன கோலங்கள்…
பொன்மாலை வெயில்தான் செய்கின்ற ஜாலங்கள்…
குழு : போவோமா கல்யாண ஊர்கோலம்தான்…

ஆண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

—BGM—

ஆண் : என் மனதில் அன்பை விதைத்தென்ன…
உந்தன் மோகம்தானா…

—BGM—

ஆண் : அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…
அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…

ஆண் : தொலைவினில் எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

—BGM—

ஆண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
அழைத்ததென்ன…

—BGM—


Notes : Engiruntho Ennai Azhaithathu Song Lyrics in Tamil. This Song from I Love India (1993). Song Lyrics penned by Vaali. எங்கிருந்தோ என்னை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading