ஏழிசை கீதமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்ரவீந்திரன்ரசிகன் ஒரு ரசிகை

Ezhisai Geethame Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்…
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்…
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏதோ ராகம் எனது குரலின் வழி…
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர…
கேட்கும் யாரும் உருகி உருகி விழ…
காதில் பாயும் புதிய கவிதை இது…

ஆண் : அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர…
நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ…
ஏதோ நாளெல்லாம் சந்தோஷம் நெஞ்செல்லாம் சங்கீதம்…
உயிரேஉயிரே…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…

BGM

ஆண் : கையில் ஏந்தும் மதுவில் மயக்கமுண்டு…
கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு…
நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு…
போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு…

ஆண் : உறவு எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை…
தனிமை கொடுமையில்லை…
இனிமை இனிமை இதுதான் நான்தான்…
பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத மனிதன் மனிதன்…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்…
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்…
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…


Notes : Ezhisai Geethame Song Lyrics in Tamil. This Song from Rasigan Oru Rasigai (1986). Song Lyrics penned by Vaali. ஏழிசை கீதமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading