வந்தியளா வந்தியளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுரேஷ் பீட்டர்ஸ் & அனுராதா ஸ்ரீராம்தேவாபாஞ்சாலங்குறிச்சி

Vantheyalla Vantheyalla Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தியளா வந்தியளா கூத்து பாக்க வந்தியளா…
நீங்க குத்த வைக்க வந்தியளா…

பெண் : ஐயா வந்தியளா வந்தியளா நாடகம் பாக்க வந்தியளா…
நீங்க நட்டமா நிக்க வந்தியளா…

ஆண் & பெண் : அண்ணன் மாரே தம்பி மாரே…
அருமையுள்ள அக்கா மாரே…
அண்ணன் மாரே தம்பி மாரே…
அருமையுள்ள அக்கா மாரே…
பெத்தெடுத்த தாயிமாரே…
பேரு பெற்ற பெரியோரே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வணக்கமுங்க வணக்கம்…
பெண் : ஐயா வந்தனமுங்க வந்தனம்…
ஆண் : இங்கே வந்த சனமெல்லாம் குந்தனும்…

ஆண் & பெண் : நாங்க வரும் போது வாங்கியாந்தோம்…
வாசமுள்ள சந்தனம்…
சந்தனத்தை பூசுங்க நீங்க சந்தோஷமா பாருங்க…
மன்னாதி மன்னவராம் மறவர் குல மாணிக்கமா…
முக்குலத்து சிங்கமுங்க முத்துராமலிங்கமுங்க…
முக்குலத்து சிங்கமுங்க முத்துராமலிங்கமுங்க…

ஆண் & பெண் : பொறந்து வளந்த பூமி…
அதை போற்றி பாடுறோம் சாமி…
பொறந்து வளந்த பூமி…
அதை போற்றி பாடுறோம் சாமி…
அண்ணன் மாரே தம்பி மாரே…
அருமையுள்ள அக்கா மாரே…

ஆண் : ஏ புள்ளே சிட்டு…
பெண் : என்ன மச்சான்…

ஆண் : இந்த ஊரு ஐயாக்க மாரு அருமை பெருமை எல்லாம்…
பாடி முடுச்சுட்டோம்…
இனி நம்ம கூத்தை எடுத்து விட்டுறுவோமா…
பெண் : விட்டுறுவோம்…

ஆண் : உருண்ட மலை தெறண்ட மலை…
ஒய்யார கழுகு மலை…
பாசி படந்த மலையே தங்கமே தில்லாலே…
நான் படுத்துறங்கும் பஞ்சு மலையே தங்கமே தில்லாலே…
பாசி படந்த மலையே தங்கமே தில்லாலே…
நான் படுத்துறங்கும் பஞ்சு மலையே தங்கமே தில்லாலே…

பெண் : ஒண்ணு ரெண்டு கல் பொறுக்கி மாமா…
ஓடையில பாலங்கட்டி…
பாலத்துல நடக்கயில மச்சான்…
பாத்து பாத்து கண்ணடிச்சான்…

BGM

ஆண் : பாத்தா மொறக்கிறியே…
இழுத்து மறைக்கிறியே…
சுண்டி இழுக்கிறியே…
சூட்ட கெளப்புறியே…

பெண் : ஊரிருக்குது ஒரவிருக்குது…
பாத்திருக்குது பக்கமிருக்குது…
வேர்த்திருக்குது வெக்கம் தடுக்குது…

ஆண் : ஏன்டி இப்படி பசப்புற…
ஏன் ஆசையத்தான் உசுப்புற…
சுருக்கு பையா இடுப்புல…
என்ன சொருகி வச்சு மயக்குற…

ஆண் : ஓடக்காடு ஒடம்பக்காடு புள்ளே…
ஒளிஞ்சிருக்கும் கொய்யாக்காடு…
கொய்யாக்காட்டுக்கு உள்ள வந்தா…
நாம கூட்டாஞ்சோறு ஆக்கிடலாம்…

BGM

பெண் : ஏன் கைய புடிப்ப…
காதை புடிப்ப…
ஏன் இடுப்ப கிள்ளுவே…
கூட இருக்க சொல்லுவே…

ஆண் : அய்யோ சீலை தந்தனே…
நான் ரவிக்க தந்தனே…
ஏ… சோப்பு தந்தனே…
நானும் சீப்பு தந்தனே…

ஆண் : என்ன ஏச்சுப்புட்டாளே…
ஆள ஓச்சுப்புட்டாளே…
ஐயோ தாங்க முடியல…
நான் தூங்க முடியல…

ஆண் : ஏ… வாட வெத்தல வதங்க வெத்தல…
வாய்க்கு நல்லால்லே…
ஆ… வளஞ்ச கோர கொழஞ்ச கோர…
பாய்க்கு நல்லால்லே…

ஆண் : ஏ… நேத்து பூத்த ரோச பூவு…
கொண்டைக்கு நல்லால்லே…
அந்த குருவி கொத்துன கொய்யாபழம்…
தொண்டைக்கு நல்லால்லே…

ஆண் : ஏ… வாட வெத்தல ஆ… வதங்க வெத்தல…
ஏ… வாட வெத்தல வதங்க வெத்தல…
வாய்க்கு நல்லால்லே…
ஆ… வளஞ்ச கோர கொளஞ்ச கோர…
பாய்க்கு நல்லால்லே…

BGM

ஆண் : அடி சீனா சீனா ஏன் சிலுக்கு…
சிக்குன்னுதான் அது இருக்கு…

பெண் : அட வேணாம் ஒனக்கு இந்த கிறுக்கு…
நீ வேராள பாரு அதுக்கு…

ஆண் : சிம்பொனியா போனியா…
சினிமாவுக்கு வாரியா…
அடி குண்டு பொண்ணு மீனம்மா…
குச்சி ஐசு வேணுமா…

பெண் : இம்பாலா பாலோ பண்ணுவேசீனே…
நீயாக்க சீனு சொன்னே… ஓ ஹோய்…

ஆண் : ஹேய்… ரொம்பத்தான் பீத்திக்கிறியே…
போடி வெடிக்காத பொட்டு வெடியே…
ஐயோ சீனா சீனா ஏன் சிலுக்கு…
சிக்குன்னுதான் அது இருக்கு…

பெண் : ஏய்… ஒனக்குன்னுதான் இது இருக்கு…
ஓன் இஷ்டத்துக்கு அடி நொறுக்கு…

BGM


Notes : Vantheyalla Vantheyalla Song Lyrics in Tamil. This Song from Panchalankurichi (1996). Song Lyrics penned by Vairamuthu. வந்தியளா வந்தியளா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading