பொம்முக்குட்டி அம்மாவுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஎன் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

Bommukutty Ammavukku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ…
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ…
பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ…
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ…

ஆண் : வாராமல் வந்த செல்வம்…
வீடேறி வந்த தெய்வம்…
தேடாமல் தேடி வந்த தாழம்பூச்சரம்…

ஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ…
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ…

—BGM—

ஆண் : ரெண்டு தாய்க்கொரு பிள்ளை…
என்று வாழ்ந்திடும் முல்லை…
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீ அறிவாயோ…

ஆண் : ரெண்டு தாய்க்கொரு பிள்ளை…
என்று வாழ்ந்திடும் முல்லை…
உன்னை யார் சுமந்தாரோ…
உண்மை நீ அறிவாயோ…

ஆண் : உன்னை நினைத்து உருகிடும் மாது…
உன்னை பிரிய மனம் துணியாது…
பூவே பனிப்பூவே நீதான் இல்லாது…
பார்வை எங்கள் பார்வை தூக்கம் கொள்ளாது…
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ…

ஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ…
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ…

—BGM—

ஆண் : பெற்ற தாய் படும்பாடு பிள்ளை தானறியாது…
இது காக்கையின் கூடு…
இங்கே பூங்குயில் பேடு…

ஆண் : பெற்ற தாய் படும்பாடு பிள்ளை தானறியாது…
இது காக்கையின் கூடு…
இங்கே பூங்குயில் பேடு…

ஆண் : வந்த உறவை இவள் விடுவாளோ…
சொந்த உறவை அவள் தருவாளோ…
பாசம் உயிர்நேசம் வாழும் நெஞ்சோடு…
பாடும் உறவாடும் ஜீவன் உன்னோடு…
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ…

ஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ…
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ…

ஆண் : வாராமல் வந்த செல்வம்…
வீடேறி வந்த தெய்வம்…
தேடாமல் தேடி வந்த தாழம்பூச்சரம்…

ஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ…
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ…


Notes : Bommukutty Ammavukku Song Lyrics in Tamil. This Song from En Bommukutty Ammavukku (1988). Song Lyrics penned by Vaali. பொம்முக்குட்டி அம்மாவுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading