நீதானே நாள்தோறும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & சுவர்ணலதாஇளையராஜாபாட்டு வாத்தியார்

Neethane Naal Thorum Song Lyrics in Tamil


BGM

பெண் : நீதானே நாள்தோறும்…
நான் பாட காரணம்…
நீ எந்தன் நெஞ்சோடு…
நின்றாடும் தோரணம்…

BGM

பெண் : நீதானே நாள்தோறும்…
நான் பாட காரணம்…
நீ எந்தன் நெஞ்சோடு…
நின்றாடும் தோரணம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீயின்றி நான் பாட…
வேறேது கீர்த்தனம்…
உறவு ராகம் இதுவோ…
இது உதயமாகி வருதோ…

பெண் : உனது தாகம் விளைய…
இது அடிமையான மனதோ…

பெண் : நீதானே நாள்தோறும்…
நான் பாட காரணம்…
நீ எந்தன் நெஞ்சோடு…
நின்றாடும் தோரணம்…

BGM

பெண் : ஊற்றுப் போலவே…
பாட்டு வந்ததே…
உன்னைக் கண்டதாலே…

பெண் : பாவை என்னையே…
பாட வைத்ததே…
அன்பு கொண்டதாலே…

பெண் : உன்னைப் பார்க்கையில்…
என்னைப் பார்க்கிறேன்…
உந்தன் காந்தக் கண்ணில்…

பெண் : நன்றி சொல்லியே…
என்னை சேர்க்கிறேன்…
இன்று உந்தன் கையில்…

பெண் : எந்தன் ஆவல் தீருமோ…
உந்தன் பாத பூஜையில்…
இந்த ஜீவன் கூடுமோ…
உந்தன் நாத வேள்வியில்…

பெண் : எண்ணம் நீ வண்ணம் நீ…
இங்கு நீ எங்கும் நீ…
வேதம் போலே உந்தன் பேரை…
ஓதும் உள்ளம் தான்…

பெண் : நீதானே நாள்தோறும்…
நான் பாட காரணம்…
நீ எந்தன் நெஞ்சோடு…
நின்றாடும் தோரணம்…

BGM

பெண் : நாத வெள்ளமும் கீத வெள்ளமும்…
வாரித் தந்த தேவி…
நாளும் என்னையே வாழவைக்கவே…
வாசல் வந்ததே நீ…

ஆண் : வீணை தன்னையே கையில் ஏந்திடும்…
ஞான வள்ளியே நீ…
வெள்ளைத் தாமரை பூவில் மேவியே…
ஆளும் செல்வியே நீ…

ஆண் : எந்தன் வாக்கு மேடையில்…
இன்று ஆடும் வாணியே…
எந்தன் நாளும் மேன்மையில்…
என்னை ஏற்றும் ஏணியே…

ஆண் : அன்னை நீ அல்லவா…
இன்னும் நான் சொல்லவா…
நீதான் தெய்வம் நீதான் செல்வம்…
கீதம் சங்கீதம்…

பெண் : நீதானே நாள்தோறும்…
நான் பாட காரணம்…
நீ எந்தன் நெஞ்சோடு…
நின்றாடும் தோரணம்…

பெண் : நீயின்றி நான் பாட…
வேறேது கீர்த்தனம்…
உறவு ராகம் இதுவோ…
இது உதயமாகி வருதோ…

பெண் : உனது தாகம் விளைய…
இது அடிமையான மனதோ…

பெண் : நீதானே நாள்தோறும்…
நான் பாட காரணம்…
நீ எந்தன் நெஞ்சோடு…
நின்றாடும் தோரணம்…


Notes : Neethane Naal Thorum Song Lyrics in Tamil. This Song from Pattu Vaathiyar (1995). Song Lyrics penned by Vaali. நீதானே நாள்தோறும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading