Tag Archives: கே.ஜே. யேசுதாஸ்

K. J. Yesudas is a legendary Indian playback singer known for his contributions to the music industry in several languages, including Tamil, Telugu, Malayalam, Hindi, and Kannada. With a career spanning over five decades, he has recorded over 50,000 songs and won numerous awards for his melodious voice and versatility. Yesudas is also known for his collaborations with various music directors and his contributions to devotional music. He has left an indelible mark on Indian music with his unique style and continues to be celebrated as one of the greatest singers in Indian music history.

பாட வந்ததோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்பி. சுசீலா & கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஇளமை காலங்கள்

Paada Vandhadho Gaanam Song Lyrics in Tamil


BGM

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…
பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

பெண் : கல்லூறும் பொன் வேளை…
தள்ளாடும் பெண் மாலை…
இளமை வயலில் அமுத மழை விழ…

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

BGM

ஆண் : ராஜமாலை தோள் சேரும்…
நாணமென்னும் தேன் ஊறும்…
ராஜமாலை தோள் சேரும்…
நாணமென்னும் தேன் ஊறும்…

ஆண் : கண்ணில் குளிர்காலம்…
நெஞ்சில் வெயில்காலம்…
கண்ணில் குளிர்காலம்…
நெஞ்சில் வெயில்காலம்…

பெண் : அன்பே அன்பே எந்நாளும்…
நான் உந்தன் தோழி…
பண்பாடி கண்மூடி…
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி…

ஆண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

BGM

பெண் : மூடிவைத்த பூந்தோப்பு…
காலம் யாவும் நீ காப்பு…
மூடிவைத்த பூந்தோப்பு…
காலம் யாவும் நீ காப்பு…

பெண் : இதயம் உறங்காது…
இமைகள் இறங்காது…
இதயம் உறங்காது…
இமைகள் இறங்காது…

ஆண் : தேனே… தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்…
உல்லாசம் உள்ளூறும்…
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்…

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

ஆண் : கல்லூறும் பொன் வேளை…
தள்ளாடும் பெண் மாலை…
இளமை வயலில் அமுத மழை விழ…

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

BGM


Notes : Paada Vandhadho Gaanam Song Lyrics in Tamil. This Song from Ilamai Kaalangal (1983). Song Lyrics penned by Muthulingam. பாட வந்ததோ பாடல் வரிகள்.


ஒரு ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஆனந்தராகம்

Oru Ragam Padalodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…

பெண் : தினம் உறங்காமல் வாடுதே…
சுகம் உறவாடத் தேடுதே…
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது…

ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…

BGM

பெண் : மாலை நேரக் காற்றே…
மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே…
மாலை சூடினாலும்…
என்னை ஆளும் தெய்வம் நீயே…

ஆண் : காதல் தேவி எங்கே…
தேடும் நெஞ்சம் அங்கே…
தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே…
என் உள்ளம் இன்று வானில் போகுதே…

ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…

BGM

ஆண் : ஏதோ நூறு ஜென்மம்…
ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்…
வாழும் காலம் யாவும்…
துணையாக வேண்டும் என்றும்…

பெண் : காலம் தந்த பந்தம்…
காதல் எனும் கீதம்…
ஜீவநாகம் கேட்குதே…
சேர்ந்து இன்பம் கூட்டுதே…
வராத காலம் வந்து சேர்ந்ததே…

பெண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…

ஆண் : தினம் உறங்காமல் வாடுதே…
சுகம் உறவாடத் தேடுதே…
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது…

ஆண் & பெண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…


Notes : Oru Ragam Padalodu Song Lyrics in Tamil. This Song from Ananda Ragam (1982). Song Lyrics penned by Gangai Amaran. ஒரு ராகம் பாடல் வரிகள்.


வேதம் நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாகோயில் புறா

Vedham Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…

BGM

ஆண் : கருணை மேவும் பூவிழிப் பார்வையில்…
கவிதை இன்பம் காட்டுகிறாய்…
கருணை மேவும் பூவிழிப் பார்வையில்…
கவிதை இன்பம் காட்டுகிறாய்…

ஆண் : இளைய தென்றல் காற்றினிலே…

BGM

ஆண் : இளைய தென்றல் காற்றினிலே…
இனிய சந்தப் பாட்டினிலே…
இளைய தென்றல் காற்றினிலே…
இனிய சந்தப் பாட்டினிலே…
எதிலும் உந்தன் நாதங்களே…
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…

BGM

ஆண் : அண்டம் பகிரண்டம்…
உனை அண்டும் படி வந்தாய்…
அண்டம் பகிரண்டம்…
உனை அண்டும் படி வந்தாய்…

ஆண் : தண்டை ஒலி ஜதி தருமோ…
கமல பாதம் சதிரிடுமோ…
தண்டை ஒலி ஜதி தருமோ…
கமல பாதம் சதிரிடுமோ…

ஆண் : மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே…
மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே…

ஆண் : நெஞ்சம் இது தஞ்சம் என…
உனைத்தினம் நினைத்தது…

BGM

ஆண் : நித்தம் ஒரு புத்தம் புது…
இசைத்தமிழ் வடித்தது…

BGM

ஆண் : ஒருமுறை தரிசனமும் தருக…
இசையில் உனது இதயம் இசையும்…
மனம் குணம் அறிந்தவள்…

BGM

ஆண் : குழலது சரியுது சரியுது…
குறுநகை விரியுது விரியுது…
விழிக்கருணை மழை அதில் நனைய வரும்…
ஒரு மனம் பரவும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…


Notes : Vedham Nee Song Lyrics in Tamil. This Song from Koyil Puraa (1981). Song Lyrics penned by Pulamaipithan. வேதம் நீ பாடல் வரிகள்.


ஏழிசை கீதமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்ரவீந்திரன்ரசிகன் ஒரு ரசிகை

Ezhisai Geethame Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்…
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்…
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…

BGM

ஆண் : ஏதோ ராகம் எனது குரலின் வழி…
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர…
கேட்கும் யாரும் உருகி உருகி விழ…
காதில் பாயும் புதிய கவிதை இது…

ஆண் : அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர…
நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ…
ஏதோ நாளெல்லாம் சந்தோஷம் நெஞ்செல்லாம் சங்கீதம்…
உயிரேஉயிரே…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…

BGM

ஆண் : கையில் ஏந்தும் மதுவில் மயக்கமுண்டு…
கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு…
நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு…
போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு…

ஆண் : உறவு எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை…
தனிமை கொடுமையில்லை…
இனிமை இனிமை இதுதான் நான்தான்…
பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத மனிதன் மனிதன்…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்…
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்…
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…


Notes : Ezhisai Geethame Song Lyrics in Tamil. This Song from Rasigan Oru Rasigai (1986). Song Lyrics penned by Vaali. ஏழிசை கீதமே பாடல் வரிகள்.


எங்கே என் ஜீவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஉயர்ந்த உள்ளம்

Engey En Jeevaney Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

BGM

ஆண் : கையில் தீபம் இருந்தும் நான்…
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்…

பெண் : கண்ணை தந்து உன்னை நான்…
அன்னை போல காப்பேன்…

ஆண் : வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…
வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…

பெண் : விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்…
தொடங்கு கண்ணா புதிய பாடம்…
ஆண் : மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

ஆண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் : என்னை தந்தேனே…

BGM

பெண் : முத்தம் போடும் வேளையில்…
சத்தம் ரொம்ப தொல்லை…

ஆண் : பூக்கள் பூக்கும் ஓசைகள்…
காதில் கேட்பதில்லை…

பெண் : காம பாணம் பாய்வதால் காயமாகுமே…
காம பாணம் பாய்வதால் காயமாகுமே…

ஆண் : கலசம் இங்கு கவசமாகும்…
காமன் அம்பு முறிந்துபோகும்…
பெண் : மலர்ந்த தேகம் சிவந்து போகும்…

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

பெண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் & பெண் : என்னை தந்தேனே…


Notes : Engey En Jeevaney Song Lyrics in Tamil. This Song from Uyarndha Ullam (1985). Song Lyrics penned by Vaali. எங்கே என் ஜீவனே பாடல் வரிகள்.


பாடி அழைத்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்ரவீந்திரன்ரசிகன் ஒரு ரசிகை

Paadi Azhaithen Song Lyrics in Tamil


ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…

BGM

ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…
பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…

ஆண் : வாராய் என் தேவி…
பாராய் என் நெஞ்சில்…
மின்னல் கண்ணில் கங்கை…

ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…

BGM

ஆண் : கோவிலில் தேவிக்கு பூசை…
அதில் ஊமத்தன் பூவுக்கேன் ஆசை…
தேவதை நீ என்று கண்டேன்…
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்…

ஆண் : நான் செய்த பாவங்கள்…
உன் நெஞ்சில் காயங்கள்…
கண்ணீரில் ஆறதோ கோபம் தீராதோ…

ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…

BGM

ஆண் : நீ அந்த மாணிக்க வானம்…
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்…
உன்னிடம் நான் கொண்ட மோகம்…
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்…

ஆண் : மேடைக்கு ராஜா போல் வேசங்கள் போட்டாலும்…
ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது…

ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…
பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…

ஆண் : வாராய் என் தேவி…
பாராய் என் நெஞ்சில்…
மின்னல் கண்ணில் கங்கை…

BGM


Notes : Paadi Azhaithen Song Lyrics in Tamil. This Song from Rasigan Oru Rasigai (1986). Song Lyrics penned by Vaali. பாடி அழைத்தேன் பாடல் வரிகள்.


எங்கெங்கு நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காமகொடியன்கே.ஜே.யேசுதாஸ் & கே.எஸ்.சித்ராஇளையராஜாநினைக்க தெரிந்த மனமே

Engengu Nee Song Lyrics in Tamil


BGM

பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னைத் தேடும்…

ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும்…
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்…

பெண் : பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே…

ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னைத் தேடும்…

BGM

ஆண் : கண்களின் பார்வை அம்புகள் போலே…
நெஞ்சினிலே பாய்வதும் ஏன்…
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது…
காயங்களும் ஆறியதேன்…

பெண் : ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்…
பிரிந்தது ஏனோ உன் உறவு…
நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும்…
மயங்குவதேனோ என் மனது…

ஆண் : இருநெஞ்சின் துன்பம் இது காதல்தான்…
அது போல இன்பம் எது கண்மணி…
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே…

பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னைத் தேடும்…

ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும்…
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்…

பெண் : பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே…

ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னை தேடும்…

BGM

பெண் : மாலை நன் நேரம் மாறிட வேண்டாம்…
மாங்குயிலே மாங்குயிலே…
காலங்கள் கூட மாறிட வேண்டாம்…
கண்மணியே கண்மணியே…

ஆண் : சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்…
சந்திரன் அங்கே வந்திடட்டும்…
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்…
கடலினில் கூட அலை நிற்கட்டும்…

பெண் : உன்னோடு சேரும் ஒரு நேரமே…
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்…
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே…

பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னை தேடும்…

ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும்…
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்…

பெண் : பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே…

ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னை தேடும்…

ஆண் & பெண் : லாலா லா லா லா லாலா…
லாலா லா லா லா லாலா…


Notes : Engengu Nee Song Lyrics in Tamil. This Song from Ninaikka Therintha Maname (1987). Song Lyrics penned by Kamakodiyan. எங்கெங்கு நீ பாடல் வரிகள்.


குயிலே குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாஎன் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

Kuyile Kuyile Song Lyrics in Tamil


பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…

BGM

பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…

பெண் : சொல்லடி சொல்லடி முன்னே…
என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே…
மெல்லிசை பாடடி கண்ணே…
என் முத்து முத்து பசும்பொன்னே…

பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
குயிலே குயிலே…

BGM

பெண் : காற்று வந்து மீட்டிவிடும்…
ஆற்றில் பல நூறு ஸ்வரம்…

ஆண் : கேட்டு இளம் காதல் மனம்…
வானம் வரை ஏறி வரும்…

பெண் : காற்று வந்து மீட்டிவிடும்…
ஆற்றில் பல நூறு ஸ்வரம்…

ஆண் : கேட்டு இளம் காதல் மனம்…
வானம் வரை ஏறி வரும்…

பெண் : ஒன்னா ரெண்டா சங்கீதம்…
கண்டால் சுகம் உண்டாகும்…

ஆண் : உந்தன் இசை பூவாகும்…
எந்தன் மனம் வண்டாகும்…

பெண் : கண்மணி பெண்ணே…
ஆண் : வந்திடு முன்னே…

பெண் : கண்மணி பெண்ணே பாரடியோ…
என் நிலை கொஞ்சம் கேளடியோ…
இன்று வரை உன்னைவிட்டால் என் துணை யாரடியோ…

பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
குயிலே குயிலே…

BGM

ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி…
தோளில் தினம் போட்டு வைத்தேன்…

பெண் : தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே…
நானும் உன்னை பூட்டி வைப்பேன்…

ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி…
தோளில் தினம் போட்டு வைத்தேன்…

பெண் : தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே…
நானும் உன்னை பூட்டி வைப்பேன்…

ஆண் : பாடும் குயில் பாட்டெல்லாம்…
பாவை குரல் போலேது…

பெண் : நாளும் இசை கேட்டாலே…
தாகம் பசி தோனாது…

ஆண் : குக்குக்கு குக்கூ…
பெண் : மெட்டு கலந்து…

ஆண் : சொன்னது என்ன ராகத்திலே…
சொக்கி விழுந்தேன் மோகத்திலே…
கண்மணியே பொன்மணியே…
என் உள்ளம் சொர்க்கத்திலே…

பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…

ஆண் : சொல்லடி சொல்லடி முன்னே…
பெண் : என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே…
ஆண் : மெல்லிசை பாடடி கண்ணே…
பெண் : என் முத்து முத்து பசும்பொன்னே…

ஆண் & பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
குயிலே குயிலே…


Notes : Kuyile Kuyile Song Lyrics in Tamil. This Song from En Bommukutty Ammavukku (1988). Song Lyrics penned by Gangai Amaran. குயிலே குயிலே பாடல் வரிகள்.


சோலை மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாபாட்டு வாத்தியார்

Solai Malare Song Lyrics in Tamil


BGM

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே…
ஞானம் உண்டு பாட கானக்குயிலே…
உன்னைப் போல நானும் கூவி திரிவேன்…
உச்சி மலை மீது தாவி திரிவேன்…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
சோலை மலரே…

BGM

ஆண் : வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழர் நாடு…
வத்தாத பாட்டுச் செல்வம் வாழ்ந்திடும் வீடு…

ஆண் : தென்னாட்டு கிராமம் எங்கும்…
தென்றல் எனும் காற்று…
தெம்மாங்கு பாடிச் செல்லும்…
தாளமும் போட்டு…

ஆண் : ஏத்தம் இட்டுப் பாட பாட்டும் இருக்கு…
ஏரு கட்டி பாட பாட்டும் இருக்கு…
நாத்து நட்டுப் பாட பாட்டும் இருக்கு…
பாட்டுத்தானே பாட்டன் சொத்து நமக்கு…
இந்நாளும் எந்நாளும் நம் செல்வங்கள்… ஓ…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே…
ஞானம் உண்டு பாட கானக்குயிலே…
உன்னைப் போல நானும் கூவி திரிவேன்…
உச்சி மலை மீது தாவி திரிவேன்…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…

BGM

ஆண் : செவ்வானம் பூமியெல்லாம் நல்வரவு கூறும்…
சங்கீதம் பாடி கொண்டு நான் வரும் நேரம்…

ஆண் : சில்லென்று வாடை வந்து என்னைத் தொட்டு ஓடும்…
சிங்காரச்சோலை என் மேல் பூ மழைத் தூவும்…

ஆண் : மேகம் இந்த ஊரில் மண்ணில் வருது…
மோகம் கொண்ட மண்ணை முத்தமிடுது…
முத்தம் கொண்டதாலே முத்து வருது…
மொட்டுகளை பார்த்தால் மெட்டு வருது…
சிட்டுப்போல் பூஞ்சிட்டுப் போல் என் எண்ணங்கள்… ஓஓ…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே…
ஞானம் உண்டு பாட கானக்குயிலே…
உன்னைப் போல நானும் கூவி திரிவேன்…
உச்சி மலை மீது தாவி திரிவேன்…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
சோலை மலரே…


Notes : Solai Malare Song Lyrics in Tamil. This Song from Pattu Vaathiyar (1995). Song Lyrics penned by Vaali. சோலை மலரே பாடல் வரிகள்.


காக்கை சிறகினிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கே.ஜே. யேசுதாஸ்எல். வைத்தியநாதன்ஏழாவது மனிதன்

Kaakki Siraginiley Song Lyrics in Tamil


BGM

ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…
காக்கை சிறகினிலே நந்தலாலா…
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…

BGM

ஆண் : பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா…
நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா…

ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…

BGM

ஆண் : கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா…
நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா…

ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…

BGM

ஆண் : தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா…
நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா…
நந்தலாலா நந்தலாலா நந்தலாலா…

BGM

ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…


Notes : Kaakki Siraginiley Song Lyrics in Tamil. This Song from Ezhavathu Manithan (1982). Song Lyrics penned by Mahakavi Subramania Bharati. காக்கை சிறகினிலே பாடல் வரிகள்.