சோலை மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாபாட்டு வாத்தியார்

Solai Malare Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே…
ஞானம் உண்டு பாட கானக்குயிலே…
உன்னைப் போல நானும் கூவி திரிவேன்…
உச்சி மலை மீது தாவி திரிவேன்…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
சோலை மலரே…

—BGM—

ஆண் : வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழர் நாடு…
வத்தாத பாட்டுச் செல்வம் வாழ்ந்திடும் வீடு…

ஆண் : தென்னாட்டு கிராமம் எங்கும்…
தென்றல் எனும் காற்று…
தெம்மாங்கு பாடிச் செல்லும்…
தாளமும் போட்டு…

ஆண் : ஏத்தம் இட்டுப் பாட பாட்டும் இருக்கு…
ஏரு கட்டி பாட பாட்டும் இருக்கு…
நாத்து நட்டுப் பாட பாட்டும் இருக்கு…
பாட்டுத்தானே பாட்டன் சொத்து நமக்கு…
இந்நாளும் எந்நாளும் நம் செல்வங்கள்… ஓ…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே…
ஞானம் உண்டு பாட கானக்குயிலே…
உன்னைப் போல நானும் கூவி திரிவேன்…
உச்சி மலை மீது தாவி திரிவேன்…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…

—BGM—

ஆண் : செவ்வானம் பூமியெல்லாம் நல்வரவு கூறும்…
சங்கீதம் பாடி கொண்டு நான் வரும் நேரம்…

ஆண் : சில்லென்று வாடை வந்து என்னைத் தொட்டு ஓடும்…
சிங்காரச்சோலை என் மேல் பூ மழைத் தூவும்…

ஆண் : மேகம் இந்த ஊரில் மண்ணில் வருது…
மோகம் கொண்ட மண்ணை முத்தமிடுது…
முத்தம் கொண்டதாலே முத்து வருது…
மொட்டுகளை பார்த்தால் மெட்டு வருது…
சிட்டுப்போல் பூஞ்சிட்டுப் போல் என் எண்ணங்கள்… ஓஓ…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே…
ஞானம் உண்டு பாட கானக்குயிலே…
உன்னைப் போல நானும் கூவி திரிவேன்…
உச்சி மலை மீது தாவி திரிவேன்…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
சோலை மலரே…


Notes : Solai Malare Song Lyrics in Tamil. This Song from Pattu Vaathiyar (1995). Song Lyrics penned by Vaali. சோலை மலரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading