ஒரு ரோஜா தோட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கே.எஸ். சித்ரா & பி. உன்னிகிருஷ்ணன்தேவாமனுநீதி

Oru Roja Thottam Song Lyrics in Tamil


பெண் : ஒரு ரோஜா தோட்டம்…
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா…
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே…
உன்னை கண்டதாலா…

—BGM—

பெண் : ஒரு ரோஜா தோட்டம்…
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா…
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே…
உன்னை கண்டதாலா…

ஆண் : ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்…
நீ வந்ததாலா…
நான் காற்றில் ஏறியே நடந்து போகிறேன்…
உன்னை கண்டதாலா…

பெண் : அட சாமத்தில் சூரியன்…
ஜன்னலை தட்டுதே…
கை கோர்த்ததாலா…

பெண் : ஒரு ரோஜா தோட்டம்…
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா…
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே…
உன்னை கண்டதாலா…

—BGM—

பெண் : மனு போட்ட கண் சுகமா…
உன் மனசுக்குள் நான் சுகமா…
என் மார்போடு தலை சாய்க்கும்…
மாமாவே சுகமா சுகமா…

குழு : சுகமா சுகமா…
சுகமா சுகமா…

ஆண் : தேனூறும் இதழ் சுகமா…
நான் தீண்டாதா இடம் சுகமா…
நீ எனக்காக நெய்கின்ற வெட்கங்கள்…
சுகமா சுகமா…

பெண் : நான் கடிச்ச நடு விரலில்…
நக கண்ணும் சுகம்தானே…

ஆண் : இடைவெளிகள் குறைந்துவிட்டால்…
இம்சைகளும் சுகம்தானே…

பெண் : இனி உன்னோடு நான் இருக்கும்…
நொடிஎல்லாம் பொன் இருக்கும்…

ஆண் : நீ இல்லாமல் நான் நடக்க…
வழியெல்லாம் முள் இருக்கும்…

பெண் : அட வெண்ணிலா வேர்குதே…
புன்னகை பூக்குதே நம்மை கண்டதாலா…

பெண் : ஒரு ரோஜா தோட்டம்…
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா…
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே…
உன்னை கண்டதாலா…

—BGM—

ஆண் : அலை பாயும் குழல் சுகமா…
உன் அழகானா செவி சுகமா…
உன் கழுத்தோரம் கவி பாடும்…
சிறு மச்சம் சுகமா சுகமா…

குழு : சுகமா சுகமா…
சுகமா சுகமா…

பெண் : மலை தூக்கும் பலம் சுகமா…
என் மடி சாயும் தலை சுகமா…
நான் தடுத்தாலும் கேக்காத…
பிடிவாதம் சுகமா சுகமா…

ஆண் : என்னோட ஆயுள்எல்லாம்…
கூடுதடி உன்னால…

பெண் : உன்னோடு வாழ்வதிலே…
மரணம் இல்லை பின்னாலே…

ஆண் : நான் பூவாலே உடை தைத்து…
பூங்காற்றில் அனுப்பிருந்தேன்…

பெண் : நீ பூச்சூடும் கூந்தலிலே…
உனை சூடி காத்திருந்தேன்…

ஆண் : அட என்னை நீ உன்னை நான்…
என்னமோ செய்றோம்…
காதல் வென்றதாலா…

பெண் : ஒரு ரோஜா தோட்டம்…
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா…
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே…
உன்னை கண்டதாலா…

ஆண் : ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா…
நான் காற்றில் ஏறியே நடந்து போகிறேன்…
உன்னை கண்டதாலா…

பெண் : அட சாமத்தில் சூரியன்…
ஜன்னலை தட்டுதே…
கை கோர்த்ததாலா…

—BGM—


Notes : Oru Roja Thottam Song Lyrics in Tamil. This Song from Manu Needhi (2000). Song Lyrics penned by Snehan. ஒரு ரோஜா தோட்டம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading