மயிலாடும் பாறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்எஸ்.சத்யாதேவாமனுநீதி

Mayilaadum Paarai Song Lyrics in Tamil


BGM

பெண் : மயிலாடும் பாறை…
பக்கத்தில ஓடை…

பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட…
அழகு ஓவியமா…
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா…
உழுத வயலுல…
குட்டி குட்டி கவிதை விளையுமா…

பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட…
அழகு ஓவியமா…
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா…
உழுத வயலுல…
குட்டி குட்டி கவிதை விளையுமா…

BGM

பெண் : துள்ளி ஓடும் முயலுக்குதான்…
காது குத்த வைப்போமா…
நாம் கம்மல் போட்டு பாப்போமா…

பெண் : தத்தி நடக்கும் குட்ட வாத்தே…
நடந்திட பலகம்மா…
நான் நட வண்டி தாரேன்மா…

பெண் : ஒத்த காலிலே… ஆஆ… ஆஆ…
ஒத்த காலிலே நிற்கும் நாரையே…
கேட்கும் வரத்தையே நாமும் தருவோமா…

பெண் : ஆட்டு தாடி சிக்கெடுத்து…
ரெட்டை ஜடை பின்னுவோமா…
வாய் இல்லாத ஜீவன் எல்லாம்…
கொஞ்ச தோணும் குழந்தை ஆவோமம்மா…

பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட…
அழகு ஓவியமா…
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா…
உழுத வயலுல…
குட்டி குட்டி கவிதை விளையுமா…

BGM

பெண் : மூக்கு சிவந்த பச்சை கிளியே…
உனக்கென்ன கோவமா…
கோவ பழம் தாரேன்மா…

பெண் : வாடி கெடக்கும் பச்ச கொடியே…
உனக்கென்ன தாகம்மா…
நான் தண்ணீர தாரேன்மா…

பெண் : கோயில் மாட புறா… ஆஆ… ஆஆ…
கோயில் மாட புறா கூடி ஆடுமே…
மேக கூட்டமே மேடை போடுமே…

பெண் : வண்ண வண்ண பட்டம் விட்டு…
வெண்ணிலவை தொடுவோமா…
சின்ன சின்ன சொப்பு வச்சு…
வக்கனையா சமையல் செய்வோமா…

பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட…
அழகு ஓவியமா…
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா…
உழுத வயலுல…
குட்டி குட்டி கவிதை விளையுமா…

BGM


Notes : Mayilaadum Paarai Song Lyrics in Tamil. This Song from Manu Needhi (2000). Song Lyrics penned by Kalaikumar. மயிலாடும் பாறை பாடல் வரிகள்.


Scroll to Top