முதல் முதலாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & சாதனா சர்கம்தேவாஎங்கள் அண்ணா

Mudhan Mudhalaga Song Lyrics in Tamil


குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…

BGM

ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

ஆண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

BGM

ஆண் : மார்கழியின் ராத்திரியில் மனசுக்குள் மல்லிகைப்பூ…
மூடி வைத்த உதடுகளில் முத்தங்களின் முணுமுணுப்பு…

பெண் : தூக்கத்தை தூக்கத்தை தூக்கிலே போடணும்…
கனவிலும் வந்து நீ இம்சைகள் செய்கிறாய்…

ஆண் : உன் ஜன்னல்களை மூடாதே…
என் தென்றலுக்கு வேர்க்கிறதே…

பெண் : என் கைப்பிடிக்க வருவாயா…
கை ரேகை என்னை கேட்கிறதே…

ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

BGM

குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…

பெண் : தோற்கவில்லை தோகை மயில்…
இத்தனை நாள் ஏங்கியதே…
மேகத்திடம் அடம் பிடித்து…
மழைத் துளி வாங்கியதே…

ஆண் : ஏக்கங்கள் தீர்ந்ததா என்னுயிர்க்காதலி…
உன்னிடம் சாய்ந்ததே இந்த என் ஆறடி…

பெண் : உன் சட்டைக்குள்ளே இடம் தேடி…
என் மூச்சுக் காற்று அலைகிறதே…

ஆண் : உன் சேலை வாசம் வந்த பின்னே…
என் காலைகளும் விடிகிறதே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

பெண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…


Notes : Mudhan Mudhalaga Song Lyrics in Tamil. This Song from Engal Anna (2004). Song Lyrics penned by Thamarai. முதல் முதலாக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading