நீ போகும் பாதையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாகிராமத்து மின்னல்

Nee Pogum Paadhayil Song Lyrics in Tamil


ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…

BGM

ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…

ஆண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாடி மானே…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாடி மானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா…
நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா…

பெண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாங்க ராசா…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாங்க ராசா…

BGM

ஆண் : வானத்துல பூத்திருக்கும் வைரமணிப் பூ எடுத்து…
மாலை ஒண்ணு நான் தொடுத்து ஓங்கழுத்தில் போடவா…
பாதத்துக்கு ஓர் கொலுசு வைரத்துல போடவா…
மீதம் வரும் வைரங்கள மின்மினிக்குச் சூடவா…

பெண் : ஆகாயத்தில் கோட்டை கட்டி…
அரண்மனையை கட்டி அங்கே…
காவலுக்கு தெய்வங்கள போட உன்னால் ஆகாதையா…

பெண் : ஆசை கொண்டது அன்பினாலதான்…
அன்புதானே நம் செல்வம்…
அந்த அன்பு ஒண்ணுதான் நம்மச் சேர்த்தது…

பெண் : போதும் போதும் ராசா…
அது ஒண்ணு போதும் ராசா…

ஆண் : போதும் போதும் மானே…
அது ஒண்ணு போதும் மானே…

BGM

ஆண் : பள்ளிக்கூடம் போனதில்லை…
பாடமும் படிச்சதில்லை…
சொல்லி யாரும் கொடுக்கவில்லை…
சொந்த புத்தி ஏதும் இல்லை…

ஆண் : என்னைப் போல ஆம்பளைய…
பாத்துக் கொள்ள யார் இருக்கா…
ஒன்னைப் போல பொம்பளைக்கு…
எத்தனையோ பேர் இருக்கா…

பெண் : சொன்னதையே சொல்லும் அய்யா…
பச்சக் கிளிப்பிள்ளை அது…
சொன்னதை நீ சொல்வதில்ல…
ரெட்டச் சுழிப்பிள்ளை இது…

பெண் : அறிவுக்காகத்தான் பாடம் கேக்கணும்…
அன்பு கொள்ள அது வேணாமே…

பெண் : நல்ல மாலை வந்தது வேளை வந்தது…
மனசு சேர்ந்ததாலே நம்ம மனசு சேர்ந்ததாலே…

ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…

பெண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாங்க ராசா…

ஆண் : பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாடி மானே…


Notes : Nee Pogum Paadhayil Song Lyrics in Tamil. This Song from Gramatthu Minnal (1987). Song Lyrics penned by Gangai Amaran. நீ போகும் பாதையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading