யாா் அவள் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமுகமது இர்பான் அலிஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Yaar Aval Yaaro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும்…
மழை தானோ…
நாளும் அவள் இல்லை எனில்…
இங்கே பிழைதானோ

ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும்…
நான் தூங்கினேன்…
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்…
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி…

—BGM—

ஆண் : ஓா் ஆகாய தூரம் நான் போகின்ற போதும்…
என் பக்கத்தில் நிற்பாள் அவள்…

ஆண் : நான் வீழ்கின்ற நேரம் பொன் கை ரெண்டும் நீளும்…
தன் கக்கத்தில் வைப்பாள் அவள்…

ஆண் : நான் காலைப் பனி நீ புல்லின் நுனி…
நான் வீழாமல் நீ தாங்கினாய்…
நான் கேளா ஒலி நீதானே மொழி…
என் ஓசைக்கு பொருளாகிறாய்… ஓஹோ ஹோ…

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

—BGM—

ஆண் : நான் தூங்காத போதும் என் துன்பத்தின் போதும்…
என் அன்னை போல் காத்தாய் எனை…

ஆண் : பொன் வான் எங்கும் நீயே விண்மீன் ஆகின்றாயே…
நான் அண்ணாந்து பாா்ப்பேன் உனை…

ஆண் : நான் கேட்கும் வரம் என் வாழ்நாள் தவம்…
உன் அன்பன்றி வேறேதடி…
ஓ பாரா முகம் நீ காட்டும் கணம்…
நான் கூறாமல் சாவேனடி… ஓஹோஹோ…

—BGM—

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும்…
மழை தானோ…
நாளும் அவள் இல்லை எனில்…
இங்கே பிழைதானோ…

ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும்…
நான் தூங்கினேன்…
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்…
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி…

—BGM—


Notes : Yaar Aval Yaaro Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. யாா் அவள் யாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading