இடம் தருவாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபாப் ஷாலினி & பி. உன்னிகிருஷ்ணன்தேவாஅப்பு

Idam Tharuvaya Manasukkulle Song Lyrics in Tamil


BGM

ஆண் : இடம் தருவாயா மனசுக்குள்ளே…
இடம் தருவாயா மனசுக்குள்ளே…

பெண் : தரமாட்டேன் தரமாட்டேன்…
இடம் தரமாட்டேன்…
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்…

ஆண் : பகலில் உன் வீட்டில் காவலன் ஆவேன்…
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்…
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே…

ஆண் : இடம் தருவாயா மனசுக்குள்ளே…
குழு : யே யே யே யே…
ஆண் : இடம் தருவாயா மனசுக்குள்ளே…
குழு : யே யே யே யே…

BGM

பெண் : இதய வீட்டில் ஓர் இடம்…
நீ கெஞ்சிக் கேக்கிறாய்…
வீட்டின் உள்ளே காற்றில்லை என்றால்…
என் செய்வாய்…

BGM

ஆண் : இதய வீட்டில் காற்றில்லையா…
என்ன செய்குவேன்…
உந்தன் மூச்சு பிச்சையிலே…
நான்தான் வாழ்வேன்…

பெண் : வீட்டை விட்டு வெளியேற…
ஆணைகள் இட்டால் என் செய்வாய்…
குழு : யே யே யே யே…

ஆண் : இருப்பவர்க்கே மனை சொந்தம்…
என்று ஒரு சட்டம் நான் இடுவேன்…

பெண் : இடம் ஒன்று கொடுத்தால்…
மடம் ஒன்று பிடிக்கும்…
கள்ளக் கண்ணாளன் நீ என்று கண்டேன்…
தரவே தர மாட்டேன்…

ஆண் : இடம் தருவாயா மனசுக்குள்ளே…
குழு : யே யே யே யே…
ஆண் : இடம் தருவாயா மனசுக்குள்ளே…
குழு : யே யே யே யே…

பெண் : தரமாட்டேன் தரமாட்டேன்…
இடம் தரமாட்டேன்…
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்…

ஆண் : பகலில் உன் வீட்டில் காவலன் ஆவேன்…
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்…
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே…

BGM

ஆண் : இதயம் என்னும் மாளிகையில்…
நூறு வாசலே…
எந்த வழி போவது என்று கேட்கின்றேன்…

BGM

பெண் : கண்கள் என்னும் வாசல் வழி…
புகுந்த கள்வனே…
நுழைந்து கொள்ள வாசல் வழியா கேட்கின்றாய்…

ஆண் : வீட்டுக்குள்ளே நுழைந்திருக்கும்…
கள்வனைக் காட்டிக் கொடுப்பாயா…
குழு : யே யே யே யே…

பெண் : கண் கதவை சாத்திக்கொள்வேன்…
காலம் முழுதும் இருப்பாயா…

ஆண் : இதயம் போலொரு அழகிய வீடு…
எங்கு சென்றாலும் அடைவது ஏது…
எனக்கிடம் தருவாயா அன்பே…

பெண் : இடம் ஒன்று தந்தேன்…
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே…
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே…

ஆண் : தந்தாயே தந்தாயே தந்தாயே…
இதய வீட்டின் அத்தனை அறைகளும் தந்தாயே…

பெண் : அரண்மணை கதவுகள் மொத்தமும் அடைத்தேன்…
எல்லா ஜன்னலும் சாத்தி முடித்தேன்…
தப்பிக்க முடியாது அன்பே…

BGM


Notes : Idam Tharuvaya Manasukkulle Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. இடம் தருவாயா பாடல் வரிகள்.


Scroll to Top