காற்றோடு குழலின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே. எஸ். சித்ராஇளையராஜாகோடைமழை

Kaatrodu Kuzhalin Song Lyrics in Tamil


BGM

பெண் : காற்றோடு குழலின் நாதமே…
காற்றோடு குழலின் நாதமே…
காற்றோடு குழலின் நாதமே…

பெண் : கண்ணன் வரும் நேரம்…
யமுனைக் கரை ஓரம்…
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து…
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது…

பெண் : காற்றோடு குழலின் நாதமே…
காற்றோடு குழலின் நாதமே…

BGM

பெண் : வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள்…
கண்டாடும் எனதுள்ளம் பிருந்தாவனம்…
வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள்…
கண்டாடும் எனதுள்ளம் ப்ருந்தாவனம்…

பெண் : விண் மீன்கள் வானில் விளக்கேற்றும் நேரம்…
கண்ணா உன் மார்பில் விழி மூட வேண்டும்…
தங்கச் சிலைக்கு அந்திக் கலைக்கு…
விளக்கம் அளிக்க அழைத்த பொழுதினில்…

பெண் : காற்றோடு குழலின் நாதமே…
கண்ணன் வரும் நேரம்…
யமுனைக் கரை ஓரம்…
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து…
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது…

பெண் : காற்றோடு குழலின் நாதமே…

BGM

பெண் : பாதங்கள் ஜதியில் ஆடும்…
தகதிமி தகவென்று…

BGM

பெண் : பாவங்கள் விழியில் ஆடும்…
தகதக தகவென்று…

BGM

பெண் : பாதங்கள் ஜதியில் ஆடும்…
தகதிமி தகவென்று…
பாவங்கள் விழியில் ஆடும்…
தகதக தகவென்று…

பெண் : நயனம் ஆடும் ஒரு நவரச நாடகம்…
நளினமாக இனி அரங்கேறும்…

BGM

பெண் : நயனம் ஆடும் ஒரு நவரச நாடகம்…
நளினமாக இனி அரங்கேறும்…

BGM

பெண் : ஸரிக நிஸரி நிஸரி கரிஸநி ரிஸநிஸா…
பதநி ஸககக ரிரி ஸஸஸ நிநிநி ததத…
பநிரிரி ஸஸஸ நிநிநி ததத பதநி…

பெண் : கார் கொண்ட மழை மேகம்…
வேர் கொண்டு போகும்…
கையோடு உனை வந்து வரவேற்கவே…

பெண் : கார் கொண்ட மழை மேகம்…
வேர் கொண்டு போகும்…
கையோடு உனை வந்து வரவேற்கவே…

பெண் : கணம் கூட இன்று யுகம் ஆனதென்ன…
மருந்தான நீயே நோயானதென்ன…
இந்தத் தவிப்பும் இந்தத் துடிப்பும்…
எனக்கு எதற்கு தணிக்க இனி வரும்…

பெண் : காற்றோடு குழலின் நாதமே…
கண்ணன் வரும் நேரம்…
யமுனைக் கரை ஓரம்…
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து…
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது…

பெண் : காற்றோடு குழலின் நாதமே…


Notes : Kaatrodu Kuzhalin Song Lyrics in Tamil. This Song from Kodai Mazhai (1986). Song Lyrics penned by Pulamaipithan. காற்றோடு குழலின் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top