குறுக்கு பாதையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & மின்மினிஇளையராஜாஐ லவ் இந்தியா

Kurukku Paathaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நிக்க…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நிக்க…

ஆண் : கூறாமப் போரவளே குருவம்மா…
பதில் கூறாமப் போனவளே குருவம்மா…
அட வருத்தம் என்ன வருத்தம்…
என்ன பருவமா…
நாம வெலகி நிக்க ரெண்டும்…
ரெண்டு துருவமா…

பெண் : குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நின்னு…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நின்னு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கேட்காம கேட்டு நிக்கும் மருதையா…
மேளம் கொட்டாம கேட்குறியே உரிமையா…
ஒன்ன பாக்குறப்போ உள்ளார…
ஒன்னு வருதையா…
நீயும் பரிசம் போட்டு…
ஒரசி பார்க்க வருவியா…

BGM

பெண் : சுண்ணாம்பு வெத்தல வச்சு…
குழு : ஹோய்…
பெண் : சாயப் பாக்கு சந்தனம் வச்சு…
குழு : ஹோய்…
பெண் : பொண்ணு பாக்க வந்த…
என்ன மாமாவே…
குழு : ஹோய்…

குழு : பஞ்சாங்கம் ஐயரு வச்சு…
பெண் : ஹோய்…
குழு : பந்தலிலே நாளு குறிச்சு…
பெண் : ஹோய்…
குழு : கண்ணாலம் செஞ்சா என்ன மாமாவே…
பெண் : ஹோய்…

ஆண் : கண்ணாலம் கட்டும் முன்னே…
குழு : ஹோய்…
ஆண் : கெட்டு மேளம் கொட்டும் முன்னே…
குழு : ஹோய்…
ஆண் : கை விரலும் பட்டா என்ன ஆகாதா…
குழு : ஹோய்…

குழு : வண்ணாத்து பூச்சி போல…
ஆண் : ஹோய்…
குழு : வெள்ளருக்கு பூவ போல…
ஆண் : ஹோய்…
குழு : முன்னழகு கண்டா நெஞ்சம் வாடாதா…

ஆண் : அடி மஞ்ச கிழங்கே…
சிறு இன்ப கிழங்கே…

பெண் : கட்டிக் கரும்பே…
கொடி முல்லை அரும்பே…

ஆண் : அடி பாக்காம போனவளே குருவம்மா…
ஒரு பெண்ணென வந்தது…
பொன்னுல பண்ணியே உருவமா…

பெண் : குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நின்னு…
கேட்காம கேட்டு நிக்கும் மருதையா…
உன்ன பாக்குறப்போ உள்ளார…
ஒன்னு வருதையா…
நீயும் பரிசம் போட்டு…
ஒரசி பார்க்க வருவியா…

BGM

ஆண் : பெண்ணான பெண்ணுறங்க…
குழு : ஹோய்…
ஆண் : பொன்னுமணி கண்ணுறுங்க…
குழு : ஹோய்…
ஆண் : பச்ச புல்ல போட்டு வைப்பேன்…
பாய் போல…
குழு : ஹோய்…

குழு : முத்தான முத்தழகி…
ஆண் : ஹோய்…
குழு : பச்ச மல பொட்டழகி…
ஆண் : ஹோய்…
குழு : முத்தம் ஒன்னு வச்சா…
என்ன பூ போலே…
ஆண் : ஹோய்…

பெண் : வெட்டாம வெட்டுது கண்ணு…
குழு : ஹோய்…
பெண் : கப்பம் விட்டு ஒட்டுது பொண்ணு…
குழு : ஹோய்…
பெண் : என்ன வேணும் கண்டுபுடி மாமாவே…
குழு : ஹோய்…

குழு : மெய்யாண்டி மேளத்த கொட்டு…
பெண் : ஹோய்…
குழு : கையிரண்டும் தாளத்த தட்டு…
பெண் : ஹோய்…
குழு : ஒன்னாட்டம் நானும் ரெடி மாமாவே…

ஆண் : அடி தொட்டுப் புடிக்க…
புது மெட்டுப் படிக்க…

பெண் : அள்ளி அணைக்க…
கனி கிள்ளி பறிக்க…

ஆண் : ஆத்தோரம் எடம் இருக்கு வசதியா…
ஒரு ஒத்தடம் வைக்க…
ஒத்திக பாக்க வருவியா…

பெண் : குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நின்னு…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நின்னு…

பெண் : கேட்காம கேட்டு நிக்கும் மருதையா…
மேளம் கொட்டாம கேட்குறியே உரிமையா…

குழு : ஒன்ன பாக்குறப்போ உள்ளார…
ஒன்னு வருதையா…
ஆண் : ஹையோ…
குழு : நீயும் பரிசம் போட்டு…
ஒரசிப் பார்க்க வருவியா…

ஆண் : அடடடட… குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நிக்க…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நிக்க…

ஆண் : கூறாமப் போனவளே குருவம்மா…
பதில் கூறாமப் போனவளே குருவம்மா…

குழு : ஒனக்கு வருத்தம் என்ன வருத்தம்…
என்ன பருவமா…
நாம வெலகி நிக்க ரெண்டும்…
ரெண்டு துருவமா…


Notes : Kurukku Paathaiyile Song Lyrics in Tamil. This Song from I Love India (1993). Song Lyrics penned by Vaali. குறுக்கு பாதையிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading