| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கங்கை அமரன் | கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு |
Kuyile Kuyile Song Lyrics in Tamil
பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
—BGM—
பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
பெண் : சொல்லடி சொல்லடி முன்னே…
என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே…
மெல்லிசை பாடடி கண்ணே…
என் முத்து முத்து பசும்பொன்னே…
பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
குயிலே குயிலே…
—BGM—
பெண் : காற்று வந்து மீட்டிவிடும்…
ஆற்றில் பல நூறு ஸ்வரம்…
ஆண் : கேட்டு இளம் காதல் மனம்…
வானம் வரை ஏறி வரும்…
பெண் : காற்று வந்து மீட்டிவிடும்…
ஆற்றில் பல நூறு ஸ்வரம்…
ஆண் : கேட்டு இளம் காதல் மனம்…
வானம் வரை ஏறி வரும்…
பெண் : ஒன்னா ரெண்டா சங்கீதம்…
கண்டால் சுகம் உண்டாகும்…
ஆண் : உந்தன் இசை பூவாகும்…
எந்தன் மனம் வண்டாகும்…
பெண் : கண்மணி பெண்ணே…
ஆண் : வந்திடு முன்னே…
பெண் : கண்மணி பெண்ணே பாரடியோ…
என் நிலை கொஞ்சம் கேளடியோ…
இன்று வரை உன்னைவிட்டால் என் துணை யாரடியோ…
பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
குயிலே குயிலே…
—BGM—
ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி…
தோளில் தினம் போட்டு வைத்தேன்…
பெண் : தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே…
நானும் உன்னை பூட்டி வைப்பேன்…
ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி…
தோளில் தினம் போட்டு வைத்தேன்…
பெண் : தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே…
நானும் உன்னை பூட்டி வைப்பேன்…
ஆண் : பாடும் குயில் பாட்டெல்லாம்…
பாவை குரல் போலேது…
பெண் : நாளும் இசை கேட்டாலே…
தாகம் பசி தோனாது…
ஆண் : குக்குக்கு குக்கூ…
பெண் : மெட்டு கலந்து…
ஆண் : சொன்னது என்ன ராகத்திலே…
சொக்கி விழுந்தேன் மோகத்திலே…
கண்மணியே பொன்மணியே…
என் உள்ளம் சொர்க்கத்திலே…
பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
ஆண் : சொல்லடி சொல்லடி முன்னே…
பெண் : என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே…
ஆண் : மெல்லிசை பாடடி கண்ணே…
பெண் : என் முத்து முத்து பசும்பொன்னே…
ஆண் & பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
குயிலே குயிலே…
Notes : Kuyile Kuyile Song Lyrics in Tamil. This Song from En Bommukutty Ammavukku (1988). Song Lyrics penned by Gangai Amaran. குயிலே குயிலே பாடல் வரிகள்.
